Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 20

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௯௧

وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ وَاَخْرِجُوْهُمْ مِّنْ حَيْثُ اَخْرَجُوْكُمْ وَالْفِتْنَةُ اَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ وَلَا تُقَاتِلُوْهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتّٰى يُقٰتِلُوْكُمْ فِيْهِۚ فَاِنْ قٰتَلُوْكُمْ فَاقْتُلُوْهُمْۗ كَذٰلِكَ جَزَاۤءُ الْكٰفِرِيْنَ ١٩١

wa-uq'tulūhum
وَٱقْتُلُوهُمْ
இன்னும் அவர்களைக் கொல்லுங்கள்
ḥaythu thaqif'tumūhum
حَيْثُ ثَقِفْتُمُوهُمْ
இடம்/அவர்களைப் பார்த்தீர்கள்
wa-akhrijūhum
وَأَخْرِجُوهُم
இன்னும் அவர்களை வெளியேற்றுங்கள்
min ḥaythu akhrajūkum
مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْۚ
அவர்கள் உங்களை வெளியேற்றியவாறே
wal-fit'natu
وَٱلْفِتْنَةُ
இன்னும் இணைவைத்தல்
ashaddu
أَشَدُّ
மிகக் கடுமையானது
mina
مِنَ
விட
l-qatli
ٱلْقَتْلِۚ
கொலை
walā tuqātilūhum
وَلَا تُقَٰتِلُوهُمْ
போர் புரியாதீர்கள்/அவர்களிடம்
ʿinda l-masjidi
عِندَ ٱلْمَسْجِدِ
மஸ்ஜிதின் அருகில்
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனிதமான
ḥattā yuqātilūkum
حَتَّىٰ يُقَٰتِلُوكُمْ
அவர்கள் உங்களிடம் போர் புரியும் வரை
fīhi fa-in qātalūkum
فِيهِۖ فَإِن قَٰتَلُوكُمْ
அதில்/அவர்கள் உங்களிடம் போரிட்டால்
fa-uq'tulūhum
فَٱقْتُلُوهُمْۗ
அவர்களைக் கொல்லுங்கள்
kadhālika jazāu
كَذَٰلِكَ جَزَآءُ
இப்படித்தான்/கூலி
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களின்
ஆகவே (உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையை விட மிகக் கொடியது. ஆனால் (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிய முற்படும் வரையில் நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். அந்த நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இதுவே! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௧)
Tafseer
௧௯௨

فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٩٢

fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
(இதன்) பின்னும் அவர்கள் (உங்களை எதிர்த்து போர் புரியாது) விலகிக்கொண்டால் (நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௨)
Tafseer
௧௯௩

وَقٰتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ ۗ فَاِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ اِلَّا عَلَى الظّٰلِمِيْنَ ١٩٣

waqātilūhum
وَقَٰتِلُوهُمْ
இன்னும் அவர்களிடம் போர் புரியுங்கள்
ḥattā lā takūna
حَتَّىٰ لَا تَكُونَ
நீங்கும் வரை
fit'natun
فِتْنَةٌ
இணைவைத்தல்
wayakūna l-dīnu
وَيَكُونَ ٱلدِّينُ
இன்னும் ஆகும்/வழிபாடு
lillahi
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கு
fa-ini intahaw
فَإِنِ ٱنتَهَوْا۟
அவர்கள் விலகிக் கொண்டால்
falā ʿud'wāna
فَلَا عُدْوَٰنَ
அறவே இல்லை/அத்துமீறல்
illā ʿalā
إِلَّا عَلَى
தவிர/மீது
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
அன்றி, (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரையில் அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௩)
Tafseer
௧௯௪

اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌۗ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ ۖ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ ١٩٤

al-shahru
ٱلشَّهْرُ
மாதம்
l-ḥarāmu
ٱلْحَرَامُ
புனித(மான)
bil-shahri
بِٱلشَّهْرِ
மாதத்திற்குப்பதிலாகும்
l-ḥarāmi
ٱلْحَرَامِ
புனித(மான)
wal-ḥurumātu
وَٱلْحُرُمَٰتُ
இன்னும் புனிதங்கள்
qiṣāṣun
قِصَاصٌۚ
பழிதீர்க்கப்பட வேண்டும்
famani
فَمَنِ
ஆகவே யார்
iʿ'tadā
ٱعْتَدَىٰ
வரம்பு மீறினார்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
fa-iʿ'tadū
فَٱعْتَدُوا۟
வரம்பு மீறுங்கள்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
bimith'li mā iʿ'tadā
بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ
அவர் வரம்பு மீறியது போன்று
ʿalaykum
عَلَيْكُمْۚ
உங்கள் மீது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௪)
Tafseer
௧௯௫

وَاَنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۛ وَاَحْسِنُوْا ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ١٩٥

wa-anfiqū
وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் புரியுங்கள்
fī sabīli l-lahi
فِى سَبِيلِ ٱللَّهِ
அல்லாஹ்வின் பாதையில்
walā tul'qū
وَلَا تُلْقُوا۟
இன்னும் போடாதீர்கள்
bi-aydīkum
بِأَيْدِيكُمْ
உங்கள் கரங்களை
ilā l-tahlukati
إِلَى ٱلتَّهْلُكَةِۛ
அழிவில்
wa-aḥsinū
وَأَحْسِنُوٓا۟ۛ
இன்னும் நல்லறம் புரியுங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥibbu
يُحِبُّ
நேசிக்கிறான்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிவோரை
நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் (தாராளமாகச்) செலவு செய்யுங்கள். தவிர, (போர் சமயத்தில் செலவு செய்யாது) உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி (பிறருக்கு உதவியும்) நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பிறருக்கு) நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௫)
Tafseer
௧௯௬

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ۗ فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِۚ وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهٗ ۗ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ بِهٖٓ اَذًى مِّنْ رَّأْسِهٖ فَفِدْيَةٌ مِّنْ صِيَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ فَاِذَآ اَمِنْتُمْ ۗ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ فِى الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗذٰلِكَ لِمَنْ لَّمْ يَكُنْ اَهْلُهٗ حَاضِرِى الْمَسْجِدِ الْحَرَامِ ۗ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ࣖ ١٩٦

