Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௨௮௨

Qur'an Surah Al-Baqarah Verse 282

ஸூரத்துல் பகரா [௨]: ௨௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُۗ وَلْيَكْتُبْ بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِۖ وَلَا يَأْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ فَلْيَكْتُبْۚ وَلْيُمْلِلِ الَّذِيْ عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔاۗ فَاِنْ كَانَ الَّذِيْ عَلَيْهِ الْحَقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِۗ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَۤاءِ اَنْ تَضِلَّ اِحْدٰىهُمَا فَتُذَكِّرَ اِحْدٰىهُمَا الْاُخْرٰىۗ وَلَا يَأْبَ الشُّهَدَۤاءُ اِذَا مَا دُعُوْا ۗ وَلَا تَسْـَٔمُوْٓا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖۗ ذٰلِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰىٓ اَلَّا تَرْتَابُوْٓا اِلَّآ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَاۗ وَاَشْهِدُوْٓا اِذَا تَبَايَعْتُمْ ۖ وَلَا يُضَاۤرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ ەۗ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌۢ بِكُمْ ۗ وَاتَّقُوا اللّٰهَ ۗ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ ۗ وَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (البقرة : ٢)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe[d]!
நம்பிக்கையாளர்களே
idhā tadāyantum
إِذَا تَدَايَنتُم
When you contract with one another
நீங்கள் வியாபாரம் செய்தால்
bidaynin
بِدَيْنٍ
any debt
கடனுக்கு
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
for a term
ஒரு தவணை வரை
musamman
مُّسَمًّى
fixed
குறிப்பிட்ட
fa-uk'tubūhu
فَٱكْتُبُوهُۚ
then write it
அதை எழுதுங்கள்
walyaktub
وَلْيَكْتُب
And let write
இன்னும் எழுதவும்
baynakum
بَّيْنَكُمْ
between you
உங்களுக்கு மத்தியில்
kātibun
كَاتِبٌۢ
a scribe
எழுதுபவர்
bil-ʿadli
بِٱلْعَدْلِۚ
in justice
நீதியாக
walā yaba
وَلَا يَأْبَ
And not (should) refuse
மறுக்க வேண்டாம்
kātibun
كَاتِبٌ
a scribe
எழுதுபவர்
an yaktuba
أَن يَكْتُبَ
that he writes
அவர் எழுத
kamā ʿallamahu
كَمَا عَلَّمَهُ
as (has) taught him
அதை கற்பித்துள்ளதால்
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்
falyaktub
فَلْيَكْتُبْ
So let him write
ஆகவே அவர் எழுதவும்
walyum'lili
وَلْيُمْلِلِ
and let dictate
இன்னும் வாசகம் கூறவும்
alladhī ʿalayhi
ٱلَّذِى عَلَيْهِ
the one on whom
எவர்/அவர் மீது
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the right
கடமை (கடன்)
walyattaqi
وَلْيَتَّقِ
and let him fear
இன்னும் அவர் அஞ்சவும்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
rabbahu
رَبَّهُۥ
his Lord
அவருடைய இறைவன்
walā yabkhas
وَلَا يَبْخَسْ
and (let him) not diminish
இன்னும் அவர் குறைக்க வேண்டாம்
min'hu
مِنْهُ
from it
அதிலிருந்து
shayan
شَيْـًٔاۚ
anything
எதையும்
fa-in kāna
فَإِن كَانَ
Then if is
இருந்தால்
alladhī
ٱلَّذِى
the one
எவர்
ʿalayhi
عَلَيْهِ
on him
அவர் மீது
l-ḥaqu
ٱلْحَقُّ
(is) the right
கடமை (கடன்)
safīhan
سَفِيهًا
(of) limited understanding
அறிவு முதிர்ச்சியற்றவராக
aw
أَوْ
or
அல்லது
ḍaʿīfan
ضَعِيفًا
weak
பலவீனராக
aw
أَوْ
or
அல்லது
lā yastaṭīʿu
لَا يَسْتَطِيعُ
not capable
இயலமாட்டார்
an yumilla
أَن يُمِلَّ
that (can) dictate
வாசகம் கூற
huwa
هُوَ
he
அவர்
falyum'lil
