وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِى الْاَرْضِۙ قَالُوْٓا اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ ١١
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- இன்னும் கூறப்பட்டால்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- lā tuf'sidū
- لَا تُفْسِدُوا۟
- விஷமம் செய்யாதீர்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- qālū
- قَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- naḥnu
- نَحْنُ
- நாங்கள்
- muṣ'liḥūna
- مُصْلِحُونَ
- சீர்திருத்தவாதிகள்தான்
அவர்களை நோக்கி பூமியில் விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௧)Tafseer
اَلَآ اِنَّهُمْ هُمُ الْمُفْسِدُوْنَ وَلٰكِنْ لَّا يَشْعُرُوْنَ ١٢
- alā
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- innahum humu
- إِنَّهُمْ هُمُ
- நிச்சயமாக அவர்கள்தான்
- l-muf'sidūna
- ٱلْمُفْسِدُونَ
- விஷமிகள்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- lā yashʿurūna
- لَّا يَشْعُرُونَ
- உணர மாட்டார்கள்
நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௨)Tafseer
وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَآ اٰمَنَ النَّاسُ قَالُوْٓا اَنُؤْمِنُ كَمَآ اٰمَنَ السُّفَهَاۤءُ ۗ اَلَآ اِنَّهُمْ هُمُ السُّفَهَاۤءُ وَلٰكِنْ لَّا يَعْلَمُوْنَ ١٣
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- இன்னும் கூறப்பட்டால்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- āminū
- ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- kamā
- كَمَآ
- போன்று
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்(கள்)
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- anu'minu
- أَنُؤْمِنُ
- நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?
- kamā
- كَمَآ
- போன்று
- āmana
- ءَامَنَ
- நம்பிக்கை கொண்டார்(கள்)
- l-sufahāu
- ٱلسُّفَهَآءُۗ
- அறிவீனர்கள்
- alā
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- innahum humu
- إِنَّهُمْ هُمُ
- நிச்சயமாக அவர்கள்தான்
- l-sufahāu
- ٱلسُّفَهَآءُ
- அறிவீனர்கள்
- walākin
- وَلَٰكِن
- எனினும்
- lā yaʿlamūna
- لَّا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௩)Tafseer
وَاِذَا لَقُوا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْٓا اٰمَنَّا ۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْ ۙ قَالُوْٓا اِنَّا مَعَكُمْ ۙاِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ ١٤
- wa-idhā laqū
- وَإِذَا لَقُوا۟
- அவர்கள் சந்தித்தால்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களை
- qālū
- قَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- wa-idhā khalaw
- وَإِذَا خَلَوْا۟
- அவர்கள் தனித்தால்
- ilā shayāṭīnihim
- إِلَىٰ شَيَٰطِينِهِمْ
- பக்கம்/ஷைத்தான்கள்/தங்கள்
- qālū
- قَالُوٓا۟
- கூறுகிறார்கள்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- innamā naḥnu
- إِنَّمَا نَحْنُ
- நாங்கள் எல்லாம்
- mus'tahziūna
- مُسْتَهْزِءُونَ
- பரிகசிப்பவர்கள்தான்
தவிர அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் "நாங்களும் (உங்களைப் போல்) நம்பிக்கையாளர்கள்தான்" எனவும் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு விலகித்) தங்களின் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டாலோ "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம். ஆனால், நாங்கள் (நம்பிக்கையாளர்களைப்) பரிகாசம் செய்(யவே அவ்விதம் அவர்களிடம் கூறு)கிறோம்" எனக் கூறுகின்றனர். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௪)Tafseer
اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ ١٥
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- yastahzi-u
- يَسْتَهْزِئُ
- பரிகசிக்கிறான்
- bihim
- بِهِمْ
- அவர்களை
- wayamudduhum
- وَيَمُدُّهُمْ
- இன்னும் விட்டு வைக்கி றான்/அவர்களை
- fī ṭugh'yānihim
- فِى طُغْيَٰنِهِمْ
- அட்டூழியத்தில்/அவர்களுடைய
- yaʿmahūna
- يَعْمَهُونَ
- கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௫)Tafseer
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰىۖ فَمَا رَبِحَتْ تِّجَارَتُهُمْ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ ١٦
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ish'tarawū
- ٱشْتَرَوُا۟
- விலைக்கு வாங்கினார்கள்
- l-ḍalālata
- ٱلضَّلَٰلَةَ
- வழிகேட்டை
