Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 29

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௮௧

وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ اِلَى اللّٰهِ ۗثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ࣖ ٢٨١

wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
yawman
يَوْمًا
ஒரு நாளை
tur'jaʿūna
تُرْجَعُونَ
மீட்கப்படுவீர்கள்
fīhi
فِيهِ
அதில்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
அல்லாஹ்வின் பக்கம்
thumma
ثُمَّ
பிறகு
tuwaffā
تُوَفَّىٰ
முழுமையாக நிறைவேற்றப்படும்
kullu nafsin
كُلُّ نَفْسٍ
எல்லா ஆன்மாக்களுக்கும்
mā kasabat
مَّا كَسَبَتْ
எவற்றை/செய்தன
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
மேலும், ஒரு நாளை பற்றிப் பயப்படுங்கள். அந்நாளில் (கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள் ஆக) நீங்கள் (அனைவரும்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள். ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகள் செய்த செயல்களுக்கு முழுமையாகக் (கூலி) கொடுக்கப்படும். அன்றி, அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௧)
Tafseer
௨௮௨

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُۗ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِۖ وَلَا يَأْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْيَكْتُبْۚ وَلْيُمْلِلِ الَّذِيْ عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔاۗ فَاِنْ كَانَ الَّذِيْ عَلَيْهِ الْحَقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِۗ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَۤاءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰىۗ وَلَا يَأْبَ الشُّهَدَۤاءُ اِذَا مَا دُعُوْا ۗ وَلَا تَسْـَٔمُوْٓا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖۗ ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰىٓ اَلَّا تَرْتَابُوْٓا اِلَّآ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَاۗ وَاَشْهِدُوْٓا اِذَا تَبَايَعْتُمْ ۖ وَلَا يُضَاۤرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ ەۗ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌۢ بِكُمْ ۗ وَاتَّقُوا اللّٰهَ ۗ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ ۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٢٨٢