فَلْيُمْلِلْ
then let dictate
வாசகம் கூறவும்
waliyyuhu
وَلِيُّهُۥ
his guardian
அவருடைய பொறுப்பாளர்
bil-ʿadli
بِٱلْعَدْلِۚ
with justice
நீதியாக
wa-is'tashhidū
وَٱسْتَشْهِدُوا۟
And call for evidence
இன்னும் சாட்சியாக்கத் தேடுங்கள்
shahīdayni
شَهِيدَيْنِ
two witnesses
இரண்டு சாட்சிகளை
min
مِن
among
இருந்து
rijālikum
رِّجَالِكُمْۖ
your men
உங்கள் ஆண்கள்
fa-in lam yakūnā
فَإِن لَّمْ يَكُونَا
And if not there are
அவ்விருவரும் இல்லையென்றால்
rajulayni
رَجُلَيْنِ
two men
இரண்டு ஆண்களாக
farajulun
فَرَجُلٌ
then one man
ஓர் ஆண்
wa-im'ra-atāni
وَٱمْرَأَتَانِ
and two women
இன்னும் இரண்டுபெண்கள்
mimman tarḍawna
مِمَّن تَرْضَوْنَ
of whom you agree
எவர்களில்/திருப்தியடைகிறீர்கள்
mina l-shuhadāi
مِنَ ٱلشُّهَدَآءِ
of [the] witnesses
சாட்சிகளிலிருந்து
an taḍilla
أَن تَضِلَّ
(so) that (if) [she] errs
மறந்து விடுவாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
one of the two
அவ்விருவரில் ஒருத்தி
fatudhakkira
فَتُذَكِّرَ
then will remind
எனவே நினைவூட்டுவாள்
iḥ'dāhumā
إِحْدَىٰهُمَا
one of the two
அவ்விருவரில் ஒருத்தி
l-ukh'rā
ٱلْأُخْرَىٰۚ
the other
மற்றொருத்திக்கு
walā yaba
وَلَا يَأْبَ
And not (should) refuse
இன்னும் மறுக்கவேண்டாம்
l-shuhadāu
ٱلشُّهَدَآءُ
the witnesses
சாட்சிகள்
idhā mā duʿū
إِذَا مَا دُعُوا۟ۚ
when that they are called
அவர்கள் அழைக்கப்படும் போது
walā tasamū
وَلَا تَسْـَٔمُوٓا۟
And not (be) weary
இன்னும் சோம்பல்படாதீர்கள்
an taktubūhu
أَن تَكْتُبُوهُ
that you write it
அதை நீங்கள்எழுத
ṣaghīran
صَغِيرًا
small
சிறியது
aw
أَوْ
or
அல்லது
kabīran
كَبِيرًا
large
பெரியது
ilā
إِلَىٰٓ
for
வரை
ajalihi
أَجَلِهِۦۚ
its term
அதனுடைய தவணை
dhālikum
ذَٰلِكُمْ
That
அது
aqsaṭu
أَقْسَطُ
(is) more just
மிக நீதியானது
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
near Allah
அல்லாஹ்விடம்
wa-aqwamu
وَأَقْوَمُ
and more upright
இன்னும் அதிகம் உறுதியானது
lilshahādati
لِلشَّهَٰدَةِ
for evidence
சாட்சியத்திற்கு
wa-adnā
وَأَدْنَىٰٓ
and nearer
இன்னும் நெருக்கமானது
allā tartābū
أَلَّا تَرْتَابُوٓا۟ۖ
that not you (have) doubt
நீங்கள் சந்தேகப்படாமலிருக்க
illā an takūna
إِلَّآ أَن تَكُونَ
except that be
தவிர/இருப்பது
tijāratan
تِجَٰرَةً
a transaction
வியாபாரமாக
ḥāḍiratan
حَاضِرَةً
present
ரொக்கமான
tudīrūnahā
تُدِيرُونَهَا
you carry out
அதை நடத்துகிறீர்கள்
baynakum
بَيْنَكُمْ
among you
உங்கள் மத்தியில்
falaysa
فَلَيْسَ
then not
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
on you
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
any sin
குற்றம்
allā taktubūhā
أَلَّا تَكْتُبُوهَاۗ
that not you write it
அதை நீங்கள் எழுதாமலிருப்பது
wa-ashhidū
وَأَشْهِدُوٓا۟
And take witness
இன்னும் சாட்சியை ஏற்படுத்துங்கள்
idhā tabāyaʿtum
إِذَا تَبَايَعْتُمْۚ
when you make commercial transaction
நீங்கள் வியாபாரம் செய்தால்
walā yuḍārra
وَلَا يُضَآرَّ
And not (should) be harmed
இன்னும் துன்புறுத்தப்பட மாட்டார்
kātibun
كَاتِبٌ
(the) scribe
எழுதுபவர்
walā shahīdun
وَلَا شَهِيدٌۚ
and not (the) witness
இன்னும் சாட்சி
wa-in tafʿalū
وَإِن تَفْعَلُوا۟
and if you do
நீங்கள் செய்தால்
fa-innahu
فَإِنَّهُۥ
then indeed it
நிச்சயமாக அது
fusūqun
فُسُوقٌۢ
(is) sinful conduct
பெரும் பாவம்
bikum
بِكُمْۗ
for you
உங்களுக்கு
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۖ
Allah
அல்லாஹ்வை
wayuʿallimukumu
وَيُعَلِّمُكُمُ
And teaches
உங்களுக்குக் கற்பிப்பான்
l-lahu
ٱللَّهُۗ
Allah
அல்லாஹ்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Yaa ayyuhal lazeena aamanoo izaa tadaayantum bidinin ilaa ajalimmusamman faktubooh; walyaktub bainakum kaatibum bil'adl; wa laa yaaba kaatibun ai yaktuba kamaa 'allamahul laah; falyaktub walyumlilil lazee 'alaihil haqqu walyattaqil laaha rabbahoo wa laa yabkhas minhu shai'aa; fa in kaanal lazee 'alaihil lhaqqu safeehan aw da'eefan aw laa yastatee'u ai yumilla huwa falyumlil waliyyuhoo bil'adl; wastash hidoo shaheedaini mir rijaalikum fa il lam yakoonaa rajulaini farajulunw wamra ataani mimman tardawna minash shuhadaaa'i an tadilla ihdaahumaa fatuzakkira ihdaahumal ukhraa; wa laa yaabash shuhadaaa'u izaa maadu'oo; wa laa tas'amooo an taktuboohu sagheeran awkabeeran ilaaa ajalih; zaalikum aqsatu 'indal laahi wa aqwamu lishshahaadati wa adnaaa allaa tartaabooo illaaa an takoona tijaaratan haadiratan tudeeroonahaa bainakum falaisa 'alaikum junaahun allaa taktuboohan; wa ashidooo izaa tabaaya'tum; wa laa yudaaarra kaatibunw wa laa shaheed; wa in taf'aloo fa innahoo fusooqum bikum; wattaqul laaha wa yu'allimu kumul laah; wallaahu bikulli shai'in 'Aleem (QS. al-Baq̈arah:282)

English Sahih International:

O you who have believed, when you contract a debt for a specified term, write it down. And let a scribe write [it] between you in justice. Let no scribe refuse to write as Allah has taught him. So let him write and let the one who has the obligation [i.e., the debtor] dictate. And let him fear Allah, his Lord, and not leave anything out of it. But if the one who has the obligation is of limited understanding or weak or unable to dictate himself, then let his guardian dictate in justice. And bring to witness two witnesses from among your men. And if there are not two men [available], then a man and two women from those whom you accept as witnesses – so that if one of them [i.e., the women] errs, then the other can remind her. And let not the witnesses refuse when they are called upon. And do not be [too] weary to write it, whether it is small or large, for its [specified] term. That is more just in the sight of Allah and stronger as evidence and more likely to prevent doubt between you, except when it is an immediate transaction which you conduct among yourselves. For [then] there is no blame upon you if you do not write it. And take witnesses when you conclude a contract. Let no scribe be harmed or any witness. For if you do so, indeed, it is [grave] disobedience in you. And fear Allah. And Allah teaches you. And Allah is Knowing of all things. (QS. Al-Baqarah, Ayah ௨௮௨)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறித்த தவணையின் மீது (உங்களுக்குள்) கடன் கொடுத்துக் கொண்டால் அதை எழுதிக் கொள்ளுங்கள். தவிர, (கடன் கொடுத்தவனோ அல்லது வாங்கியவனோ) உங்களில் (எவர் எழுதியபோதிலும் அதை) எழுதுபவர் நீதமாகவே எழுதவும். (அவ்விருவரும் எழுத