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- நேர்வழிக்குப் பதிலாக
- famā rabiḥat
- فَمَا رَبِحَت
- எனவே, இலாபமடையவில்லை
- tijāratuhum
- تِّجَٰرَتُهُمْ
- வியாபாரம்/அவர்களின்
- wamā kānū
- وَمَا كَانُوا۟
- இன்னும் அவர்கள் இருக்கவில்லை
- muh'tadīna
- مُهْتَدِينَ
- நேர்வழி பெற்றவர்களாக
இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௬)Tafseer
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ۚ فَلَمَّآ اَضَاۤءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِيْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ ١٧
- mathaluhum
- مَثَلُهُمْ
- உதாரணம்/அவர்களின்
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப் போல்
- alladhī
- ٱلَّذِى
- எவர்(கள்)
- is'tawqada
- ٱسْتَوْقَدَ
- மூட்டினார்(கள்)
- nāran
- نَارًا
- நெருப்பை
- falammā
- فَلَمَّآ
- போது
- aḍāat
- أَضَآءَتْ
- வெளிச்சமாக்கியது
- mā ḥawlahu
- مَا حَوْلَهُۥ
- எதை/சுற்றி/அவரை
- dhahaba
- ذَهَبَ
- சென்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- binūrihim
- بِنُورِهِمْ
- ஒளியைக் கொண்டு/அவர்களின்
- watarakahum
- وَتَرَكَهُمْ
- இன்னும் விட்டு விட்டான்/அவர்களை
- fī ẓulumātin
- فِى ظُلُمَٰتٍ
- இருள்களில்
- lā yub'ṣirūna
- لَّا يُبْصِرُونَ
- பார்க்க மாட்டார்கள்
இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக் கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௭)Tafseer
صُمٌّ ۢ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَۙ ١٨
- ṣummun buk'mun
- صُمٌّۢ بُكْمٌ
- செவிடர்கள்/ஊமைகள்
- ʿum'yun
- عُمْىٌ
- குருடர்கள்
- fahum
- فَهُمْ
- எனவே, அவர்கள்
- lā yarjiʿūna
- لَا يَرْجِعُونَ
- திரும்ப மாட்டார்கள்
(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮)Tafseer
اَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاۤءِ فِيْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌۚ يَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِيْٓ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِۗ وَاللّٰهُ مُحِيْطٌۢ بِالْكٰفِرِيْنَ ١٩
- aw
- أَوْ
- அல்லது
- kaṣayyibin
- كَصَيِّبٍ
- போல/மழை
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- fīhi
- فِيهِ
- அதில்
- ẓulumātun
- ظُلُمَٰتٌ
- இருள்கள்
- waraʿdun
- وَرَعْدٌ
- இன்னும் இடி
- wabarqun
- وَبَرْقٌ
- இன்னும் மின்னல்
- yajʿalūna
- يَجْعَلُونَ
- வைக்கிறார்கள்
- aṣābiʿahum
- أَصَٰبِعَهُمْ
- தங்கள் விரல்களை
- fī ādhānihim
- فِىٓ ءَاذَانِهِم
- தங்கள் காதுகளில்
- mina l-ṣawāʿiqi
- مِّنَ ٱلصَّوَٰعِقِ
- இடி முழக்கங்களால்
- ḥadhara
- حَذَرَ
- பயந்து
- l-mawti
- ٱلْمَوْتِۚ
- மரணத்தை
- wal-lahu
- وَٱللَّهُ
- இன்னும் அல்லாஹ்
- muḥīṭun
- مُحِيطٌۢ
- சூழ்ந்திருக்கிறான்
- bil-kāfirīna
- بِٱلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களை
அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯)Tafseer
يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ اَبْصَارَهُمْ ۗ كُلَّمَآ اَضَاۤءَ لَهُمْ مَّشَوْا فِيْهِ ۙ وَاِذَآ اَظْلَمَ عَلَيْهِمْ قَامُوْا ۗوَلَوْ شَاۤءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ࣖ ٢٠
- yakādu
- يَكَادُ
- நெருங்குகிறது
- l-barqu
- ٱلْبَرْقُ
- மின்னல்
- yakhṭafu
- يَخْطَفُ
- பறிக்கிறது
- abṣārahum
- أَبْصَٰرَهُمْۖ
- பார்வைகளை அவர்களின்
- kullamā aḍāa
- كُلَّمَآ أَضَآءَ
- அது வெளிச்சம் தரும் போதெல்லாம்
- lahum
- لَهُم
- அவர்களுக்கு
- mashaw
- مَّشَوْا۟
- நடக்கிறார்கள்
- fīhi
- فِيهِ
- அதில்
- wa-idhā aẓlama
- وَإِذَآ أَظْلَمَ
- இன்னும் இருள் சூழ்ந்தால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- qāmū
- قَامُوا۟ۚ
- நிற்கிறார்கள்
- walaw shāa
- وَلَوْ شَآءَ
- நாடினால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ladhahaba
- لَذَهَبَ
- திட்டமாக சென்றுவிடுவான்
- bisamʿihim
- بِسَمْعِهِمْ
- கேள்விப்புலனைக் கொண்டு/அவர்களின்
- wa-abṣārihim
- وَأَبْصَٰرِهِمْۚ
- பார்வைகளை அவர்களின்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- எல்லாம்/பொருள்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வைகளைப் பறிக்கப் பார்க்கின்றது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்து கொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வைகளையும் போக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன். ([௨] ஸூரத்துல் பகரா: ௨௦)Tafseer