قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِيْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣١
- qul
- قُلْ
- கூறுவீராக
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- tuḥibbūna
- تُحِبُّونَ
- நேசிப்பீர்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- fa-ittabiʿūnī
- فَٱتَّبِعُونِى
- என்னைப் பின்பற்றுங்கள்
- yuḥ'bib'kumu
- يُحْبِبْكُمُ
- உங்களைநேசிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- wayaghfir lakum
- وَيَغْفِرْ لَكُمْ
- இன்னும் மன்னிப்பான்/ உங்களுக்கு
- dhunūbakum
- ذُنُوبَكُمْۗ
- உங்கள் பாவங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௧)Tafseer
قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ ٣٢
- qul
- قُلْ
- கூறுவீராக
- aṭīʿū
- أَطِيعُوا۟
- கீழ்ப்படியுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- wal-rasūla
- وَٱلرَّسُولَۖ
- இன்னும் தூதருக்கு
- fa-in tawallaw
- فَإِن تَوَلَّوْا۟
- (நீங்கள்) திரும்பினால்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- நேசிக்க மாட்டான்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை". ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௨)Tafseer
۞ اِنَّ اللّٰهَ اصْطَفٰىٓ اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرَانَ عَلَى الْعٰلَمِيْنَۙ ٣٣
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- iṣ'ṭafā
- ٱصْطَفَىٰٓ
- தேர்ந்தெடுத்தான்
- ādama wanūḥan
- ءَادَمَ وَنُوحًا
- ஆதமை/இன்னும் நூஹை
- waāla
- وَءَالَ
- இன்னும் குடும்பத்தை
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீமின்
- waāla ʿim'rāna
- وَءَالَ عِمْرَٰنَ
- இன்னும் இம்ரானின் குடும்பத்தை
- ʿalā l-ʿālamīna
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தாரை விட
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௩)Tafseer
ذُرِّيَّةً ۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۚ ٣٤
- dhurriyyatan
- ذُرِّيَّةًۢ
- ஒரு சந்ததி
- baʿḍuhā
- بَعْضُهَا
- அதில் சிலர்
- min baʿḍin
- مِنۢ بَعْضٍۗ
- சிலரைச் சேர்ந்தவர்
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- samīʿun
- سَمِيعٌ
- நன்கு செவியுறுபவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௪)Tafseer
اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرَانَ رَبِّ اِنِّيْ نَذَرْتُ لَكَ مَا فِيْ بَطْنِيْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّيْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٣٥
- idh qālati
- إِذْ قَالَتِ
- கூறியசமயம்
- im'ra-atu
- ٱمْرَأَتُ
- மனைவி
- ʿim'rāna
- عِمْرَٰنَ
- இம்ரானுடைய
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- nadhartu
- نَذَرْتُ
- நேர்ச்சை செய்தேன்
- laka
- لَكَ
- உனக்கு
- mā
- مَا
- எது
- fī baṭnī
- فِى بَطْنِى
- என் வயிற்றில்
- muḥarraran
- مُحَرَّرًا
- அர்ப்பணிக்கப்பட்டதாக
- fataqabbal
- فَتَقَبَّلْ
- ஆகவே ஏற்றுக்கொள்
- minnī
- مِنِّىٓۖ
- என்னிடமிருந்து
- innaka anta
- إِنَّكَ أَنتَ
- நிச்சயமாக நீதான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- மிக அறிந்தவன்
இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறியபின், ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௫)Tafseer
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّيْ وَضَعْتُهَآ اُنْثٰىۗ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْۗ وَلَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى ۚ وَاِنِّيْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّيْٓ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ ٣٦
- falammā waḍaʿathā
- فَلَمَّا وَضَعَتْهَا
- போது/அவளைப் பெற்றெடுத்தாள்
- qālat
- قَالَتْ
- கூறினாள்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- waḍaʿtuhā
- وَضَعْتُهَآ
- அவளைப் பெற்றெடுத்தேன்
- unthā
- أُنثَىٰ
- ஒரு பெண்ணாக
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bimā waḍaʿat
- بِمَا وَضَعَتْ
- அவள் பெற்றெடுத்ததை
- walaysa
- وَلَيْسَ
- இன்னும் இல்லை
- l-dhakaru
- ٱلذَّكَرُ
- ஆண்
- kal-unthā
- كَٱلْأُنثَىٰۖ
- பெண்ணைப்போன்று
- wa-innī
- وَإِنِّى
- இன்னும் நிச்சயமாக நான்
- sammaytuhā
- سَمَّيْتُهَا
- அவளுக்குப் பெயரிட்டேன்
- maryama
- مَرْيَمَ
- மர்யம்
- wa-innī
- وَإِنِّىٓ
- இன்னும் நிச்சயமாக நான்
- uʿīdhuhā
- أُعِيذُهَا
- அவளை பாதுகாக்கிறேன்
- bika
- بِكَ
- உன்னைக்கொண்டு
- wadhurriyyatahā
- وَذُرِّيَّتَهَا
- இன்னும் அவளுடைய சந்ததியை
- mina l-shayṭāni
- مِنَ ٱلشَّيْطَٰنِ
- இருந்து/ஷைத்தான்
- l-rajīmi
- ٱلرَّجِيمِ
- விரட்டப்பட்டவன்
அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்" என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு "மர்யம்" எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௬)Tafseer
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًاۖ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ۗ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ۚ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَكِ هٰذَا ۗ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٣٧
- fataqabbalahā
- فَتَقَبَّلَهَا
- ஆகவேஅவளைஏற்றான்
- rabbuhā
- رَبُّهَا
- அவளுடைய இறைவன்
- biqabūlin
- بِقَبُولٍ
- ஏற்பாக
- ḥasanin
- حَسَنٍ
- அழகியது
- wa-anbatahā
- وَأَنۢبَتَهَا
- இன்னும் அவளை வளர்த்தான்
- nabātan
- نَبَاتًا
- வளர்ப்பாக
- ḥasanan
- حَسَنًا
- அழகியது
- wakaffalahā
- وَكَفَّلَهَا
- இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான்
- zakariyyā
- زَكَرِيَّاۖ
- ஸகரிய்யாவை
- kullamā dakhala
- كُلَّمَا دَخَلَ
- நுழையும் போதெல்லாம்
- ʿalayhā
- عَلَيْهَا
- அவளிடம்
- zakariyyā
- زَكَرِيَّا
- ஸகரிய்யா
- l-miḥ'rāba
- ٱلْمِحْرَابَ
- மாடத்தில்
- wajada
- وَجَدَ
- பெற்றார்
- ʿindahā
- عِندَهَا
- அவளிடம்
- riz'qan
- رِزْقًاۖ
- ஓர் உணவை
- qāla
- قَالَ
- கூறினார்
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- மர்யமே!
