Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௦

Qur'an Surah Ali 'Imran Verse 40

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَاَتِيْ عَاقِرٌ ۗ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَاۤءُ (آل عمران : ٣)

qāla
قَالَ
He said
கூறினார்
rabbi
رَبِّ
"My Lord
என் இறைவா!
annā
أَنَّىٰ
how
எவ்வாறு
yakūnu
يَكُونُ
can (there) be
உண்டாகும்
لِى
for me
எனக்கு
ghulāmun
غُلَٰمٌ
a son
ஒரு குழந்தை
waqad balaghaniya
وَقَدْ بَلَغَنِىَ
and verily has reached me
என்னையோ அடைந்து விட்டிருக்க
l-kibaru
ٱلْكِبَرُ
[the] old age
முதுமை
wa-im'ra-atī
وَٱمْرَأَتِى
and my wife
இன்னும் என்மனைவியோ
ʿāqirun
عَاقِرٌۖ
(is) [a] barren?"
மலடி
qāla
قَالَ
He said
கூறினான்
kadhālika
كَذَٰلِكَ
"Thus;
இவ்வாறு
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yafʿalu
يَفْعَلُ
does
செய்வான்
مَا
what
எதை
yashāu
يَشَآءُ
He wills"
நாடுகிறான்

Transliteration:

Qaala Rabbi annaa yakoonu lee ghulaamunw wa qad balaghaniyal kibaru wamraatee 'aaqirun qaala kazaalikal laahu yaf'alu maa yashaaa' (QS. ʾĀl ʿImrān:40)

English Sahih International:

He said, "My Lord, how will I have a boy when I have reached old age and my wife is barren?" He [the angel] said, "Such is Allah; He does what He wills." (QS. Ali 'Imran, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௪௦)

Jan Trust Foundation

அவர் கூறினார்| “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும். என்னையோ முதுமை அடைந்து விட்டது. என் மனைவியோ மலடி" என்று (ஸகரிய்யா) கூற, "(காரியம்) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்" என்று (அல்லாஹ் பதில்) கூறினான்.