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே
idhā tadāyantum
إِذَا تَدَايَنتُم
நீங்கள் வியாபாரம் செய்தால்
bidaynin
بِدَيْنٍ
கடனுக்கு
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
ஒரு தவணை வரை
musamman
مُّسَمًّى
குறிப்பிட்ட
fa-uk'tubūhu
فَٱكْتُبُوهُۚ
அதை எழுதுங்கள்
walyaktub
وَلْيَكْتُب
இன்னும் எழுதவும்
baynakum
بَّيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
kātibun
كَاتِبٌۢ
எழுதுபவர்
bil-ʿadli
بِٱلْعَدْلِۚ
நீதியாக
walā yaba
وَلَا يَأْبَ
மறுக்க வேண்டாம்
kātibun
كَاتِبٌ
எழுதுபவர்
an yaktuba
أَن يَكْتُبَ
அவர் எழுத
kamā ʿallamahu
كَمَا عَلَّمَهُ
அதை கற்பித்துள்ளதால்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
falyaktub
فَلْيَكْتُبْ
ஆகவே அவர் எழுதவும்
walyum'lili
وَلْيُمْلِلِ
இன்னும் வாசகம் கூறவும்
alladhī ʿalayhi
ٱلَّذِى عَلَيْهِ
எவர்/அவர் மீது
l-ḥaqu
ٱلْحَقُّ
கடமை (கடன்)
walyattaqi
وَلْيَتَّقِ
இன்னும் அவர் அஞ்சவும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbahu
رَبَّهُۥ
அவருடைய இறைவன்
walā yabkhas
وَلَا يَبْخَسْ
இன்னும் அவர் குறைக்க வேண்டாம்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
shayan
شَيْـًٔاۚ
எதையும்
fa-in kāna
فَإِن كَانَ
இருந்தால்
alladhī
ٱلَّذِى
எவர்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-ḥaqu
ٱلْحَقُّ
கடமை (கடன்)
safīhan
سَفِيهًا
அறிவு முதிர்ச்சியற்றவராக
aw
أَوْ
அல்லது
ḍaʿīfan
ضَعِيفًا
பலவீனராக
aw
أَوْ
அல்லது
lā yastaṭīʿu
لَا يَسْتَطِيعُ
இயலமாட்டார்
an yumilla
أَن يُمِلَّ
வாசகம் கூற
huwa
هُوَ
அவர்
falyum'lil
فَلْيُمْلِلْ
வாசகம் கூறவும்
waliyyuhu
وَلِيُّهُۥ
அவருடைய பொறுப்பாளர்
bil-ʿadli
بِٱلْعَدْلِۚ
நீதியாக
wa-is'tashhidū
وَٱسْتَشْهِدُوا۟
இன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள்
shahīdayni
شَهِيدَيْنِ
இரண்டு சாட்சிகளை
min
مِن
இருந்து
rijālikum
رِّجَالِكُمْۖ
உங்கள் ஆண்கள்
fa-in lam yakūnā
فَإِن لَّمْ يَكُونَا
அவ்விருவரும் இல்லையென்றால்
rajulayni
رَجُلَيْنِ
இரண்டு ஆண்களாக
farajulun
فَرَجُلٌ
ஓர் ஆண்
wa-im'ra-atāni
وَٱمْرَأَتَانِ
இன்னும் இரண்டுபெண்கள்
mimman tarḍawna
مِمَّن تَرْضَوْنَ
எவர்களில்/திருப்தியடைகிறீர்கள்
mina l-shuhadāi
مِنَ ٱلشُّهَدَآءِ
சாட்சிகளிலிருந்து
an taḍilla
أَن تَضِلَّ
மறந்து விடுவாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
fatudhakkira
فَتُذَكِّرَ
எனவே நினைவூட்டுவாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
அவ்விருவரில் ஒருத்தி
l-ukh'rā
ٱلْأُخْرَىٰۚ
மற்றொருத்திக்கு
walā yaba
وَلَا يَأْبَ
இன்னும் மறுக்கவேண்டாம்
l-shuhadāu
ٱلشُّهَدَآءُ
சாட்சிகள்
idhā mā duʿū
إِذَا مَا دُعُوا۟ۚ
அவர்கள் அழைக்கப்படும் போது
walā tasamū
وَلَا تَسْـَٔمُوٓا۟
இன்னும் சோம்பல்படாதீர்கள்
an taktubūhu
أَن تَكْتُبُوهُ
அதை நீங்கள்எழுத
ṣaghīran
صَغِيرًا
சிறியது
aw
أَوْ
அல்லது
kabīran
كَبِيرًا
பெரியது
ilā
إِلَىٰٓ
வரை
ajalihi
أَجَلِهِۦۚ
அதனுடைய தவணை
dhālikum
ذَٰلِكُمْ
அது
aqsaṭu
أَقْسَطُ
மிக நீதியானது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wa-aqwamu
وَأَقْوَمُ
இன்னும் அதிகம் உறுதியானது
lilshahādati
لِلشَّهَٰدَةِ
சாட்சியத்திற்கு
wa-adnā
وَأَدْنَىٰٓ
இன்னும் நெருக்கமானது
allā tartābū
أَلَّا تَرْتَابُوٓا۟ۖ
நீங்கள் சந்தேகப்படாமலிருக்க
illā an takūna
إِلَّآ أَن تَكُونَ
தவிர/இருப்பது
tijāratan
تِجَٰرَةً
வியாபாரமாக
ḥāḍiratan
حَاضِرَةً
ரொக்கமான
tudīrūnahā
تُدِيرُونَهَا
அதை நடத்துகிறீர்கள்
baynakum
بَيْنَكُمْ
உங்கள் மத்தியில்
falaysa
فَلَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
allā taktubūhā
أَلَّا تَكْتُبُوهَاۗ
அதை நீங்கள் எழுதாமலிருப்பது
wa-ashhidū
وَأَشْهِدُوٓا۟
இன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள்
idhā tabāyaʿtum
إِذَا تَبَايَعْتُمْۚ
நீங்கள் வியாபாரம் செய்தால்
walā yuḍārra
وَلَا يُضَآرَّ
இன்னும் துன்புறுத்தப்பட மாட்டார்
kātibun
كَاتِبٌ
எழுதுபவர்
walā shahīdun
وَلَا شَهِيدٌۚ
இன்னும் சாட்சி
wa-in tafʿalū
وَإِن تَفْعَلُوا۟
நீங்கள் செய்தால்
fa-innahu
فَإِنَّهُۥ
நிச்சயமாக அது
fusūqun
فُسُوقٌۢ
பெரும் பாவம்
bikum
بِكُمْۗ
உங்களுக்கு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்வை
wayuʿallimukumu
وَيُعَلِّمُكُمُ
உங்களுக்குக் கற்பிப்பான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(ôமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௨)
Tafseer
௨௮௩

۞ وَاِنْ كُنْتُمْ عَلٰى سَفَرٍ وَّلَمْ تَجِدُوْا كَاتِبًا فَرِهٰنٌ مَّقْبُوْضَةٌ ۗفَاِنْ اَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِى اؤْتُمِنَ اَمَانَتَهٗ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ ۗ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَۗ وَمَنْ يَّكْتُمْهَا فَاِنَّهٗٓ اٰثِمٌ قَلْبُهٗ ۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ࣖ ٢٨٣

wa-in kuntum
وَإِن كُنتُمْ
இன்னும் நீங்கள்இருந்தால்
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
walam tajidū
وَلَمْ تَجِدُوا۟
இன்னும் நீங்கள்பெறவில்லை
kātiban
كَاتِبًا
ஓர் எழுதுபவரை
farihānun
فَرِهَٰنٌ
அடமானங்கள்
maqbūḍatun
مَّقْبُوضَةٌۖ
கைப்பற்றப்பட்டது
fa-in amina
فَإِنْ أَمِنَ
நம்பினால்
baʿḍukum
بَعْضُكُم
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًا
சிலரை
falyu-addi
فَلْيُؤَدِّ
நிறைவேற்றவும்
alladhī
ٱلَّذِى
எவர்
u'tumina
ٱؤْتُمِنَ
நம்பப்பட்டார்
amānatahu
أَمَٰنَتَهُۥ
அவருடைய நம்பிக்கையை
walyattaqi
وَلْيَتَّقِ
இன்னும் அவர் அஞ்சவும்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbahu
رَبَّهُۥۗ
அவருடையஇறைவன்
walā taktumū
وَلَا تَكْتُمُوا۟
இன்னும் மறைக்காதீர்கள்
l-shahādata
ٱلشَّهَٰدَةَۚ
சாட்சியத்தை
waman
وَمَن
இன்னும் யார்
yaktum'hā
يَكْتُمْهَا
அதை மறைப்பார்
fa-innahu
فَإِنَّهُۥٓ
நிச்சயமாக அவர்
āthimun
ءَاثِمٌ
பாவியாகிவிடும்
qalbuhu
قَلْبُهُۥۗ
அவனுடைய உள்ளம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā
بِمَا
எதை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்பத் தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௩)
Tafseer
௨௮௪

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ۗ وَاِنْ تُبْدُوْا مَا فِيْٓ اَنْفُسِكُمْ اَوْ تُخْفُوْهُ يُحَاسِبْكُمْ بِهِ اللّٰهُ ۗ فَيَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ ۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢٨٤

lillahi
لِّلَّهِ
அல்லாஹ்வுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்உள்ளவை
wa-in tub'dū
وَإِن تُبْدُوا۟
இன்னும் நீங்கள் வெளிப்படுத்தினால்
mā fī anfusikum
مَا فِىٓ أَنفُسِكُمْ
உங்கள் உள்ளங்களில் உள்ளதை
aw tukh'fūhu
أَوْ تُخْفُوهُ
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
yuḥāsib'kum
يُحَاسِبْكُم
உங்களுக்கு கூலி கொடுப்பான்
bihi
بِهِ
அதற்காக
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
fayaghfiru
فَيَغْفِرُ
ஆகவே மன்னிப்பான்
liman
لِمَن
எவருக்கு
yashāu
يَشَآءُ
நாடுகிறான்
wayuʿadhibu
وَيُعَذِّبُ
இன்னும் வேதனை செய்வான்
man
مَن
எவரை
yashāu
يَشَآءُۗ
நாடுகிறான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கு உரியனவே! உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் அல்லது மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களைக் கேள்வி கேட்பான். அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; விரும்பியவர்களை வேதனை செய்வான். அன்றி, அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௪)
Tafseer
௨௮௫

اٰمَنَ الرَّسُوْلُ بِمَآ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَالْمُؤْمِنُوْنَۗ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰۤىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖۗ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ ۗ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ ٢٨٥

āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
l-rasūlu
ٱلرَّسُولُ
தூதர்
bimā unzila
بِمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதை
ilayhi
إِلَيْهِ
தமக்கு
min
مِن
இருந்து
rabbihi
رَّبِّهِۦ
தமது இறைவன்
wal-mu'minūna
وَٱلْمُؤْمِنُونَۚ
இன்னும் நம்பிக்கையாளர்கள்
kullun
كُلٌّ
எல்லோரும்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wamalāikatihi
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் அவனுடைய வானவர்கள்
wakutubihi
وَكُتُبِهِۦ
இன்னும் அவனுடைய வேதங்கள்
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்கள்
lā nufarriqu
لَا نُفَرِّقُ
பிரிவினை காட்டமாட்டோம்
bayna aḥadin
بَيْنَ أَحَدٍ
எவருக்கு மத்தியிலும்
min
مِّن
இருந்து
rusulihi
رُّسُلِهِۦۚ
அவனுடையதூதர்கள்
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
samiʿ'nā
سَمِعْنَا
செவியுற்றோம்
wa-aṭaʿnā
وَأَطَعْنَاۖ
இன்னும் கட்டுப்பட்டோம்
ghuf'rānaka
غُفْرَانَكَ
உன் மன்னிப்பை
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
wa-ilayka
وَإِلَيْكَ
இன்னும் உன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௫)
Tafseer
௨௮௬

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ۗ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ اِنْ نَّسِيْنَآ اَوْ اَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖۚ وَاعْفُ عَنَّاۗ وَاغْفِرْ لَنَاۗ وَارْحَمْنَا ۗ اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ࣖ ٢٨٦

lā yukallifu
لَا يُكَلِّفُ
சிரமப்படுத்தமாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nafsan
نَفْسًا
ஓர் ஆன்மாவை
illā
إِلَّا
தவிர
wus'ʿahā
وُسْعَهَاۚ
அதன் வசதி/சக்தி
lahā
لَهَا
அதற்கு
mā kasabat
مَا كَسَبَتْ
அது செய்தது
waʿalayhā
وَعَلَيْهَا
இன்னும் அதன் மீது
mā ik'tasabat
مَا ٱكْتَسَبَتْۗ
அது செய்தது
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
lā tuākhidh'nā
لَا تُؤَاخِذْنَآ
எங்களைத் தண்டிக்காதே
in nasīnā
إِن نَّسِينَآ
நாங்கள் மறந்தால்
aw
أَوْ
அல்லது
akhṭanā
أَخْطَأْنَاۚ
நாங்கள் தவறிழைத்தால்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
walā taḥmil
وَلَا تَحْمِلْ
இன்னும் சுமத்தாதே
ʿalaynā
عَلَيْنَآ
எங்கள் மீது
iṣ'ran
إِصْرًا
கடினமான சுமையை
kamā
كَمَا
போன்று
ḥamaltahu
حَمَلْتَهُۥ
அதைச் சுமத்தினாய்
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablinā
مِن قَبْلِنَاۚ
எங்களுக்கு முன்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
walā tuḥammil'nā
وَلَا تُحَمِّلْنَا
இன்னும் எங்களை சுமக்க வைக்காதே
مَا
எது
lā ṭāqata
لَا طَاقَةَ
அறவே ஆற்றல் இல்லை
lanā
لَنَا
எங்களுக்கு
bihi
بِهِۦۖ
அதற்கு
wa-uʿ'fu
وَٱعْفُ
இன்னும் (பிழைகளை) அழித்தருள்
ʿannā
عَنَّا
எங்களை விட்டு
wa-igh'fir
وَٱغْفِرْ
இன்னும் மன்னித்தருள்
lanā
لَنَا
எங்களுக்கு
wa-ir'ḥamnā anta
وَٱرْحَمْنَآۚ أَنتَ
இன்னும் எங்களுக்கு கருணைபுரி / நீ
mawlānā
مَوْلَىٰنَا
எங்கள் தலைவன்
fa-unṣur'nā
فَٱنصُرْنَا
ஆகவே நீஎங்களுக்கு உதவு
ʿalā l-qawmi
عَلَى ٱلْقَوْمِ
கூட்டத்திற்கு எதிராக
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக்கொண்ட நன்மை அவைகளுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவைகளுக்கே (கேடு விளைவிக்கும்). "எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்துவிட்டாலும் அல்லது அதில் தவறிழைத்துவிட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்திவிடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!) எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக! ([௨] ஸூரத்துல் பகரா: ௨௮௬)
Tafseer