Skip to content

ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் - Page: 16

Ali 'Imran

(ʾĀl ʿImrān)

௧௫௧

سَنُلْقِيْ فِيْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَٓا اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ۚ وَمَأْوٰىهُمُ النَّارُ ۗ وَبِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ ١٥١

sanul'qī
سَنُلْقِى
போடுவோம்
fī qulūbi
فِى قُلُوبِ
உள்ளங்களில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
l-ruʿ'ba
ٱلرُّعْبَ
திகிலை
bimā ashrakū
بِمَآ أَشْرَكُوا۟
அவர்கள் இணைவைத்த காரணத்தால்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
mā lam yunazzil
مَا لَمْ يُنَزِّلْ
எது/இறக்கவில்லை
bihi
بِهِۦ
அதற்கு
sul'ṭānan
سُلْطَٰنًاۖ
ஓர் ஆதாரத்தை
wamawāhumu
وَمَأْوَىٰهُمُ
இன்னும் அவர்களுடைய தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۚ
நரகம்தான்
wabi'sa
وَبِئْسَ
கெட்டுவிட்டது
mathwā
مَثْوَى
தங்குமிடம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்
நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணை வைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது. ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௧)
Tafseer
௧௫௨

وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗٓ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ ۚ حَتّٰىٓ اِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَآ اَرٰىكُمْ مَّا تُحِبُّوْنَ ۗ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ ۗ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ ١٥٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ṣadaqakumu
صَدَقَكُمُ
உங்களுக்கு உண்மையாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waʿdahu idh
وَعْدَهُۥٓ إِذْ
தன் வாக்குறுதியை/போது
taḥussūnahum
تَحُسُّونَهُم
அவர்களை வெட்டி வீழ்த்துகிறீர்கள்
bi-idh'nihi ḥattā
بِإِذْنِهِۦۖ حَتَّىٰٓ
அவனுடைய அனுமதியுடன்/வரை
idhā fashil'tum
إِذَا فَشِلْتُمْ
போது/கோழையாகி விட்டீர்கள்
watanāzaʿtum
وَتَنَٰزَعْتُمْ
இன்னும் தர்க்கித்தீர்கள்
fī l-amri
فِى ٱلْأَمْرِ
கட்டளையில்
waʿaṣaytum
وَعَصَيْتُم
இன்னும் மாறு செய்தீர்கள்
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
mā arākum
مَآ أَرَىٰكُم
அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு
mā tuḥibbūna
مَّا تُحِبُّونَۚ
எதை/விரும்புகிறீர்கள்
minkum
مِنكُم
உங்களில்
man
مَّن
எவர்
yurīdu
يُرِيدُ
நாடுகிறார்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தை
waminkum
وَمِنكُم
இன்னும் உங்களில்
man yurīdu
مَّن يُرِيدُ
எவர் / நாடுகிறார்
l-ākhirata
ٱلْءَاخِرَةَۚ
மறுமையை
thumma ṣarafakum
ثُمَّ صَرَفَكُمْ
பிறகு/திருப்பினான்/உங்களை
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
liyabtaliyakum
لِيَبْتَلِيَكُمْۖ
அவன் சோதிப்பதற்காக/உங்களை
walaqad ʿafā
وَلَقَدْ عَفَا
திட்டமாக மன்னித்தான்
ʿankum
عَنكُمْۗ
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
dhū faḍlin ʿalā
ذُو فَضْلٍ عَلَى
அருளுடையவன்/மீது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறு செய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்தி வைத்திருந்த கணவாயிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்(களுடைய குற்றங்)களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள் புரிபவனாக இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௨)
Tafseer
௧௫௩

