Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௫௫

Qur'an Surah Al-Baqarah Verse 55

ஸூரத்துல் பகரா [௨]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ (البقرة : ٢)

wa-idh qul'tum
وَإِذْ قُلْتُمْ
And when you said
இன்னும் சமயம்/கூறினீர்கள்
yāmūsā
يَٰمُوسَىٰ
"O Musa!
மூஸாவே!
lan nu'mina
لَن نُّؤْمِنَ
Never (will) we believe
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
laka ḥattā narā
لَكَ حَتَّىٰ نَرَى
in you until we see
உம்மை/நாம் காணும் வரை
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
jahratan
جَهْرَةً
manifestly"
கண்கூடாக
fa-akhadhatkumu
فَأَخَذَتْكُمُ
So seized you
எனவே பிடித்தது/உங்களை
l-ṣāʿiqatu
ٱلصَّٰعِقَةُ
the thunderbolt
பெரும் சப்தம்
wa-antum tanẓurūna
وَأَنتُمْ تَنظُرُونَ
while you (were) looking
நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க

Transliteration:

Wa iz qultum yaa Moosaa lan nu'mina laka hattaa naral laaha jahratan fa akhazat kumus saa'iqatu wa antum tanzuroon (QS. al-Baq̈arah:55)

English Sahih International:

And [recall] when you said, "O Moses, we will never believe you until we see Allah outright"; so the thunderbolt took you while you were looking on. (QS. Al-Baqarah, Ayah ௫௫)

Abdul Hameed Baqavi:

அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி "நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்" என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது. (ஸூரத்துல் பகரா, வசனம் ௫௫)

Jan Trust Foundation

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூசாவே "அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எனவே, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது.