Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 23

Al-Baqarah

(al-Baq̈arah)

௨௨௧

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ ۗ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ۗ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْ ۗ اُولٰۤىِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ࣖ ٢٢١

walā tankiḥū
وَلَا تَنكِحُوا۟
மணக்காதீர்கள்
l-mush'rikāti
ٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கும் பெண்களை
ḥattā
حَتَّىٰ
வரை
yu'minna
يُؤْمِنَّۚ
அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
wala-amatun
وَلَأَمَةٌ
திட்டமாக ஓர் அடிமைப் பெண்
mu'minatun
مُّؤْمِنَةٌ
(பெண்) நம்பிக்கையாளர்
khayrun
خَيْرٌ
சிறந்தவள்
min
مِّن
விட
mush'rikatin
مُّشْرِكَةٍ
இணைவைப்பவள்
walaw aʿjabatkum
وَلَوْ أَعْجَبَتْكُمْۗ
அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே!
walā tunkiḥū
وَلَا تُنكِحُوا۟
இன்னும் மணமுடித்துக் கொடுக்காதீர்கள்
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَ
இணை வைப்பவர்களுக்கு
ḥattā yu'minū
حَتَّىٰ يُؤْمِنُوا۟ۚ
அவர்கள் நம்பிக்கை கொள்கிறவரை
walaʿabdun
وَلَعَبْدٌ
திட்டமாக ஓர்அடிமை
mu'minun
مُّؤْمِنٌ
நம்பிக்கையாளர்
khayrun
خَيْرٌ
சிறந்தவர்
min
مِّن
விட
mush'rikin
مُّشْرِكٍ
இணைவைப்பவன்
walaw aʿjabakum
وَلَوْ أَعْجَبَكُمْۗ
அவன் கவர்ந்தாலும் சரியே/உங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yadʿūna
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
ilā l-nāri
إِلَى ٱلنَّارِۖ
நரகத்திற்கு
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
yadʿū
يَدْعُوٓا۟
அழைக்கிறான்
ilā l-janati
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
wal-maghfirati
وَٱلْمَغْفِرَةِ
இன்னும் மன்னிப்பு
bi-idh'nihi
بِإِذْنِهِۦۖ
அவனின் கட்டளைக் கொண்டு
wayubayyinu
وَيُبَيِّنُ
இன்னும் விவரிக்கிறான்
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் உபதேசம் பெறுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௧)
Tafseer
௨௨௨

وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ ۗ قُلْ هُوَ اَذًىۙ فَاعْتَزِلُوا النِّسَاۤءَ فِى الْمَحِيْضِۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰى يَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَأْتُوْهُنَّ مِنْ حَيْثُ اَمَرَكُمُ اللّٰهُ ۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ ٢٢٢

wayasalūnaka
وَيَسْـَٔلُونَكَ
இன்னும் உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani l-maḥīḍi
عَنِ ٱلْمَحِيضِۖ
மாதவிடாய் பற்றி
qul
قُلْ
கூறுவீராக
huwa
هُوَ
அது
adhan
أَذًى
ஓர் இடையூறு
fa-iʿ'tazilū
فَٱعْتَزِلُوا۟
எனவே விலகிவிடுங்கள்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களைவிட்டு
fī l-maḥīḍi
فِى ٱلْمَحِيضِۖ
மாதவிடாயில்
walā taqrabūhunna
وَلَا تَقْرَبُوهُنَّ
இன்னும் அவர்களுடன் உறவுகொள்ளாதீர்கள்
ḥattā yaṭhur'na
حَتَّىٰ يَطْهُرْنَۖ
அவர்கள் தூய்மையாகும் வரை
fa-idhā taṭahharna
فَإِذَا تَطَهَّرْنَ
அவர்கள் முழுமையாக சுத்தமாகிவிட்டால்
fatūhunna
فَأْتُوهُنَّ
அவர்களிடம் வாருங்கள்
min ḥaythu
مِنْ حَيْثُ
முறைப்படி
amarakumu
أَمَرَكُمُ
உங்களை ஏவினான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-tawābīna
ٱلتَّوَّٰبِينَ
பாவத்திலிருந்து மீளுபவர்களை
wayuḥibbu
وَيُحِبُّ
இன்னும் நேசிக்கிறான்
l-mutaṭahirīna
ٱلْمُتَطَهِّرِينَ
பரிசுத்தமானவர்களை
(நபியே!) மாதவிடாயைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: "அது (அசுத்தமான) ஓர் இடையூறு. எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள். சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்தை விட்டு) வருத்தப்பட்டு மீளுகிறவர்களையும், பரிசுத்தவான்களையும் விரும்புகிறான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௨)
Tafseer
௨௨௩