۞ اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِيْٓ اُخْرٰىكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢبِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَآ اَصَابَكُمْ ۗ وَاللّٰهُ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ ١٥٣

idh tuṣ'ʿidūna
إِذْ تُصْعِدُونَ
சமயம்/வேகமாக ஓடுகிறீர்கள்
walā talwūna
وَلَا تَلْوُۥنَ
நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்
ʿalā aḥadin
عَلَىٰٓ أَحَدٍ
ஒருவரையும்
wal-rasūlu
وَٱلرَّسُولُ
தூதர்
yadʿūkum
يَدْعُوكُمْ
உங்களை அழைக்கிறார்
fī ukh'rākum
فِىٓ أُخْرَىٰكُمْ
உங்களுக்குஇறுதியில்
fa-athābakum
فَأَثَٰبَكُمْ
உங்களுக்கு கூலியாக்கினான்
ghamman
غَمًّۢا
துயரத்தை
bighammin
بِغَمٍّ
துயரத்தின்காரணமாக
likaylā taḥzanū
لِّكَيْلَا تَحْزَنُوا۟
நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவே
ʿalā mā
عَلَىٰ مَا
மீது/எது
fātakum
فَاتَكُمْ
உங்களுக்கு தவறியது
walā mā aṣābakum
وَلَا مَآ أَصَٰبَكُمْۗ
இன்னும் உங்களுக்கு ஏற்பட்டது
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிந்தவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு "(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்" என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டுபண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (யாதொரு பொருள்) தவறிவிட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத் தன்மையை உங்களுக்கு உண்டுபண்ணுவதற்)காகவே (இத்தகைய கஷ்டத்தை உங்களுக்குக் கொடுத்தான்.) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௩)
Tafseer
௧௫௪

ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَۤاىِٕفَةً مِّنْكُمْ ۙ وَطَۤاىِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ ۗ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَيْءٍ ۗ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ ۗ يُخْفُوْنَ فِيْٓ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ ۗ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَيْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ۗ قُلْ لَّوْ كُنْتُمْ فِيْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ ۚ وَلِيَبْتَلِيَ اللّٰهُ مَا فِيْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِيْ قُلُوْبِكُمْ ۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ١٥٤

thumma anzala
ثُمَّ أَنزَلَ
பிறகு/இறக்கினான்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
l-ghami
ٱلْغَمِّ
துயரம்
amanatan
أَمَنَةً
மன நிம்மதிக்காக
nuʿāsan
نُّعَاسًا
சிறு நித்திரையை
yaghshā
يَغْشَىٰ
அது சூழ்ந்தது
ṭāifatan
طَآئِفَةً
ஒரு வகுப்பாரை
minkum
مِّنكُمْۖ
உங்களில்
waṭāifatun
وَطَآئِفَةٌ
இன்னும் ஒரு வகுப்பார்
qad ahammathum
قَدْ أَهَمَّتْهُمْ
கவலையைத் தந்தன/அவர்களுக்கு
anfusuhum
أَنفُسُهُمْ
ஆன்மாக்கள்/தங்கள்
yaẓunnūna
يَظُنُّونَ
எண்ணுகின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
ghayra
غَيْرَ
அல்லாத
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மை
ẓanna
ظَنَّ
எண்ணத்தைப் போன்று
l-jāhiliyati
ٱلْجَٰهِلِيَّةِۖ
மடத்தனம்
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
hal lanā
هَل لَّنَا
நமக்கு உண்டா ?
mina
مِنَ
இருந்து
l-amri
ٱلْأَمْرِ
அதிகாரத்தில்
min shayin
مِن شَىْءٍۗ
ஏதும்
qul
قُلْ
கூறுவீராக
inna
إِنَّ
நிச்சயமாக
l-amra
ٱلْأَمْرَ
அதிகாரம்
kullahu
كُلَّهُۥ
அது எல்லாம்
lillahi
لِلَّهِۗ
அல்லாஹ்வுக்குரியதே
yukh'fūna
يُخْفُونَ
மறைக்கின்றனர்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِم
தங்களுக்குள்
mā lā yub'dūna
مَّا لَا يُبْدُونَ
எதை/வெளிப்படுத்த மாட்டார்கள்
laka
لَكَۖ
உமக்கு
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
law kāna lanā
لَوْ كَانَ لَنَا
இருந்திருந்தால்/நமக்கு
mina l-amri
مِنَ ٱلْأَمْرِ
அதிகாரத்தி லிருந்து
shayon
شَىْءٌ
ஏதும்
mā qutil'nā
مَّا قُتِلْنَا
எதுவும்/கொல்லப் பட்டிருக்க மாட்டோம்
hāhunā
هَٰهُنَاۗ
இங்கு
qul
قُل
கூறுவீராக
law kuntum
لَّوْ كُنتُمْ
நீங்கள் இருந்தாலும்
fī buyūtikum
فِى بُيُوتِكُمْ
உங்கள் வீடுகளில்
labaraza
لَبَرَزَ
வெளியாகியே தீருவார்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kutiba
كُتِبَ
விதிக்கப்பட்டது
ʿalayhimu
عَلَيْهِمُ
அவர்கள் மீது
l-qatlu
ٱلْقَتْلُ
கொலை
ilā
إِلَىٰ
பக்கம்
maḍājiʿihim
مَضَاجِعِهِمْۖ
தாங்கள் கொல்லப்படும் இடங்கள்
waliyabtaliya
وَلِيَبْتَلِىَ
இன்னும் பரிசோதிப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
مَا
எவை
فِى
நெஞ்சங்களில்
ṣudūrikum
صُدُورِكُمْ
நெஞ்சங்களில் உங்கள்
waliyumaḥḥiṣa
وَلِيُمَحِّصَ
இன்னும் பரிசுத்தமாக்க
mā fī qulūbikum
مَا فِى قُلُوبِكُمْۗ
எவை/இல்/உள்ளங்கள்/உங்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
மிக அறிபவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை
(நம்பிக்கையாளர்களே!) இத்துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவைகளை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து "நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டனர். (இதற்கு) "எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு "நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்பட வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்" என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற் காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்கு வதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுங்கள். உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௪)
Tafseer
௧௫௫

اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ ࣖ ١٥٥

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
tawallaw
تَوَلَّوْا۟
திரும்பினார்கள்
minkum
مِنكُمْ
உங்களில்
yawma
يَوْمَ
நாள்
l-taqā
ٱلْتَقَى
சந்தித்தார்(கள்)
l-jamʿāni
ٱلْجَمْعَانِ
இரு கூட்டங்கள்
innamā is'tazallahumu
إِنَّمَا ٱسْتَزَلَّهُمُ
சறுகச் செய்ததெல்லாம்/அவர்களை
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
bibaʿḍi
بِبَعْضِ
சிலதின் காரணமாக
مَا
எவை
kasabū
كَسَبُوا۟ۖ
செய்தார்கள்
walaqad ʿafā
وَلَقَدْ عَفَا
திட்டமாக மன்னித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْۗ
அவர்களை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
ḥalīmun
حَلِيمٌ
மகா சகிப்பாளன்
(நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௫)
Tafseer
௧௫௬

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْاۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰلِكَ حَسْرَةً فِيْ قُلُوْبِهِمْ ۗ وَاللّٰهُ يُحْيٖ وَيُمِيْتُ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ١٥٦

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
lā takūnū
لَا تَكُونُوا۟
ஆகாதீர்கள்
ka-alladhīna
كَٱلَّذِينَ
போன்று/எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
li-ikh'wānihim
لِإِخْوَٰنِهِمْ
சகோதரர்களுக்கு/ அவர்களுடைய
idhā ḍarabū
إِذَا ضَرَبُوا۟
அவர்கள் பயணித்தால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
aw
أَوْ
அல்லது
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
ghuzzan
غُزًّى
போர் புரிபவர்களாக
law kānū
لَّوْ كَانُوا۟
அவர்கள் இருந்திருந்தால்
ʿindanā
عِندَنَا
நம்மிடமே
mā mātū
مَا مَاتُوا۟
அவர்கள் மரணித்திருக்க மாட்டார்கள்
wamā qutilū
وَمَا قُتِلُوا۟
இன்னும் அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
liyajʿala
لِيَجْعَلَ
ஆக்குவதற்காக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
dhālika
ذَٰلِكَ
அதை
ḥasratan
حَسْرَةً
கைசேதமாக
fī qulūbihim
فِى قُلُوبِهِمْۗ
அவர்களுடைய உள்ளங்களில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yuḥ'yī
يُحْىِۦ
வாழவைக்கிறான்
wayumītu
وَيُمِيتُۗ
இன்னும் மரணிக்க வைக்கிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௬)
Tafseer
௧௫௭

