Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௯௪

Qur'an Surah Al-Baqarah Verse 194

ஸூரத்துல் பகரா [௨]: ௧௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمٰتُ قِصَاصٌۗ فَمَنِ اعْتَدٰى عَلَيْكُمْ فَاعْتَدُوْا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدٰى عَلَيْكُمْ ۖ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ (البقرة : ٢)

al-shahru
ٱلشَّهْرُ
The month
மாதம்
l-ḥarāmu
ٱلْحَرَامُ
[the] sacred
புனித(மான)
bil-shahri
بِٱلشَّهْرِ
(is) for the month
மாதத்திற்குப்பதிலாகும்
l-ḥarāmi
ٱلْحَرَامِ
[the] sacred
புனித(மான)
wal-ḥurumātu
وَٱلْحُرُمَٰتُ
and for all the violations
இன்னும் புனிதங்கள்
qiṣāṣun
قِصَاصٌۚ
(is) legal retribution
பழிதீர்க்கப்பட வேண்டும்
famani
فَمَنِ
Then whoever
ஆகவே யார்
iʿ'tadā
ٱعْتَدَىٰ
transgressed
வரம்பு மீறினார்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
fa-iʿ'tadū
فَٱعْتَدُوا۟
then you transgress
வரம்பு மீறுங்கள்
ʿalayhi
عَلَيْهِ
on him
அவர் மீது
bimith'li mā iʿ'tadā
بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ
in (the) same manner (as) he transgressed
அவர் வரம்பு மீறியது போன்று
ʿalaykum
عَلَيْكُمْۚ
upon you
உங்கள் மீது
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-iʿ'lamū
وَٱعْلَمُوٓا۟
and know
இன்னும் அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
maʿa
مَعَ
(is) with
உடன்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
those who fear (Him)
இறையச்சமுடையவர்கள்

Transliteration:

Ash Shahrul Haraamu bish Shahril Haraami wal hurumaatu qisaas; famani'tadaa 'alaikum fa'tadoo 'alaihi bimsisli ma'tadaa 'alaikum; wattaqul laaha wa'lamooo annal laaha ma'al muttaqeen (QS. al-Baq̈arah:194)

English Sahih International:

[Battle in] the sacred month is for [aggression committed in] the sacred month, and for [all] violations is legal retribution. So whoever has assaulted you, then assault him in the same way that he has assaulted you. And fear Allah and know that Allah is with those who fear Him. (QS. Al-Baqarah, Ayah ௧௯௪)

Abdul Hameed Baqavi:

(போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௯௪)

Jan Trust Foundation

(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்; இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்; அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புனித மாதம் புனித மாதத்திற்கு (பதிலாகும்). புனிதங்கள் (பாழ்படுத்தப் பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்கள் மீது வரம்பு மீறினாரோ, அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்றே (நீங்களும்) அவர் மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.