wa-atimmū
وَأَتِمُّوا۟
இன்னும் முழுமையாக்குங்கள்
l-ḥaja
ٱلْحَجَّ
ஹஜ்ஜை
wal-ʿum'rata
وَٱلْعُمْرَةَ
இன்னும் உம்றாவை
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்வுக்காக
fa-in uḥ'ṣir'tum
فَإِنْ أُحْصِرْتُمْ
நீங்கள் தடுக்கப்பட்டால்
famā is'taysara
فَمَا ٱسْتَيْسَرَ
எது/சாத்தியமாகியது
mina
مِنَ
இருந்து
l-hadyi
ٱلْهَدْىِۖ
பலி(கள்)
walā taḥliqū
وَلَا تَحْلِقُوا۟
இன்னும் சிரைக்காதீர்கள்
ruūsakum
رُءُوسَكُمْ
உங்கள் தலைகளை
ḥattā
حَتَّىٰ
வரை
yablugha
يَبْلُغَ
அடைகிறது
l-hadyu
ٱلْهَدْىُ
பலி
maḥillahu
مَحِلَّهُۥۚ
தன் இடத்தை
faman
فَمَن
இன்னும் எவர்
kāna
كَانَ
இருக்கிறார்
minkum
مِنكُم
உங்களில்
marīḍan
مَّرِيضًا
நோயாளியாக
aw
أَوْ
அல்லது
bihi
بِهِۦٓ
அவருக்கு
adhan
أَذًى
ஓர் இடையூறு/காயம், சிரங்கு
min rasihi
مِّن رَّأْسِهِۦ
அவருடையதலையில்
fafid'yatun
فَفِدْيَةٌ
ஆகவே பரிகாரம்
min
مِّن
இருந்து
ṣiyāmin
صِيَامٍ
நோன்பு
aw
أَوْ
அல்லது
ṣadaqatin
صَدَقَةٍ
தர்மம்
aw nusukin
أَوْ نُسُكٍۚ
அல்லது பலி
fa-idhā amintum
فَإِذَآ أَمِنتُمْ
நீங்கள் பாதுகாப்புப் பெற்றால்
faman
فَمَن
இன்னும் எவர்
tamattaʿa
تَمَتَّعَ
சுகம் அனுபவித்தார்
bil-ʿum'rati
بِٱلْعُمْرَةِ
உம்றாவைக் கொண்டு
ilā l-ḥaji
إِلَى ٱلْحَجِّ
ஹஜ்ஜு வரை
famā is'taysara
فَمَا ٱسْتَيْسَرَ
எது/சாத்தியமானது
mina l-hadyi
مِنَ ٱلْهَدْىِۚ
பலியிலிருந்து
faman
فَمَن
எனவே எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
பெறவில்லை
faṣiyāmu
فَصِيَامُ
ஆகவே நோன்பு
thalāthati ayyāmin
ثَلَٰثَةِ أَيَّامٍ
மூன்று நாள்கள்
fī l-ḥaji
فِى ٱلْحَجِّ
ஹஜ்ஜில்
wasabʿatin
وَسَبْعَةٍ
இன்னும் ஏழு
idhā rajaʿtum
إِذَا رَجَعْتُمْۗ
நீங்கள் திரும்பினால்
til'ka ʿasharatun
تِلْكَ عَشَرَةٌ
அவை/பத்து
kāmilatun
كَامِلَةٌۗ
முழுமையான
dhālika liman
ذَٰلِكَ لِمَن
இது/எவருக்கு
lam yakun
لَّمْ يَكُنْ
இருக்கவில்லை
ahluhu
أَهْلُهُۥ
அவருடைய குடும்பம்
ḥāḍirī
حَاضِرِى
வசிப்பவர்களாக
l-masjidi
ٱلْمَسْجِدِ
அல் மஸ்ஜிது
l-ḥarāmi
ٱلْحَرَامِۚ
புனிதமான
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
இன்னும் அறிந்துகொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
shadīdu
شَدِيدُ
மிகக்கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். ஆனால் (மக்கா செல்ல முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டு (ஹஜ்ஜை முழுமையாக்க முடியா)விட்டால் "ஹத்யு" (என்னும் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவை)களில் (உங்களுக்குச்) சாத்தியமானவை பரிகாரமாகும். தவிர, அந்த ஹத்யுக்கள் தாம் செல்ல வேண்டிய (மக்காவிலுள்ள ஹரம் என்னும்) இடத்தை அடையும் வரையில் நீங்கள் உங்கள் தலைமுடியைச் சிரைத்துக் கொள்ளாதீர்கள். ஆயினும், (இஹ்ராம் கட்டிய) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ அல்லது தலையில் (பேன், புண், வலி ஆகியவைகளால்) இடையூறு உள்ளவராகவோ இருந்து (முடியிறக்கிக் கொண்டு) விட்டால், அதற்குப் பரிகாரமாக (அவர் மூன்று) நோன்புகள் நோற்கவும் அல்லது (ஆறு ஏழைகளுக்கு உணவு) தானம் செய்யவும். அல்லது (ஓர் ஆடு) குர்பானி கொடுக்கவும். அன்றி (இஹ்ராம் அணிந்த) நீங்கள் எவ்விதத் தடையுமில்லாது (ஹஜ்ஜு செய்ய) வசதி பெற்றவர்களாக இருந்து (மக்கா சென்ற பின் உங்களில்) எவரேனும் உம்ராவை (மாத்திரம்) செய்துவிட்டு ஹஜ்ஜுக்கு முன்னதாகவே (ஹஜ்ஜுடைய காலத்தில் தடுக்கப்பட்டிருந்த) சுகத்தை அனுபவித்து விட்டால் (அதற்குப்) பரிகாரமாக ஹத்யுக்களில் இயன்றதைக் கொடுக்கவும். ஆனால், (ஹத்யுக்களில் எதையுமே) பெற்றுக் கொள்ளாதவர், ஹஜ்ஜுடைய காலத்தில் மூன்றும் (தன் இருப்பிடம்) திரும்பியபின் ஏழும், ஆக முழுமையாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்கவும். (தடுக்கப்பட்ட சுகத்தை அனுபவிக்கும்) இ(வ்வுரிமையான)து எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமில் (மக்காவில்) குடியிருக்கவில்லையோ அவருக்குத்தான். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௬)
Tafseer
௧௯௭