وَلَىِٕنْ قُتِلْتُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ١٥٧

wala-in
وَلَئِن
qutil'tum
قُتِلْتُمْ
நீங்கள் கொல்லப்பட்டால்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
aw
أَوْ
அல்லது
muttum
مُتُّمْ
நீங்கள் இறந்தாலும்
lamaghfiratun
لَمَغْفِرَةٌ
திட்டமாக மன்னிப்பு
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
mimmā yajmaʿūna
مِّمَّا يَجْمَعُونَ
எதைவிட/சேகரிக்கிறார்கள்
அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாக இருக்கும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௭)
Tafseer
௧௫௮

وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ ١٥٨

wala-in
وَلَئِن
muttum
مُّتُّمْ
நீங்கள் இறந்தால்
aw
أَوْ
அல்லது
qutil'tum
قُتِلْتُمْ
கொல்லப்பட்டீர்கள்
la-ilā
لَإِلَى
திட்டமாக பக்கம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?) அல்லாஹ்விடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௮)
Tafseer
௧௫௯

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ ١٥٩

fabimā raḥmatin
فَبِمَا رَحْمَةٍ
கருணையினால்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
linta
لِنتَ
மென்மையானீர்
lahum
لَهُمْۖ
அவர்களுக்கு
walaw kunta
وَلَوْ كُنتَ
நீர் இருந்திருந்தால்
faẓẓan
فَظًّا
கடுகடுப்பானவராக
ghalīẓa
غَلِيظَ
கடுமையானவராக
l-qalbi
ٱلْقَلْبِ
உள்ளம்
la-infaḍḍū
لَٱنفَضُّوا۟
பிரிந்திருப்பார்கள்
min
مِنْ
இருந்து
ḥawlika
حَوْلِكَۖ
உம் சுற்றுப் புறம்
fa-uʿ'fu
فَٱعْفُ
ஆகவே மன்னிப்பீராக
ʿanhum
عَنْهُمْ
அவர்களை
wa-is'taghfir
وَٱسْتَغْفِرْ
இன்னும் மன்னிப்புத் தேடுவீராக
lahum
لَهُمْ
அவர்களுக்காக
washāwir'hum
وَشَاوِرْهُمْ
இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்
fī l-amri
فِى ٱلْأَمْرِۖ
காரியத்தில்
fa-idhā ʿazamta
فَإِذَا عَزَمْتَ
(நீர்) உறுதிசெய்தால்
fatawakkal
فَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-mutawakilīna
ٱلْمُتَوَكِّلِينَ
நம்பிக்கை வைப்பவர்களை
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௫௯)
Tafseer
௧௬௦

اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِيْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١٦٠

in
إِن
உதவினால்
yanṣur'kumu
يَنصُرْكُمُ
உதவினால் உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
falā
فَلَا
அறவே இல்லை
ghāliba
غَالِبَ
மிகைப்பவர்
lakum
لَكُمْۖ
உங்களை
wa-in yakhdhul'kum
وَإِن يَخْذُلْكُمْ
அவன் கைவிட்டால்/உங்களை
faman dhā
فَمَن ذَا
யார்/அவர்
alladhī
ٱلَّذِى
எவர்
yanṣurukum
يَنصُرُكُم
உங்களுக்கு உதவுவார்
min baʿdihi
مِّنۢ بَعْدِهِۦۗ
அதற்குப் பின்னர்
waʿalā
وَعَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளவும். ([௩] ஸூரத்துல்ஆல இம்ரான்: ௧௬௦)
Tafseer