Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 3

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௨௧

اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِحَقٍّۖ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَأْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍ ٢١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakfurūna
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wayaqtulūna
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
l-nabiyīna
ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களை
bighayri ḥaqqin
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
wayaqtulūna
وَيَقْتُلُونَ
இன்னும் கொலை செய்கிறார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yamurūna
يَأْمُرُونَ
ஏவுகிறார்கள்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِ
நீதத்தை
mina l-nāsi
مِنَ ٱلنَّاسِ
மக்களில்
fabashir'hum
فَبَشِّرْهُم
அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக
biʿadhābin
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
alīmin
أَلِيمٍ
துன்புறுத்தக்கூடியது
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௧)
Tafseer
௨௨

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ ٢٢

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ḥabiṭat
حَبِطَتْ
அழிந்தன
aʿmāluhum
أَعْمَٰلُهُمْ
இவர்களுடைய செயல்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
இன்னும் மறுமையில்
wamā
وَمَا
இன்னும் இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்களில் ஒருவரும்
இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௨)
Tafseer
௨௩

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ ٢٣

alam tara
أَلَمْ تَرَ
நீர் கவனிக்கவில்லையா?
ilā alladhīna ūtū
إِلَى ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப் பட்டவர்களை
naṣīban
نَصِيبًا
ஒரு பகுதி
mina l-kitābi
مِّنَ ٱلْكِتَٰبِ
வேதத்தில்
yud'ʿawna
يُدْعَوْنَ
அழைக்கப் படுகிறார்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
kitābi
كِتَٰبِ
வேதம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
liyaḥkuma
لِيَحْكُمَ
அது தீர்ப்பளிப்பதற்கு
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
thumma
ثُمَّ
பிறகு
yatawallā
يَتَوَلَّىٰ
விலகிவிடுகிறார்(கள்)
farīqun
فَرِيقٌ
ஒரு பிரிவினர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்கள்
(நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்துவைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௩)
Tafseer
௨௪

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّآ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ ۖ وَّغَرَّهُمْ فِيْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٢٤

dhālika
ذَٰلِكَ
இது
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qālū
قَالُوا۟
கூறினார்கள்
lan tamassanā
لَن تَمَسَّنَا
எங்களை அறவே தீண்டாது
l-nāru
ٱلنَّارُ
நரக நெருப்பு
illā ayyāman
إِلَّآ أَيَّامًا
தவிர/நாட்கள்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۖ
எண்ணப்பட்டவை
wagharrahum
وَغَرَّهُمْ
இன்னும் ஏமாற்றிவிட்டது அவர்களை
fī dīnihim
فِى دِينِهِم
அவர்களுடைய மார்க்கத்தில்
mā kānū
مَّا كَانُوا۟
எது/இருந்தார்கள்
yaftarūna
يَفْتَرُونَ
பொய் கூறுவார்கள்
இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௪)
Tafseer
௨௫

فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِۗ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٢٥

fakayfa
فَكَيْفَ
எப்படி?
idhā jamaʿnāhum
إِذَا جَمَعْنَٰهُمْ
நாம் அவர்களை ஒன்றுசேர்த்தால்
liyawmin
لِيَوْمٍ
ஒரு நாளில்
لَّا
அறவே இல்லை
rayba fīhi
رَيْبَ فِيهِ
சந்தேகம்/அதில்
wawuffiyat
وَوُفِّيَتْ
இன்னும் முழுமையாக அளிக்கப்பட்டால்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
எல்லா ஆத்மா
مَّا
எது
kasabat
كَسَبَتْ
அது செய்தது
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
(நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௫)
Tafseer
௨௬

قُلِ اللهم مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَاۤءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاۤءُۖ وَتُعِزُّ مَنْ تَشَاۤءُ وَتُذِلُّ مَنْ تَشَاۤءُ ۗ بِيَدِكَ الْخَيْرُ ۗ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٦

quli
قُلِ
கூறுவீராக
l-lahuma
ٱللَّهُمَّ
அல்லாஹ்வே
mālika
مَٰلِكَ
உரிமையாளனே
l-mul'ki
ٱلْمُلْكِ
ஆட்சிகளுக்கெல்லாம்
tu'tī
تُؤْتِى
கொடுக்கிறாய்
l-mul'ka
ٱلْمُلْكَ
ஆட்சியை
man
مَن
எவர்
tashāu
تَشَآءُ
நாடுகிறாய்
watanziʿu
وَتَنزِعُ
இன்னும் பறிக்கிறாய்
l-mul'ka
ٱلْمُلْكَ
ஆட்சியை
mimman
مِمَّن
எவரிடமிருந்து
tashāu
تَشَآءُ
நாடுகிறாய்
watuʿizzu
وَتُعِزُّ
இன்னும் கண்ணியப் படுத்துகிறாய்
man
مَن
எவர்
tashāu
تَشَآءُ
நாடுகிறாய்
watudhillu
وَتُذِلُّ
இன்னும் இழிவுபடுத்துகிறாய்
man
مَن
எவர்
tashāu
تَشَآءُۖ
நாடுகிறாய்
biyadika
بِيَدِكَ
உன் கையில்தான்
l-khayru
ٱلْخَيْرُۖ
நன்மை
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௬)
Tafseer
௨௭

تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ ٢٧

tūliju
تُولِجُ
நுழைக்கிறாய்
al-layla
ٱلَّيْلَ
இரவை
fī l-nahāri
فِى ٱلنَّهَارِ
பகலில்
watūliju
وَتُولِجُ
இன்னும் நுழைக்கிறாய்
l-nahāra
ٱلنَّهَارَ
பகலை
fī al-layli
فِى ٱلَّيْلِۖ
இரவில்
watukh'riju
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
l-ḥaya
ٱلْحَىَّ
உயிருள்ளதை
mina l-mayiti
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
watukh'riju
وَتُخْرِجُ
இன்னும் வெளியாக்குகிறாய்
l-mayita
ٱلْمَيِّتَ
இறந்ததை
mina l-ḥayi
مِنَ ٱلْحَىِّۖ
உயிருள்ளதிலிருந்து
watarzuqu
وَتَرْزُقُ
இன்னும் வழங்குகிறாய்
man tashāu
مَن تَشَآءُ
நீ நாடியவருக்கு
bighayri ḥisābin
بِغَيْرِ حِسَابٍ
கணக்கின்றி
நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்." ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௭)
Tafseer
௨௮

لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِيْ شَيْءٍ اِلَّآ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ۗ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ۗ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ ٢٨

lā yattakhidhi
لَّا يَتَّخِذِ
எடுத்துக் கொள்ள வேண்டாம்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
awliyāa
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
min dūni l-mu'minīna
مِن دُونِ ٱلْمُؤْمِنِينَۖ
நம்பிக்கையாளர்களைத் தவிர
waman
وَمَن
இன்னும் எவர்
yafʿal dhālika
يَفْعَلْ ذَٰلِكَ
இதை செய்வார்
falaysa
فَلَيْسَ
அவர் இல்லை
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
fī shayin
فِى شَىْءٍ
எதிலும்
illā
إِلَّآ
தவிர
an tattaqū
أَن تَتَّقُوا۟
நீங்கள் அஞ்சுவது
min'hum
مِنْهُمْ
அவர்களை
tuqātan
تُقَىٰةًۗ
அஞ்சுதல்(கடுமையாக)
wayuḥadhirukumu
وَيُحَذِّرُكُمُ
இன்னும் எச்சரிக்கிறான்
l-lahu nafsahu
ٱللَّهُ نَفْسَهُۥۗ
அல்லாஹ்/தன்னை
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௮)
Tafseer
௨௯

قُلْ اِنْ تُخْفُوْا مَا فِيْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ ۗوَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٩

qul
قُلْ
கூறுவீராக
in tukh'fū
إِن تُخْفُوا۟
நீங்கள் மறைத்தாலும்
مَا
எதை
fī ṣudūrikum
فِى صُدُورِكُمْ
உங்கள் நெஞ்சங்களில்
aw
أَوْ
அல்லது
tub'dūhu
تُبْدُوهُ
அதை வெளிப்படுத்தினாலும்
yaʿlamhu
يَعْلَمْهُ
அதைஅறிவான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் அறிவான்
مَا
எதை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில் உள்ளது
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௨௯)
Tafseer
௩௦

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا ۛوَمَا عَمِلَتْ مِنْ سُوْۤءٍ ۛ تَوَدُّ لَوْ اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗٓ اَمَدًاۢ بَعِيْدًا ۗوَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ۗوَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ࣖ ٣٠

yawma
يَوْمَ
நாள்
tajidu
تَجِدُ
பெற்றுக்கொள்ளும்
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆத்மா
مَّا
எதை
ʿamilat
عَمِلَتْ
(அது) செய்தது
min khayrin
مِنْ خَيْرٍ
நன்மையில்
muḥ'ḍaran
مُّحْضَرًا
சமர்ப்பிக்கப்பட்டதாக
wamā
وَمَا
இன்னும் எது
ʿamilat
عَمِلَتْ
செய்தது
min sūin
مِن سُوٓءٍ
தீமையில்
tawaddu
تَوَدُّ
விரும்பும்
law
لَوْ
இருக்க வேண்டுமே!
anna
أَنَّ
நிச்சயமாக
baynahā
بَيْنَهَا
அதற்கு மத்தியில்
wabaynahu
وَبَيْنَهُۥٓ
இன்னும் அதற்கு மத்தியில்
amadan baʿīdan
أَمَدًۢا بَعِيدًاۗ
தூரம்/நீண்ட
wayuḥadhirukumu
وَيُحَذِّرُكُمُ
இன்னும் உங்களை எச்சரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nafsahu
نَفْسَهُۥۗ
தன்னை
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
raūfun
رَءُوفٌۢ
மிக இரக்கமுடையவன்
bil-ʿibādi
بِٱلْعِبَادِ
அடியார்களிடம்
ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௩௦)
Tafseer