குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௫௯
Qur'an Surah Ali 'Imran Verse 159
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௧௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ (آل عمران : ٣)
- fabimā raḥmatin
- فَبِمَا رَحْمَةٍ
- So because (of) Mercy
- கருணையினால்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்வின்
- linta
- لِنتَ
- you dealt gently
- மென்மையானீர்
- lahum
- لَهُمْۖ
- with them
- அவர்களுக்கு
- walaw kunta
- وَلَوْ كُنتَ
- And if you had been
- நீர் இருந்திருந்தால்
- faẓẓan
- فَظًّا
- rude
- கடுகடுப்பானவராக
- ghalīẓa
- غَلِيظَ
- (and) harsh
- கடுமையானவராக
- l-qalbi
- ٱلْقَلْبِ
- (at) [the] heart
- உள்ளம்
- la-infaḍḍū
- لَٱنفَضُّوا۟
- surely they (would have) dispersed
- பிரிந்திருப்பார்கள்
- min
- مِنْ
- from
- இருந்து
- ḥawlika
- حَوْلِكَۖ
- around you
- உம் சுற்றுப் புறம்
- fa-uʿ'fu
- فَٱعْفُ
- Then pardon
- ஆகவே மன்னிப்பீராக
- ʿanhum
- عَنْهُمْ
- [from] them
- அவர்களை
- wa-is'taghfir
- وَٱسْتَغْفِرْ
- and ask forgiveness
- இன்னும் மன்னிப்புத் தேடுவீராக
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்காக
- washāwir'hum
- وَشَاوِرْهُمْ
- and consult them
- இன்னும் ஆலோசிப்பீராக / அவர்களுடன்
- fī l-amri
- فِى ٱلْأَمْرِۖ
- in the matter
- காரியத்தில்
- fa-idhā ʿazamta
- فَإِذَا عَزَمْتَ
- Then when you have decided
- (நீர்) உறுதிசெய்தால்
- fatawakkal
- فَتَوَكَّلْ
- then put trust
- நம்பிக்கை வைப்பீராக
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- on Allah
- அல்லாஹ் மீது
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yuḥibbu
- يُحِبُّ
- loves
- நேசிக்கிறான்
- l-mutawakilīna
- ٱلْمُتَوَكِّلِينَ
- the ones who put trust (in Him)
- நம்பிக்கை வைப்பவர்களை
Transliteration:
Fabimaa rahmatim minal laahi linta lahum wa law kunta fazzan ghaleezal qalbi lanfaddoo min hawlika fafu 'anhum wastaghfir lahum wa shaawirhum fil amri fa izaa 'azamta fatawakkal 'alal laah; innallaaha yuhibbul mutawak kileen(QS. ʾĀl ʿImrān:159)
English Sahih International:
So by mercy from Allah, [O Muhammad], you were lenient with them. And if you had been rude [in speech] and harsh in heart, they would have disbanded from about you. So pardon them and ask forgiveness for them and consult them in the matter. And when you have decided, then rely upon Allah. Indeed, Allah loves those who rely [upon Him]. (QS. Ali 'Imran, Ayah ௧௫௯)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௧௫௯)
Jan Trust Foundation
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானீர். நீர் கடுகடுப்பானவராக, உள்ளம் கடுமையானவராக இருந்திருந்தால் உம் சுற்றுப்புறத்திலிருந்து பிரிந்திருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக!