Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 9

Al-Baqarah

(al-Baq̈arah)

௮௧

بَلٰى مَنْ كَسَبَ سَيِّئَةً وَّاَحَاطَتْ بِهٖ خَطِيْۤـَٔتُهٗ فَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٨١

balā
بَلَىٰ
அவ்வாறன்று
man
مَن
எவர்(கள்)
kasaba
كَسَبَ
சம்பாதித்தார்(கள்)
sayyi-atan
سَيِّئَةً
தீமையை
wa-aḥāṭat
وَأَحَٰطَتْ
இன்னும் சூழ்ந்து கொண்டது
bihi
بِهِۦ
அவரை
khaṭīatuhu
خَطِيٓـَٔتُهُۥ
அவருடைய பாவம்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
அவ்வாறன்று! எவர்கள் பாவத்தையே சம்பாதித்துக் கொண்டிருந்து, அவர்களுடைய பாவம் அவர்களை சூழ்ந்து கொண்டதோ அவர்கள் (யாராய் இருப்பினும்) நரகவாசிகளே! அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௮௧)
Tafseer
௮௨

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ࣖ ٨٢

wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
இன்னும் எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்காரியங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௮௨)
Tafseer
௮௩

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَۗ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ٨٣

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqa
مِيثَٰقَ
உறுதிமொழியை
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ராயீலுடைய சந்ததிகளின்
lā taʿbudūna
لَا تَعْبُدُونَ
வணங்காதீர்கள்
illā l-laha
إِلَّا ٱللَّهَ
தவிர/அல்லாஹ்வை
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் பெற்றோருக்கு
iḥ'sānan
إِحْسَانًا
நன்மை செய்யுங்கள்
wadhī l-qur'bā
وَذِى ٱلْقُرْبَىٰ
இன்னும் உறவினர்கள்
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
இன்னும் அநாதைகள்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
waqūlū
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
lilnnāsi
لِلنَّاسِ
மக்களிடம்
ḥus'nan
حُسْنًا
அழகியதை
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
thumma
ثُمَّ
பிறகு
tawallaytum
تَوَلَّيْتُمْ
திரும்பி விட்டீர்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
தவிர/குறைவானவர்கள்
minkum
مِّنكُمْ
உங்களில்
wa-antum
وَأَنتُم
நீங்களோ
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
புறக்கணிப்பவர்கள்
மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௮௩)
Tafseer
௮௪

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَكُمْ لَا تَسْفِكُوْنَ دِمَاۤءَكُمْ وَلَا تُخْرِجُوْنَ اَنْفُسَكُمْ مِّنْ دِيَارِكُمْ ۖ ثُمَّ اَقْرَرْتُمْ وَاَنْتُمْ تَشْهَدُوْنَ ٨٤

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqakum
مِيثَٰقَكُمْ
உறுதிமொழியை/உங்கள்
lā tasfikūna
لَا تَسْفِكُونَ
ஓட்டாதீர்கள்
dimāakum
دِمَآءَكُمْ
இரத்தங்களை/உங்கள்
walā tukh'rijūna
وَلَا تُخْرِجُونَ
இன்னும் வெளியேற்றாதீர்கள்
anfusakum
أَنفُسَكُم
உங்களை
min
مِّن
இருந்து
diyārikum
دِيَٰرِكُمْ
உங்கள் இல்லங்கள்
thumma
ثُمَّ
பிறகு
aqrartum
أَقْرَرْتُمْ
உறுதிப்படுத்தினீர்கள்
wa-antum tashhadūna
وَأَنتُمْ تَشْهَدُونَ
நீங்களே/சாட்சிகளாக இருக்கிறீர்கள்
அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௮௪)
Tafseer
௮௫

ثُمَّ اَنْتُمْ هٰٓؤُلَاۤءِ تَقْتُلُوْنَ اَنْفُسَكُمْ وَتُخْرِجُوْنَ فَرِيْقًا مِّنْكُمْ مِّنْ دِيَارِهِمْۖ تَظٰهَرُوْنَ عَلَيْهِمْ بِالْاِثْمِ وَالْعُدْوَانِۗ وَاِنْ يَّأْتُوْكُمْ اُسٰرٰى تُفٰدُوْهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ اِخْرَاجُهُمْ ۗ اَفَتُؤْمِنُوْنَ بِبَعْضِ الْكِتٰبِ وَتَكْفُرُوْنَ بِبَعْضٍۚ فَمَا جَزَاۤءُ مَنْ يَّفْعَلُ ذٰلِكَ مِنْكُمْ اِلَّا خِزْيٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَيَوْمَ الْقِيٰمَةِ يُرَدُّوْنَ اِلٰٓى اَشَدِّ الْعَذَابِۗ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ٨٥

thumma
ثُمَّ
பிறகு
antum
أَنتُمْ
நீங்கள்
hāulāi
هَٰٓؤُلَآءِ
ஓ இவர்களே
taqtulūna
تَقْتُلُونَ
கொன்றீர்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
watukh'rijūna
وَتُخْرِجُونَ
இன்னும் வெளியேற்றுகிறீர்கள்
farīqan
فَرِيقًا
ஒரு பிரிவினரை
minkum
مِّنكُم
உங்களில்
min
مِّن
இருந்து
diyārihim
دِيَٰرِهِمْ
இல்லங்கள்/ அவர்களுடைய
taẓāharūna
تَظَٰهَرُونَ
உதவுகிறீர்கள்
ʿalayhim
عَلَيْهِم
அவர்களுக்கு எதிராக
bil-ith'mi
بِٱلْإِثْمِ
பாவமாக
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
இன்னும் அநியாயம்
wa-in yatūkum
وَإِن يَأْتُوكُمْ
அவர்கள் வந்தால்/உங்களிடம்
usārā
أُسَٰرَىٰ
கைதிகளாக
tufādūhum
تُفَٰدُوهُمْ
ஈடுகொடுத்து மீட்கிறீர்கள்/அவர்களை
wahuwa
وَهُوَ
அதுவோ
muḥarramun
مُحَرَّمٌ
தடுக்கப்பட்டது
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ikh'rājuhum
إِخْرَاجُهُمْۚ
வெளியேற்றுவது/அவர்களை
afatu'minūna
أَفَتُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கிறீர்கள்?
bibaʿḍi
بِبَعْضِ
சிலவற்றை
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தில்
watakfurūna
وَتَكْفُرُونَ
இன்னும் நிராகரிக்கிறீர்கள்
bibaʿḍin
بِبَعْضٍۚ
சிலவற்றை
famā
فَمَا
இல்லை
jazāu
جَزَآءُ
கூலி
man
مَن
எவர்
yafʿalu
يَفْعَلُ
செய்கிறார்
dhālika
ذَٰلِكَ
அதை
minkum
مِنكُمْ
உங்களில்
illā
إِلَّا
தவிர
khiz'yun
خِزْىٌ
இழிவு
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
இவ்வுலகம்
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ
இன்னும் மறுமை நாளில்
yuraddūna
يُرَدُّونَ
திருப்பப்படுவார்கள்
ilā
إِلَىٰٓ
பக்கம்
ashaddi
أَشَدِّ
மிகக் கடுமையானது
l-ʿadhābi
ٱلْعَذَابِۗ
வேதனை
wamā l-lahu
وَمَا ٱللَّهُ
இல்லை/அல்லாஹ்
bighāfilin
بِغَٰفِلٍ
கவனமற்றவனாக
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
எதைப் பற்றி/ செய்கிறீர்கள்
இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௮௫)
Tafseer
௮௬

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ ۖ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُوْنَ ࣖ ٨٦

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ish'tarawū
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
இவ்வுலக(ம்)
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِۖ
மறுமைக்குப் பதிலாக
falā yukhaffafu
فَلَا يُخَفَّفُ
எனவே இலேசாக்கப்படாது
ʿanhumu
عَنْهُمُ
அவர்களை விட்டு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
இன்னும் அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்கள்
இத்தகையவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால் அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் யாதொரு உதவியும் செய்யப்பட மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௮௬)
Tafseer
௮௭

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْۢ بَعْدِهٖ بِالرُّسُلِ ۖ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِۗ اَفَكُلَّمَا جَاۤءَكُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰىٓ اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ ۚ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ ٨٧

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
waqaffaynā
وَقَفَّيْنَا
இன்னும் தொடர்ச்சியாக அனுப்பினோம்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
bil-rusuli
بِٱلرُّسُلِۖ
தூதர்களை
waātaynā
وَءَاتَيْنَا
இன்னும் கொடுத்தோம்
ʿīsā
عِيسَى
ஈஸாவிற்கு
ib'na
ٱبْنَ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
l-bayināti
ٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளை
wa-ayyadnāhu
وَأَيَّدْنَٰهُ
இன்னும் பலப்படுத்தினோம்/அவரை
birūḥi
بِرُوحِ
ஆத்மாவைக்கொண்டு
l-qudusi
ٱلْقُدُسِۗ
பரிசுத்தமான
afakullamā jāakum
أَفَكُلَّمَا جَآءَكُمْ
வந்தபோதெல்லாம்/உங்களுக்கு
rasūlun
رَسُولٌۢ
ஒரு தூதர்
bimā lā tahwā
بِمَا لَا تَهْوَىٰٓ
எதைக் கொண்டு/விரும்பவில்லை
anfusukumu
أَنفُسُكُمُ
மனங்கள்/உங்கள்
is'takbartum
ٱسْتَكْبَرْتُمْ
பெருமையடித்தீர்கள்
fafarīqan
فَفَرِيقًا
ஒரு பிரிவினரை
kadhabtum
كَذَّبْتُمْ
பொய்ப்பித்தீர்கள்
wafarīqan
وَفَرِيقًا
இன்னும் ஒரு பிரிவினரை
taqtulūna
تَقْتُلُونَ
கொலை செய்கிறீர்கள்
தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்! ([௨] ஸூரத்துல் பகரா: ௮௭)
Tafseer
௮௮

وَقَالُوْا قُلُوْبُنَا غُلْفٌ ۗ بَلْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَقَلِيْلًا مَّا يُؤْمِنُوْنَ ٨٨

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
qulūbunā
قُلُوبُنَا
உள்ளங்கள்/எங்கள்
ghul'fun
غُلْفٌۢۚ
திரையிடப்பட்டுள்ளன
bal
بَل
மாறாக
laʿanahumu
لَّعَنَهُمُ
அவர்களை சபித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikuf'rihim
بِكُفْرِهِمْ
நிராகரிப்பின் காரணமாக/அவர்களுடைய
faqalīlan mā
فَقَلِيلًا مَّا
எனவே மிகக் குறைவாகவே
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
"எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன" என்று அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அவ்வாறன்று, அவர்களின் நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டான். ஆதலால் அவர்கள் நம்பிக்கை கொள்வது வெகு சொற்பமே! ([௨] ஸூரத்துல் பகரா: ௮௮)
Tafseer
௮௯

وَلَمَّا جَاۤءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْاۚ فَلَمَّا جَاۤءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ۖ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ ٨٩

walammā
وَلَمَّا
போது/வந்தது
jāahum
جَآءَهُمْ
அவர்களுக்கு
kitābun
كِتَٰبٌ
ஒரு வேதம்
min
مِّنْ
இருந்து
ʿindi l-lahi
عِندِ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
muṣaddiqun
مُصَدِّقٌ
உண்மைப்படுத்தக் கூடியது
limā maʿahum
لِّمَا مَعَهُمْ
எதை/அவர்களுடன்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
min qablu
مِن قَبْلُ
முன்னர்
yastaftiḥūna
يَسْتَفْتِحُونَ
வெற்றியைத் தேடுவார்கள்
ʿalā
عَلَى
எதிராக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
எவர்கள்/நிராகரித்தனர்
falammā
فَلَمَّا
வந்த போது
jāahum
جَآءَهُم
அவர்களிடம்
mā ʿarafū
مَّا عَرَفُوا۟
எது/அறிந்தனர்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
bihi
بِهِۦۚ
அதை
falaʿnatu
فَلَعْنَةُ
எனவே சாபம்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalā
عَلَى
மீது
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக! ([௨] ஸூரத்துல் பகரா: ௮௯)
Tafseer
௯௦

بِئْسَمَا اشْتَرَوْا بِهٖٓ اَنْفُسَهُمْ اَنْ يَّكْفُرُوْا بِمَآ اَنْزَلَ اللّٰهُ بَغْيًا اَنْ يُّنَزِّلَ اللّٰهُ مِنْ فَضْلِهٖ عَلٰى مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۚ فَبَاۤءُوْ بِغَضَبٍ عَلٰى غَضَبٍۗ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ ٩٠

bi'samā
بِئْسَمَا
கெட்டது/எது
ish'taraw
ٱشْتَرَوْا۟
விற்றார்கள்
bihi
بِهِۦٓ
அதற்குப் பகரமாக
anfusahum
أَنفُسَهُمْ
தங்களை
an yakfurū
أَن يَكْفُرُوا۟
அவர்கள் நிராகரித்து
bimā anzala
بِمَآ أَنزَلَ
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baghyan
بَغْيًا
பொறாமைப்பட்டு
an yunazzila
أَن يُنَزِّلَ
இறக்குவதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min
مِن
இருந்து
faḍlihi
فَضْلِهِۦ
தன் அருள்
ʿalā
عَلَىٰ
மீது
man
مَن
எவர்
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
min
مِنْ
இருந்து
ʿibādihi
عِبَادِهِۦۖ
தன் அடியார்கள்
fabāū
فَبَآءُو
ஆகவே சார்ந்தார்கள்
bighaḍabin
بِغَضَبٍ
கோபத்தில்
ʿalā
عَلَىٰ
மேல்
ghaḍabin
غَضَبٍۚ
கோபம்
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
இன்னும் நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
வேதனை
muhīnun
مُّهِينٌ
இழிவு தரக்கூடியது
(இந்த குர்ஆனை தங்கள்மீது இறக்காமல்) அல்லாஹ் தன்னுடைய அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன்னுடைய கிருபையை இறக்கி வைத்ததைப் பற்றிப் பொறாமைக் கொண்டு, அல்லாஹ் இறக்கி வைத்த இதையே நிராகரிப்பதன் மூலமாய் அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்துவிட்டார்கள். ஆதலால் அந்நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௯௦)
Tafseer