- annā
- أَنَّىٰ
- எங்கிருந்து?
- laki
- لَكِ
- உனக்கு
- hādhā
- هَٰذَاۖ
- இது
- qālat
- قَالَتْ
- கூறினாள்
- huwa
- هُوَ
- இது
- min ʿindi l-lahi
- مِنْ عِندِ ٱللَّهِۖ
- அல்லாஹ்விடமிருந்து
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yarzuqu
- يَرْزُقُ
- வழங்குவான்
- man yashāu
- مَن يَشَآءُ
- எவர்/நாடுகிறான்
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- கணக்கின்றி
ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௭)Tafseer
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ ۚ قَالَ رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَاۤءِ ٣٨
- hunālika
- هُنَالِكَ
- அவ்விடத்தில்
- daʿā
- دَعَا
- பிரார்த்தித்தார்
- zakariyyā
- زَكَرِيَّا
- ஸகரிய்யா
- rabbahu
- رَبَّهُۥۖ
- அவரின் இறைவனை
- qāla
- قَالَ
- கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- hab lī
- هَبْ لِى
- எனக்கு தா!
- min ladunka
- مِن لَّدُنكَ
- உன் புறத்திலிருந்து
- dhurriyyatan
- ذُرِّيَّةً
- ஒரு சந்ததியை
- ṭayyibatan innaka
- طَيِّبَةًۖ إِنَّكَ
- நல்லது/நிச்சயமாக நீ
- samīʿu
- سَمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-duʿāi
- ٱلدُّعَآءِ
- பிரார்த்தனை
(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௮)Tafseer
فَنَادَتْهُ الْمَلٰۤىِٕكَةُ وَهُوَ قَاۤىِٕمٌ يُّصَلِّيْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًاۢ بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ ٣٩
- fanādathu
- فَنَادَتْهُ
- ஆகவேஅழைத்தா(ர்க)ள்
- l-malāikatu
- ٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- wahuwa qāimun
- وَهُوَ قَآئِمٌ
- அவர் நின்று தொழுதுகொண்டிருக்க
- yuṣallī
- يُصَلِّى
- தொழுகிறார்
- fī l-miḥ'rābi
- فِى ٱلْمِحْرَابِ
- மாடத்தில்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yubashiruka
- يُبَشِّرُكَ
- உமக்கு நற்செய்தி கூறுகிறான்
- biyaḥyā
- بِيَحْيَىٰ
- யஹ்யாவைக் கொண்டு
- muṣaddiqan
- مُصَدِّقًۢا
- உண்மைப்படுத்துபவராக
- bikalimatin
- بِكَلِمَةٍ
- ஒரு வாக்கியத்தை
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wasayyidan
- وَسَيِّدًا
- இன்னும் தலைவராக
- waḥaṣūran
- وَحَصُورًا
- இன்னும் இன்பத்தைத் துறந்தவராக
- wanabiyyan
- وَنَبِيًّا
- இன்னும் நபியாக
- mina l-ṣāliḥīna
- مِّنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லோரைச்சேர்ந்தவர்
ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௯)Tafseer
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَاَتِيْ عَاقِرٌ ۗ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَاۤءُ ٤٠
- qāla
- قَالَ
- கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- annā
- أَنَّىٰ
- எவ்வாறு
- yakūnu
- يَكُونُ
- உண்டாகும்
- lī
- لِى
- எனக்கு
- ghulāmun
- غُلَٰمٌ
- ஒரு குழந்தை
- waqad balaghaniya
- وَقَدْ بَلَغَنِىَ
- என்னையோ அடைந்து விட்டிருக்க
- l-kibaru
- ٱلْكِبَرُ
- முதுமை
- wa-im'ra-atī
- وَٱمْرَأَتِى
- இன்னும் என்மனைவியோ
- ʿāqirun
- عَاقِرٌۖ
- மலடி
- qāla
- قَالَ
- கூறினான்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yafʿalu
- يَفْعَلُ
- செய்வான்
- mā
- مَا
- எதை
- yashāu
- يَشَآءُ
- நாடுகிறான்
(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௪௦)Tafseer