Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧

Qur'an Surah An-Nisa Verse 1

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاۤءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاۤءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا (النساء : ٤)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind!
மனிதர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
Fear
அஞ்சுங்கள்
rabbakumu
رَبَّكُمُ
your Lord
உங்கள் இறைவனை
alladhī
ٱلَّذِى
the One Who
எவன்
khalaqakum
خَلَقَكُم
created you
உங்களைப் படைத்தான்
min nafsin
مِّن نَّفْسٍ
from a soul
ஓர் ஆன்மாவிலிருந்து
wāḥidatin
وَٰحِدَةٍ
single
ஒரே
wakhalaqa
وَخَلَقَ
and created
இன்னும் படைத்தான்
min'hā
مِنْهَا
from it
அதிலிருந்து
zawjahā
زَوْجَهَا
its mate
அவருடைய மனைவியை
wabatha
وَبَثَّ
and dispersed
இன்னும் பரப்பினான்
min'humā
مِنْهُمَا
from both of them
அவ்விருவரிலிருந்து
rijālan
رِجَالًا
men
ஆண்களை
kathīran
كَثِيرًا
many
அதிகமான
wanisāan
وَنِسَآءًۚ
and women
இன்னும் பெண்களை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
அஞ்சுங்கள்
l-laha alladhī
ٱللَّهَ ٱلَّذِى
Allah (through) Whom
அல்லாஹ்வை/எவன்
tasāalūna
تَسَآءَلُونَ
you ask
உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள்
bihi
بِهِۦ
[with it]
அவனைக்கொண்டு
wal-arḥāma
وَٱلْأَرْحَامَۚ
and the wombs
இன்னும் இரத்தபந்தங்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்கள் மீது
raqīban
رَقِيبًا
Ever-Watchful
கண்காணிப்பாளனாக

Transliteration:

Yaaa aiyuhan naasut taqoo Rabbakumul lazee khalaqakum min nafsinw waahidatinw wa khalaqa minhaa zawjahaa wa bas sa minhumaa rijaalan kaseeranw wa nisaaa'aa; wattaqul laahallazee tasaaa 'aloona bihee wal arhaam; innal laaha kaana 'alaikum Raqeeba (QS. an-Nisāʾ:1)

English Sahih International:

O mankind, fear your Lord, who created you from one soul and created from it its mate and dispersed from both of them many men and women. And fear Allah, through whom you ask one another, and the wombs. Indeed Allah is ever, over you, an Observer. (QS. An-Nisa, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர் களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧)

Jan Trust Foundation

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். அல்லாஹ்வையும் இரத்த பந்தங்களையும் அஞ்சுங்கள். அவனைக் கொண்டே உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.