முடியாமல், எழுத்தாளரிடம் கோரினால்) எழுத்தாளர் (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவருக்கு அறிவித்திருக்கிறபடி எழுதிக் கொடுக்க மறுக்க வேண்டாம்; அவர் எழுதிக் கொடுக்கவும். தவிர, கடன் வாங்கியவரோ (கடன் பத்திரத்தின்) வாசகத்தைக் கூறவும். (வாசகம் கூறுவதிலும் அதை எழுதுவதிலும்) தன் இறைவனாகிய அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளவும். ஆகவே, அதில் யாதொன்றையும் குறைத்துவிட வேண்டாம். (வாசகம் கூறவேண்டிய) கடன் வாங்கியவர், அறிவற்றவராக அல்லது (வாசகம் கூற) இயலாத (வயோதிகராக அல்லது சிறு)வனாக அல்லது தானே வாசகம் சொல்ல சக்தியற்ற (ஊமை போன்ற)வராகவோ இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமான வாசகம் கூறவும். மேலும், நீங்கள் சாட்சியாக (அங்கீகரிக்க)க் கூடிய உங்கள் ஆண்களில் (நேர்மையான) இருவரை (அக்கடனுக்குச்) சாட்சியாக்குங்கள். அவ்வாறு (சாட்சியாக்க வேண்டிய) இருவரும் ஆண்பாலராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்கக் கூடிய இரு பெண்களை (சாட்சியாக்க வேண்டும். ஏனென்றால், பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால்) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்துவிட்டாலும் மற்ற பெண் அவளுக்கு (அதனை) ஞாபகமூட்டுவதற்காக (இவ்வாறு செய்யவும்). சாட்சிகள் (அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கூற) அழைக்கப்படும்போது (சாட்சி கூற) மறுக்க வேண்டாம். அன்றி (கடன்) சிறிதாயினும் பெரிதாயினும் (உடனுக்குடன் எழுதிக் கொள்ளவும். அதன்) தவணை (வரும்) வரையில் அதனை எழுத(ôமல்) சோம்பல்பட்டு இருந்துவிடாதீர்கள். கடனை ஒழுங்காக எழுதிக் கொள்ளவும். இது அல்லாஹ்விடத்தில் வெகு நீதியான தாகவும், சாட்சியத்திற்கு வெகு உறுதியானதாகவும் (கடனின் தொகையையோ அல்லது தவணையையோ பற்றி) நீங்கள் சந்தேகப்படாமல் இருக்க மிக்க பக்க(பல)மாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் ரொக்கமாக நடத்திக் கொள்ளும் வர்த்தகமாயிருந்தால் அதனை நீங்கள் எழுதிக் கொள்ளாவிட்டாலும் அதனால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும், (ரொக்கமாக) நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டபோதிலும் அதற்கும் சாட்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அன்றி (தவறாக எழுதுமாறு) எழுத்தாளனையோ (பொய் கூறும்படி) சாட்சியையோ துன்புறுத்தக் கூடாது. (அவ்வாறு) நீங்கள் துன்புறுத்தினால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். ஆதலால் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (கொடுக்கல் வாங்கலைப் பற்றிய தன்னுடைய விதிகளை) உங்களுக்கு (இவ்வாறெல்லாம்) கற்றுக் கொடுக்கின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன். (ஸூரத்துல் பகரா, வசனம் ௨௮௨)

Jan Trust Foundation

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதியாக எழுதவும். எழுதுபவர் அல்லாஹ் அவருக்கு கற்பித்துள்ளதால் எழுத மறுக்க வேண்டாம். ஆகவே, அவர் எழுதவும். கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். கடன் வாங்கியவர், அறிவு முதிர்ச்சியற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதியாக வாசகம் கூறவும். உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதியானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணையைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். (ஆனால்,) நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாயிருந்தால் தவிர, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். எழுத்தாளரோ சாட்சியோ துன்புறுத்தப்பட மாட்டார். நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.