Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௮௩

Qur'an Surah Al-Baqarah Verse 83

ஸூரத்துல் பகரா [௨]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَۗ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ (البقرة : ٢)

wa-idh akhadhnā
وَإِذْ أَخَذْنَا
And when We took
இன்னும் சமயம்/வாங்கினோம்
mīthāqa
مِيثَٰقَ
(the) covenant
உறுதிமொழியை
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
(from the) Children (of) Israel
இஸ்ராயீலுடைய சந்ததிகளின்
lā taʿbudūna
لَا تَعْبُدُونَ
"Not you will worship
வணங்காதீர்கள்
illā l-laha
إِلَّا ٱللَّهَ
except Allah
தவிர/அல்லாஹ்வை
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
and with [the] parents
இன்னும் பெற்றோருக்கு
iḥ'sānan
إِحْسَانًا
(be) good
நன்மை செய்யுங்கள்
wadhī l-qur'bā
وَذِى ٱلْقُرْبَىٰ
and (with) relatives
இன்னும் உறவினர்கள்
wal-yatāmā
وَٱلْيَتَٰمَىٰ
and [the] orphans
இன்னும் அநாதைகள்
wal-masākīni
وَٱلْمَسَٰكِينِ
and the needy
இன்னும் ஏழைகள்
waqūlū
وَقُولُوا۟
and speak
இன்னும் கூறுங்கள்
lilnnāsi
لِلنَّاسِ
to [the] people
மக்களிடம்
ḥus'nan
حُسْنًا
good
அழகியதை
wa-aqīmū
وَأَقِيمُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
thumma
ثُمَّ
Then
பிறகு
tawallaytum
تَوَلَّيْتُمْ
you turned away
திரும்பி விட்டீர்கள்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
except a few
தவிர/குறைவானவர்கள்
minkum
مِّنكُمْ
of you
உங்களில்
wa-antum
وَأَنتُم
and you (were)
நீங்களோ
muʿ'riḍūna
مُّعْرِضُونَ
refusing
புறக்கணிப்பவர்கள்

Transliteration:

Wa iz akhaznaa meesaaqa Baneee Israaa'eela laa ta'budoona illal laaha wa bil waalidaini ihsaananw wa zil qurbaa walyataamaa walmasaakeeni wa qooloo linnaasi husnanw wa aqeemus salaata wa aatuzZakaata summa tawallitum illaa qaleelam minkum wa antum mu'ridoon (QS. al-Baq̈arah:83)

English Sahih International:

And [recall] when We took the covenant from the Children of Israel, [enjoining upon them], "Do not worship except Allah; and to parents do good and to relatives, orphans, and the needy. And speak to people good [words] and establish prayer and give Zakah." Then you turned away, except a few of you, and you were refusing. (QS. Al-Baqarah, Ayah ௮௩)

Abdul Hameed Baqavi:

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௮௩)

Jan Trust Foundation

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்" என்று இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் இந்த உறுதிமொழியிலிருந்து) திரும்பிவிட்டீர்கள். நீங்களோ புறக்கணிப்பவர்கள்.