نِسَاۤؤُكُمْ حَرْثٌ لَّكُمْ ۖ فَأْتُوْا حَرْثَكُمْ اَنّٰى شِئْتُمْ ۖ وَقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ ۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّكُمْ مُّلٰقُوْهُ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ ٢٢٣

nisāukum
نِسَآؤُكُمْ
உங்கள் மனைவிகள்
ḥarthun
حَرْثٌ
விளை நிலங்கள்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
fatū
فَأْتُوا۟
ஆகவே வாருங்கள்
ḥarthakum
حَرْثَكُمْ
உங்கள் விளை நிலங்களுக்கு
annā
أَنَّىٰ
எவ்வாறு
shi'tum
شِئْتُمْۖ
நாடினீர்கள்
waqaddimū
وَقَدِّمُوا۟
இன்னும் முற்படுத்துங்கள்
li-anfusikum
لِأَنفُسِكُمْۚ
உங்களுக்காக
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறியுங்கள்
annakum
أَنَّكُم
நிச்சயமாக நீங்கள்
mulāqūhu
مُّلَٰقُوهُۗ
அவனைச் சந்திக்கக் கூடியவர்கள்
wabashiri
وَبَشِّرِ
இன்னும் நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
உங்கள் மனைவிகள் உங்கள் விளைநிலங்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுடைய பிற்காலத்திற்கு (வேண்டிய சந்ததியை)த் தேடிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள் என்பதையும் உறுதியாக அறிந்து அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். (நபியே! நேர்மையுள்ள) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௩)
Tafseer
௨௨௪

وَلَا تَجْعَلُوا اللّٰهَ عُرْضَةً لِّاَيْمَانِكُمْ اَنْ تَبَرُّوْا وَتَتَّقُوْا وَتُصْلِحُوْا بَيْنَ النَّاسِۗ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٢٤

walā tajʿalū
وَلَا تَجْعَلُوا۟
ஆக்காதீர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿur'ḍatan
عُرْضَةً
வலுவாக
li-aymānikum
لِّأَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களுக்கு
an tabarrū
أَن تَبَرُّوا۟
நீங்கள் நன்மைசெய்ய மாட்டீர்கள்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்
watuṣ'liḥū
وَتُصْلِحُوا۟
இன்னும் நீங்கள் சீர்திருத்தம் செய்ய மாட்டீர்கள்
bayna l-nāsi
بَيْنَ ٱلنَّاسِۗ
மக்களுக்கு மத்தியில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிபவன்
நீங்கள் நன்மை செய்வதற்கோ அல்லது இறைவனை அஞ்சிக்கொள்வதற்கோ அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் செய்து வைப்பதற்கோ உங்களுக்குத் தடையாக ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை இலக்காக்காதீர்கள். அல்லாஹ் (சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (மனதில் உள்ளதை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௪)
Tafseer
௨௨௫

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِيْٓ اَيْمَانِكُمْ وَلٰكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ۗ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ ٢٢٥

lā yuākhidhukumu
لَّا يُؤَاخِذُكُمُ
தண்டிக்கமாட்டான் / உங்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bil-laghwi
بِٱللَّغْوِ
வீணானவற்றிற்காக
fī aymānikum
فِىٓ أَيْمَٰنِكُمْ
உங்கள் சத்தியங்களில்
walākin
وَلَٰكِن
எனினும்
yuākhidhukum
يُؤَاخِذُكُم
தண்டிப்பான்/உங்களை
bimā
بِمَا
எதற்காக
kasabat
كَسَبَتْ
செய்தவற்றிற்காக
qulūbukum
قُلُوبُكُمْۗ
உங்கள் உள்ளங்கள்
wal-lahu ghafūrun
وَٱللَّهُ غَفُورٌ
அல்லாஹ் மகா மன்னிப்பாளன்
ḥalīmun
حَلِيمٌ
பெரும் சகிப்பாளன்
(மனதில் நாட்டமின்றி அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௫)
Tafseer
௨௨௬

لِلَّذِيْنَ يُؤْلُوْنَ مِنْ نِّسَاۤىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍۚ فَاِنْ فَاۤءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٢٢٦

lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
yu'lūna
يُؤْلُونَ
ஈலா செய்கிறார்கள்
min nisāihim
مِن نِّسَآئِهِمْ
தங்கள் மனைவிகளிடம்
tarabbuṣu
تَرَبُّصُ
எதிர்பார்ப்பது
arbaʿati
أَرْبَعَةِ
நான்கு
ashhurin
أَشْهُرٍۖ
மாதங்கள்
fa-in fāū
فَإِن فَآءُو
அவர்கள் மீண்டுவிட்டால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
தங்கள் மனைவிகளுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டவர்களுக்கு நான்கு மாதங்கள் தாமதிக்க அனுமதியுண்டு. ஆகவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்து) கொண்டால் (அல்லாஹ் அவர்களை மன்னித்திடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடைய வனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௬)
Tafseer
௨௨௭

وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ٢٢٧

wa-in ʿazamū
وَإِنْ عَزَمُوا۟
அவர்கள் உறுதிப்படுத்தினால்
l-ṭalāqa
ٱلطَّلَٰقَ
விவாகரத்தை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிபவன்
ஆனால், அவர்கள் (தவணைக்குள் சேராமல்) திருமண முறிவை உறுதிப்படுத்திக் கொண்டால், (அத்தவணைக்குப் பின் "தலாக்" விவாகரத்து ஏற்பட்டுவிடும்.) நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய சத்தியத்தை) செவியுறுபவனாகவும், (அவர்கள் கருதிய "தலாக்"கை) நன்கறிபவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௭)
Tafseer
௨௨௮

وَالْمُطَلَّقٰتُ يَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْۤءٍۗ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِيْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِۗ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِيْ ذٰلِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ۗوَلَهُنَّ مِثْلُ الَّذِيْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِۖ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ۗ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ࣖ ٢٢٨

