Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௮

Qur'an Surah Ali 'Imran Verse 28

ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِيْ شَيْءٍ اِلَّآ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰىةً ۗ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ ۗ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ (آل عمران : ٣)

lā yattakhidhi
لَّا يَتَّخِذِ
(Let) not take
எடுத்துக் கொள்ள வேண்டாம்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believers
நம்பிக்கையாளர்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை
awliyāa
أَوْلِيَآءَ
(as) allies
பாதுகாவலர்களாக
min dūni l-mu'minīna
مِن دُونِ ٱلْمُؤْمِنِينَۖ
from instead of the believers
நம்பிக்கையாளர்களைத் தவிர
waman
وَمَن
And whoever
இன்னும் எவர்
yafʿal dhālika
يَفْعَلْ ذَٰلِكَ
does that
இதை செய்வார்
falaysa
فَلَيْسَ
then not he (has)
அவர் இல்லை
mina l-lahi
مِنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
fī shayin
فِى شَىْءٍ
[in] anything
எதிலும்
illā
إِلَّآ
except
தவிர
an tattaqū
أَن تَتَّقُوا۟
that you fear
நீங்கள் அஞ்சுவது
min'hum
مِنْهُمْ
from them
அவர்களை
tuqātan
تُقَىٰةًۗ
(as) a precaution
அஞ்சுதல்(கடுமையாக)
wayuḥadhirukumu
وَيُحَذِّرُكُمُ
And warns you
இன்னும் எச்சரிக்கிறான்
l-lahu nafsahu
ٱللَّهُ نَفْسَهُۥۗ
Allah (of) Himself
அல்லாஹ்/தன்னை
wa-ilā l-lahi
وَإِلَى ٱللَّهِ
and to Allah
இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான்
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the destination
மீளுமிடம்

Transliteration:

Laa yattakhizil mu'minoonal kaafireena awliyaaa'a min doonil mu'mineena wa mai yaf'al zaalika falaisa minal laahi fee shai'in illaaa an tattaqoo minhum tuqaah; wa yuhazzirukumul laahu nafsah; wa ilal laahil maseer (QS. ʾĀl ʿImrān:28)

English Sahih International:

Let not believers take disbelievers as allies [i.e., supporters or protectors] rather than believers. And whoever [of you] does that has nothing [i.e., no association] with Allah, except when taking precaution against them in prudence. And Allah warns you of Himself, and to Allah is the [final] destination. (QS. Ali 'Imran, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௨௮)

Jan Trust Foundation

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்விடம் எதிலுமில்லை. (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து) அவர்களை கடுமையாக அஞ்சினால் தவிர (அப்படி செய்யாதீர்கள்). அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.