Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 6

Al-Baqarah

(al-Baq̈arah)

௫௧

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰىٓ اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ٥١

wa-idh wāʿadnā
وَإِذْ وَٰعَدْنَا
இன்னும் சமயம்/வாக்களித்தோம்
mūsā
مُوسَىٰٓ
மூஸாவிற்கு
arbaʿīna
أَرْبَعِينَ
நாற்பது
laylatan
لَيْلَةً
இரவுகளை
thumma
ثُمَّ
பிறகு
ittakhadhtumu
ٱتَّخَذْتُمُ
எடுத்துக்கொண்டீர்கள்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
அவருக்குப் பின்னர்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௧)
Tafseer
௫௨

ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٥٢

thumma ʿafawnā
ثُمَّ عَفَوْنَا
பிறகு/மன்னித்தோம்
ʿankum
عَنكُم
உங்களை
min baʿdi dhālika
مِّنۢ بَعْدِ ذَٰلِكَ
பின்னர்/அதன்
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௨)
Tafseer
௫௩

وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ٥٣

wa-idh
وَإِذْ
இன்னும் சமயம்
ātaynā
ءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-fur'qāna
وَٱلْفُرْقَانَ
இன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை
laʿallakum tahtadūna
لَعَلَّكُمْ تَهْتَدُونَ
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௩)
Tafseer
௫௪

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْٓا اِلٰى بَارِىِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْۗ ذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْۗ فَتَابَ عَلَيْكُمْ ۗ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ ٥٤

wa-idh qāla
وَإِذْ قَالَ
இன்னும் சமயம்/கூறினார்
mūsā
مُوسَىٰ
மூசா
liqawmihi
لِقَوْمِهِۦ
சமுதாயத்திற்கு/தன்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ẓalamtum
ظَلَمْتُمْ
அநியாயம்செய்தீர்கள்
anfusakum
أَنفُسَكُم
ஆன்மாக்களுக்கு/உங்கள்
bi-ittikhādhikumu
بِٱتِّخَاذِكُمُ
நீங்கள் எடுத்துக் கொண்டதினால்
l-ʿij'la
ٱلْعِجْلَ
காளைக் கன்றை
fatūbū
فَتُوبُوٓا۟
எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
bāri-ikum
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
fa-uq'tulū
فَٱقْتُلُوٓا۟
ஆகவேகொல்லுங்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உயிர்களை/உங்கள்
dhālikum
ذَٰلِكُمْ
அது
khayrun
خَيْرٌ
சிறந்தது
lakum
لَّكُمْ
உங்களுக்கு
ʿinda
عِندَ
இடம்
bāri-ikum
بَارِئِكُمْ
படைத்தவன்/உங்களை
fatāba
فَتَابَ
எனவே மன்னித்தான்
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்களை
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-tawābu
ٱلتَّوَّابُ
தவ்பாவை அங்கீகரிப்பவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பேரன்பாளன்
பின்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி "என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்" என்று கூறினார். ஆகவே (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௪)
Tafseer
௫௫

وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ٥٥

wa-idh qul'tum
وَإِذْ قُلْتُمْ
இன்னும் சமயம்/கூறினீர்கள்
yāmūsā
يَٰمُوسَىٰ
மூஸாவே!
lan nu'mina
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
laka ḥattā narā
لَكَ حَتَّىٰ نَرَى
உம்மை/நாம் காணும் வரை
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
jahratan
جَهْرَةً
கண்கூடாக
fa-akhadhatkumu
فَأَخَذَتْكُمُ
எனவே பிடித்தது/உங்களை
l-ṣāʿiqatu
ٱلصَّٰعِقَةُ
பெரும் சப்தம்
wa-antum tanẓurūna
وَأَنتُمْ تَنظُرُونَ
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க
அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது. ([௨] ஸூரத்துல் பகரா: ௫௫)
Tafseer
௫௬

ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٥٦

thumma
ثُمَّ
பிறகு
baʿathnākum
بَعَثْنَٰكُم
எழுப்பினோம்/உங்களை
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
mawtikum
مَوْتِكُمْ
மரணம்/உங்கள்
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௬)
Tafseer
௫௭

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى ۗ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ۗ وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ٥٧

waẓallalnā
وَظَلَّلْنَا
இன்னும் நிழலிடச் செய்தோம்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-ghamāma
ٱلْغَمَامَ
மேகத்தை
wa-anzalnā
وَأَنزَلْنَا
இன்னும் இறக்கினோம்
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-mana
ٱلْمَنَّ
மன்னு
wal-salwā
وَٱلسَّلْوَىٰۖ
இன்னும் ஸல்வா
kulū
كُلُوا۟
புசியுங்கள்
min ṭayyibāti
مِن طَيِّبَٰتِ
நல்லவற்றிலிருந்து
mā razaqnākum
مَا رَزَقْنَٰكُمْۖ
நாம் வழங்கியது/உங்களுக்கு
wamā ẓalamūnā
وَمَا ظَلَمُونَا
அவர்கள் தீங்கிழைக்கவில்லை/நமக்கு
walākin
وَلَٰكِن
எனினும்
kānū
كَانُوٓا۟
இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
தீங்கிழைப்பவர்களாக
அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) "மன்னு ஸல்வா" (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவைகளைப் புசித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம்முடைய கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௭)
Tafseer
௫௮