wal-muṭalaqātu
وَٱلْمُطَلَّقَٰتُ
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்
yatarabbaṣna
يَتَرَبَّصْنَ
அவர்கள் எதிர்பார்ப்பார்கள்
bi-anfusihinna
بِأَنفُسِهِنَّ
தங்களுக்கு
thalāthata
ثَلَٰثَةَ
மூன்று
qurūin
قُرُوٓءٍۚ
மாதவிடாய்களை
walā yaḥillu
وَلَا يَحِلُّ
இன்னும் ஆகுமானதில்லை
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
an yaktum'na
أَن يَكْتُمْنَ
அவர்கள் மறைப்பது
مَا
எது
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī arḥāmihinna
فِىٓ أَرْحَامِهِنَّ
அவர்களுடைய கர்ப்பப்பைகளில்
in kunna
إِن كُنَّ
அவர்கள் இருந்தால்
yu'minna
يُؤْمِنَّ
நம்பிக்கை கொள்கிறார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
இன்னும் இறுதி நாள்
wabuʿūlatuhunna
وَبُعُولَتُهُنَّ
இன்னும் அவர்களின் கணவர்கள்
aḥaqqu
أَحَقُّ
மிக உரிமை உடையவர்(கள்)
biraddihinna
بِرَدِّهِنَّ
அவர்களை மீட்டிக் கொள்வதற்கு
fī dhālika
فِى ذَٰلِكَ
அதில்
in arādū
إِنْ أَرَادُوٓا۟
அவர்கள் விரும்பினால்
iṣ'lāḥan
إِصْلَٰحًاۚ
இணக்கத்தை
walahunna
وَلَهُنَّ
இன்னும் அவர்களுக்கு
mith'lu
مِثْلُ
போன்றே
alladhī
ٱلَّذِى
எது
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
bil-maʿrūfi
بِٱلْمَعْرُوفِۚ
நல்ல முறையில்
walilrrijāli
وَلِلرِّجَالِ
இன்னும் ஆண்களுக்கு
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்கள் மீது
darajatun
دَرَجَةٌۗ
ஓர் உயர்வு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
"தலாக்" கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று (மாத) விடாய்கள் வரும் வரையில் எதிர்பார்த்திருக்கவும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதி கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப் பையில் (சிசுவை) படைத்திருந்தால் அதனை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானது அல்ல. தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௮)
Tafseer
௨௨௯

اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۖ فَاِمْسَاكٌۢ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِيْحٌۢ بِاِحْسَانٍ ۗ وَلَا يَحِلُّ لَكُمْ اَنْ تَأْخُذُوْا مِمَّآ اٰتَيْتُمُوْهُنَّ شَيْـًٔا اِلَّآ اَنْ يَّخَافَآ اَلَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ ۗ فَاِنْ خِفْتُمْ اَلَّا يُقِيْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيْمَا افْتَدَتْ بِهٖ ۗ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚوَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰۤىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ٢٢٩

al-ṭalāqu
ٱلطَّلَٰقُ
விவாகரத்து
marratāni
مَرَّتَانِۖ
இருமுறை
fa-im'sākun
فَإِمْسَاكٌۢ
தடுத்து வைத்தல்
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
aw
أَوْ
அல்லது
tasrīḥun
تَسْرِيحٌۢ
விட்டுவிடுதல்
bi-iḥ'sānin
بِإِحْسَٰنٍۗ
அழகிய முறையில்
walā yaḥillu
وَلَا يَحِلُّ
ஆகுமானதல்ல
lakum
لَكُمْ
உங்களுக்கு
an takhudhū
أَن تَأْخُذُوا۟
நீங்கள் எடுத்துக்கொள்வது
mimmā
مِمَّآ
எவற்றிலிருந்து
ātaytumūhunna
ءَاتَيْتُمُوهُنَّ
அவர்களுக்கு கொடுத்தீர்கள்
shayan illā
شَيْـًٔا إِلَّآ
எதையும்/தவிர
an yakhāfā
أَن يَخَافَآ
இருவரும் அஞ்சுவது
allā yuqīmā
أَلَّا يُقِيمَا
(இருவர்) நிலைநிறுத்த மாட்டார்கள் என
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
fa-in khif'tum
فَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
allā yuqīmā
أَلَّا يُقِيمَا
இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள்
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَا
அவ்விருவர் மீது
fīmā
فِيمَا
எதில்
if'tadat
ٱفْتَدَتْ
விடுவித்தாள்
bihi
بِهِۦۗ
அதன் மூலம்
til'ka
تِلْكَ
இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falā taʿtadūhā
فَلَا تَعْتَدُوهَاۚ
எனவே இவற்றை மீறாதீர்கள்
waman
وَمَن
இன்னும் எவர்(கள்)
yataʿadda
يَتَعَدَّ
மீறுகிறார்(கள்)
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
(ரஜயியாகிய) இந்தத் தலாக்(கை) இருமுறைதான் (கூறலாம்). பின்னும் (தவணைக்குள்) முறைப்படி தடுத்து (மனைவிகளாக) வைத்துக் கொள்ளலாம். அல்லது (அவர்கள் மீது யாதொரு குற்றமும் சுமத்தாமல்) நன்றியுடன் விட்டுவிடலாம். தவிர, நீங்கள் அவர்களுக்கு (வெகுமதியாகவோ, மஹராகவோ) கொடுத்தவைகளிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. (அன்றி இருவரும் சேர்ந்து வாழ்க்கை நடத்த முற்பட்டபோதிலும்) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புக்குள் நிலைத்திருக்க முடியாதென்று இருவருமே பயப்படும் சமயத்தில் (இதற்குப் பஞ்சாயத்தாக இருக்கும்) நீங்களும் அவ்வாறு மெய்யாக பயந்தால் அவள் (கணவனிடமிருந்து) பெற்றுக் கொண்டதிலிருந்து எதையும் (விவாகரத்து நிகழ) பிரதியாகக் கொடுப்பதிலும் (அவன் அதைப் பெற்றுக் கொள்வதிலும்) அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள். எவரேனும் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறினால் நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௨௯)
Tafseer
௨௩௦

فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْۢ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهٗ ۗ فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ اَنْ يَّتَرَاجَعَآ اِنْ ظَنَّآ اَنْ يُّقِيْمَا حُدُوْدَ اللّٰهِ ۗ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَّعْلَمُوْنَ ٢٣٠

fa-in ṭallaqahā
فَإِن طَلَّقَهَا
அடுத்து அவளை அவன் விவாகரத்து செய்தால்
falā taḥillu
فَلَا تَحِلُّ
ஆகுமாக மாட்டாள்
lahu
لَهُۥ
அவனுக்கு
min baʿdu
مِنۢ بَعْدُ
(அதன்) பிறகு
ḥattā tankiḥa
حَتَّىٰ تَنكِحَ
அவள் மணம் புரியும் வரை
zawjan
زَوْجًا
ஒரு கணவனை
ghayrahu
غَيْرَهُۥۗ
அவனல்லாதவன்
fa-in ṭallaqahā
فَإِن طَلَّقَهَا
அவன் அவளை விவாகரத்து செய்தால்
falā junāḥa
فَلَا جُنَاحَ
குற்றமே இல்லை
ʿalayhimā
عَلَيْهِمَآ
அவ்விருவரின் மீது
an yatarājaʿā
أَن يَتَرَاجَعَآ
அவ்விருவரும் மீளுவது
in ẓannā
إِن ظَنَّآ
அவ்விருவரும் எண்ணினால்
an yuqīmā
أَن يُقِيمَا
இருவரும் நிலை நாட்டுவார்கள்
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
watil'ka
وَتِلْكَ
இன்னும் இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
yubayyinuhā
يُبَيِّنُهَا
அவற்றைவிவரிக்கிறான்
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிவார்கள்
(இரண்டு தலாக்குச் சொல்லிய) பின்னர் (மூன்றாவதாகவும்) அவளை அவன் தலாக்குச் சொல்லிவிட்டால் அவனல்லாத (வேறு) கணவனை அவள் மணந்துகொள்ளும் வரையில் அவள் அவனுக்கு ஆகுமானவளல்ல. (ஆனால், அவனல்லாத வேறொருவன் அவளை திருமணம் செய்து) அவனும் அவளைத் தலாக்குக் கூறிவிட்டால், அதன்பின் (அவளும் முதல் கணவனும் ஆகிய) இருவரும் (சேர்ந்து) அல்லாஹ் ஏற்படுத்திய வரம்பை நிலை நிறுத்திவிடலாம் என்று எண்ணினால் அவர்கள் இருவரும் (திரும்பவும் திருமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீண்டுகொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். அறிந்து கொள்ளும் மக்களுக்காக இவற்றை அவன் விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௩௦)
Tafseer