اَلْحَجُّ اَشْهُرٌ مَّعْلُوْمٰتٌ ۚ فَمَنْ فَرَضَ فِيْهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوْقَ وَلَا جِدَالَ فِى الْحَجِّ ۗ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ يَّعْلَمْهُ اللّٰهُ ۗ وَتَزَوَّدُوْا فَاِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوٰىۖ وَاتَّقُوْنِ يٰٓاُولِى الْاَلْبَابِ ١٩٧

al-ḥaju
ٱلْحَجُّ
ஹஜ்ஜு
ashhurun
أَشْهُرٌ
மாதங்கள்
maʿlūmātun
مَّعْلُومَٰتٌۚ
அறியப்பட்டவை
faman
فَمَن
ஆகவே எவர்
faraḍa
فَرَضَ
கடமையாக்கினார்
fīhinna l-ḥaja
فِيهِنَّ ٱلْحَجَّ
அவற்றில் ஹஜ்ஜை
falā rafatha
فَلَا رَفَثَ
அறவே இல்லை/தாம்பத்திய உறவு
walā fusūqa
وَلَا فُسُوقَ
இன்னும் அறவே இல்லை/தீச்சொல் பேசுதல்
walā jidāla
وَلَا جِدَالَ
இன்னும் அறவே இல்லை/தர்க்கம்
fī l-ḥaji
فِى ٱلْحَجِّۗ
ஹஜ்ஜில்
wamā tafʿalū
وَمَا تَفْعَلُوا۟
நீங்கள் எதைச் செய்தாலும்
min khayrin
مِنْ خَيْرٍ
நன்மையில்
yaʿlamhu
يَعْلَمْهُ
அதை அறிவான்
l-lahu
ٱللَّهُۗ
அல்லாஹ்
watazawwadū
وَتَزَوَّدُوا۟
இன்னும் கட்டுச்சாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
fa-inna
فَإِنَّ
ஆகவே நிச்சயமாக
khayra
خَيْرَ
சிறந்தது
l-zādi
ٱلزَّادِ
கட்டுச்சாதத்தில்
l-taqwā
ٱلتَّقْوَىٰۚ
அல்லாஹ்வை அஞ்சுவதுதான்
wa-ittaqūni
وَٱتَّقُونِ
இன்னும் என்னை அஞ்சுங்கள்
yāulī l-albābi
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவாளிகளே
ஹஜ்ஜு (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜு (மாதத்தின் பத்தாம் தேதி) வரையில் வீடு கூடுதல், தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான். தவிர, (ஹஜ்ஜுடைய பயணத்திற்கு வேண்டிய) உணவுகளை (முன்னதாகவே) தயார்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாக (நீங்கள்) தயார்படுத்திக் கொள்ள வேண்டியவை களில் எல்லாம் மிக மேலானது இறை அச்சத்தைத்தான். ஆதலால் அறிவாளிகளே! நீங்கள் (குறிப்பாக ஹஜ்ஜுடைய காலத்தில்) எனக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௭)
Tafseer
௧௯௮

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ ۗ فَاِذَآ اَفَضْتُمْ مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللّٰهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوْهُ كَمَا هَدٰىكُمْ ۚ وَاِنْ كُنْتُمْ مِّنْ قَبْلِهٖ لَمِنَ الضَّاۤلِّيْنَ ١٩٨