وَاِذْ قُلْنَا ادْخُلُوْا هٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُوْلُوْا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطٰيٰكُمْ ۗ وَسَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ ٥٨

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
இன்னும் சமயம்/கூறினோம்
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
hādhihi
هَٰذِهِ
இந்த
l-qaryata
ٱلْقَرْيَةَ
ஊரில்
fakulū
فَكُلُوا۟
இன்னும் புசியுங்கள்
min'hā
مِنْهَا
அதில்
ḥaythu
حَيْثُ
விதத்தில்
shi'tum
شِئْتُمْ
நாடினீர்கள்
raghadan
رَغَدًا
தாராளமாக
wa-ud'khulū
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
l-bāba
ٱلْبَابَ
வாசலில்
sujjadan
سُجَّدًا
தலைகுனிந்தவர்களாக
waqūlū
وَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
ḥiṭṭatun
حِطَّةٌ
பாவச்சுமை நீங்குக!
naghfir
نَّغْفِرْ
மன்னிப்போம்
lakum
لَكُمْ
உங்களுக்கு
khaṭāyākum
خَطَٰيَٰكُمْۚ
குற்றங்களை/உங்கள்
wasanazīdu
وَسَنَزِيدُ
இன்னும் அதிகப்படுத்துவோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோருக்கு
அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௮)
Tafseer
௫௯

فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا قَوْلًا غَيْرَ الَّذِيْ قِيْلَ لَهُمْ فَاَنْزَلْنَا عَلَى الَّذِيْنَ ظَلَمُوْا رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ࣖ ٥٩

fabaddala
فَبَدَّلَ
ஆகவே மாற்றினார்(கள்)
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
qawlan
قَوْلًا
வார்த்தையாக
ghayra
غَيْرَ
அல்லாத
alladhī qīla
ٱلَّذِى قِيلَ
எது/கூறப்பட்டது
lahum
لَهُمْ
தங்களுக்கு
fa-anzalnā
فَأَنزَلْنَا
எனவே இறக்கினோம்
ʿalā
عَلَى
மீது
alladhīna ẓalamū
ٱلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயக்காரர்கள்
rij'zan
رِجْزًا
வேதனையை
mina
مِّنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
வானம்
bimā
بِمَا
காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yafsuqūna
يَفْسُقُونَ
பாவம் செய்பவர்களாக
ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். ([௨] ஸூரத்துல் பகரா: ௫௯)
Tafseer
௬௦

۞ وَاِذِ اسْتَسْقٰى مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَۗ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۗ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ ۗ كُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ٦٠

wa-idhi is'tasqā
وَإِذِ ٱسْتَسْقَىٰ
இன்னும் சமயம்/தண்ணீர் தேடினார்
mūsā liqawmihi
مُوسَىٰ لِقَوْمِهِۦ
மூசா/சமுதாயத்திற்கு/தனது
faqul'nā
فَقُلْنَا
ஆகவே, கூறினோம்
iḍ'rib
ٱضْرِب
அடிப்பீராக
biʿaṣāka
بِّعَصَاكَ
தடியால்/உம்
l-ḥajara
ٱلْحَجَرَۖ
கல்லை
fa-infajarat
فَٱنفَجَرَتْ
பீறிட்டன
min'hu
مِنْهُ
அதிலிருந்து
ith'natā ʿashrata
ٱثْنَتَا عَشْرَةَ
பன்னிரெண்டு
ʿaynan
عَيْنًاۖ
ஊற்று(கள்)
qad ʿalima
قَدْ عَلِمَ
திட்டமாக அறிந்தார்(கள்)
kullu
كُلُّ
எல்லாம்
unāsin
أُنَاسٍ
மக்கள்
mashrabahum
مَّشْرَبَهُمْۖ
குடிக்குமிடத்தை/தங்கள்
kulū
كُلُوا۟
புசியுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
min riz'qi
مِن رِّزْقِ
உணவிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
இன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
விஷமிகளாக
மூஸா தன் இனத்தாரு(டன் "தீஹ்" என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)கு தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய தடியால் இக்கல்லை அடியுங்கள்" எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி "உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த ("மன்னு மற்றும் ஸல்வா" என்னும் உணவு பதார்தத்) திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால் பூமியில் விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்" (என்று கூறினோம்.) ([௨] ஸூரத்துல் பகரா: ௬௦)
Tafseer