குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௯
Qur'an Surah Al-Baqarah Verse 89
ஸூரத்துல் பகரா [௨]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا جَاۤءَهُمْ كِتٰبٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْۙ وَكَانُوْا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُوْنَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْاۚ فَلَمَّا جَاۤءَهُمْ مَّا عَرَفُوْا كَفَرُوْا بِهٖ ۖ فَلَعْنَةُ اللّٰهِ عَلَى الْكٰفِرِيْنَ (البقرة : ٢)
- walammā
- وَلَمَّا
- And when
- போது/வந்தது
- jāahum
- جَآءَهُمْ
- came to them
- அவர்களுக்கு
- kitābun
- كِتَٰبٌ
- a Book
- ஒரு வேதம்
- min
- مِّنْ
- of
- இருந்து
- ʿindi l-lahi
- عِندِ ٱللَّهِ
- from Allah
- அல்லாஹ்விடம்
- muṣaddiqun
- مُصَدِّقٌ
- confirming
- உண்மைப்படுத்தக் கூடியது
- limā maʿahum
- لِّمَا مَعَهُمْ
- what (was) with them
- எதை/அவர்களுடன்
- wakānū
- وَكَانُوا۟
- though they used to
- இன்னும் இருந்தார்கள்
- min qablu
- مِن قَبْلُ
- from before
- முன்னர்
- yastaftiḥūna
- يَسْتَفْتِحُونَ
- (that), pray for victory
- வெற்றியைத் தேடுவார்கள்
- ʿalā
- عَلَى
- over
- எதிராக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieved
- எவர்கள்/நிராகரித்தனர்
- falammā
- فَلَمَّا
- then when
- வந்த போது
- jāahum
- جَآءَهُم
- came to them
- அவர்களிடம்
- mā ʿarafū
- مَّا عَرَفُوا۟
- what they recognized
- எது/அறிந்தனர்
- kafarū
- كَفَرُوا۟
- they disbelieved
- நிராகரித்தார்கள்
- bihi
- بِهِۦۚ
- in it
- அதை
- falaʿnatu
- فَلَعْنَةُ
- So (the) curse
- எனவே சாபம்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- ʿalā
- عَلَى
- (is) on
- மீது
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
Transliteration:
Wa lammaa jaaa'ahum Kitaabum min 'indil laahi musaddiqul limaa ma'ahum wa kaanoo min qablu yastaftihoona 'alal lazeena kafaroo falammaa jaaa'ahum maa 'arafoo kafaroo bih; fala 'natul laahi 'alal kaafireen(QS. al-Baq̈arah:89)
English Sahih International:
And when there came to them a Book [i.e., the Quran] from Allah confirming that which was with them – although before they used to pray for victory against those who disbelieved – but [then] when there came to them that which they recognized, they disbelieved in it; so the curse of Allah will be upon the disbelievers. (QS. Al-Baqarah, Ayah ௮௯)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு ஒரு வேதம் வந்தது. அது அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கியும் வைக்கின்றது. இதற்கு முன்பு அவர்கள் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தங்களுக்கு வெற்றியை அளிக்கும்படி (இந்த வேதத்தின் பொருட்டால் இறைவனிடம்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் நன்கறிந்(து, வருமென எதிர்பார்த்)திருந்த இவ்வேதம் அவர்களிடம் வந்த சமயத்தில் இதனை அவர்கள் நிராகரிக்கிறார்கள். ஆகவே, அந்த நிராகரிப்பவர்களின் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக! (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௯)
Jan Trust Foundation
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள் - (ஆனால்) அவர்கள் அறிந்த (இவ்வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். எனவே, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமுண்டாகுக!