laysa
لَيْسَ
இல்லை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
junāḥun
جُنَاحٌ
குற்றம்
an tabtaghū
أَن تَبْتَغُوا۟
நீங்கள் தேடிக் கொள்வது
faḍlan
فَضْلًا
அருளை
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۚ
உங்கள் இறைவன்
fa-idhā afaḍtum
فَإِذَآ أَفَضْتُم
நீங்கள் புறப்பட்டால்
min
مِّنْ
இருந்து
ʿarafātin
عَرَفَٰتٍ
அரஃபாத்
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿinda
عِندَ
அருகில்
l-mashʿari l-ḥarāmi
ٱلْمَشْعَرِ ٱلْحَرَامِۖ
அல்மஷ்அருல்ஹராம்
wa-udh'kurūhu
وَٱذْكُرُوهُ
இன்னும் அவனை நினைவு கூருங்கள்
kamā hadākum
كَمَا هَدَىٰكُمْ
உங்களை அவன் நேர்வழிப்படுத்தியதற்காக
wa-in
وَإِن
இன்னும் நிச்சயமாக
kuntum
كُنتُم
இருந்தீர்கள்
min qablihi
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
lamina l-ḍālīna
لَمِنَ ٱلضَّآلِّينَ
வழி தவறியவர்களில்தான்
(ஹஜ்ஜு பயணத்தின்போது) நீங்கள் (தொழில் செய்து) உங்கள் இறைவனுடைய அருளை(க் கொண்டு கிடைக்கும் லாபத்தை)த் தேடிக் கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. அன்றி, (ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் "மஷ்அருல் ஹராம்" என்னும் இடத்தில் அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள். தவிர, நீங்கள் இதற்கு முன் வழி தவறியவர்களாக இருந்தபொழுது உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காக பின்னும் அவனைத் "திக்ரு" செய்யுங்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௮)
Tafseer
௧௯௯

ثُمَّ اَفِيْضُوْا مِنْ حَيْثُ اَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٩٩

thumma
ثُمَّ
பிறகு
afīḍū
أَفِيضُوا۟
புறப்படுங்கள்
min ḥaythu
مِنْ حَيْثُ
இடத்திலிருந்து
afāḍa
أَفَاضَ
புறப்பட்டார்(கள்)
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
wa-is'taghfirū
وَٱسْتَغْفِرُوا۟
இன்னும் மன்னிப்புக்கோருங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்விடம்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
பின்னர் மனிதர்கள் திரும்புகின்ற ("முஸ்தலிபா" என்னும்) இடத்திலிருந்து நீங்களும் ("மினா"வுக்குத்) திரும்பிவிடுங்கள். மேலும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௯)
Tafseer
௨௦௦

فَاِذَا قَضَيْتُمْ مَّنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللّٰهَ كَذِكْرِكُمْ اٰبَاۤءَكُمْ اَوْ اَشَدَّ ذِكْرًا ۗ فَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ٢٠٠

fa-idhā qaḍaytum
فَإِذَا قَضَيْتُم
நீங்கள் நிறைவேற்றிவிட்டால்
manāsikakum
مَّنَٰسِكَكُمْ
உங்கள் ஹஜ்ஜு கடமைகளை
fa-udh'kurū
فَٱذْكُرُوا۟
நினைவு கூருங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
kadhik'rikum
كَذِكْرِكُمْ
நீங்கள் நினைவு கூர்ந்ததைப் போல
ābāakum
ءَابَآءَكُمْ
மூதாதைகளை/உங்கள்
aw
أَوْ
அல்லது
ashadda
أَشَدَّ
கடுமையாக
dhik'ran
ذِكْرًاۗ
நினைவு கூர்தல்
famina
فَمِنَ
இன்னும் இருந்து
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
man
مَن
எவர்
yaqūlu
يَقُولُ
கூறுகிறார்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
ātinā
ءَاتِنَا
எங்களுக்குத் தா
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wamā
وَمَا
இல்லை
lahu
لَهُۥ
அவருக்கு
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
min
مِنْ
இருந்து
khalāqin
خَلَٰقٍ
பாக்கியம்
(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வைத் "திக்ரு" (செய்து உங்களுக்கு வேண்டியவைகளையும் அவனிடம் கேட்டுப் பிரார்த்தனை) செய்யுங்கள். (பிரார்த்தனையில்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக!" என்று கோருபவர்களும் மனிதர்களில் உண்டு. ஆனால், இத்தகையவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦௦)
Tafseer