குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௧௭
Qur'an Surah Al-Baqarah Verse 17
ஸூரத்துல் பகரா [௨]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَارًا ۚ فَلَمَّآ اَضَاۤءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِيْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ (البقرة : ٢)
- mathaluhum
- مَثَلُهُمْ
- Their example
- உதாரணம்/அவர்களின்
- kamathali
- كَمَثَلِ
- (is) like (the) example
- உதாரணத்தைப் போல்
- alladhī
- ٱلَّذِى
- (of) the one who
- எவர்(கள்)
- is'tawqada
- ٱسْتَوْقَدَ
- kindled
- மூட்டினார்(கள்)
- nāran
- نَارًا
- a fire
- நெருப்பை
- falammā
- فَلَمَّآ
- then, when
- போது
- aḍāat
- أَضَآءَتْ
- it lighted
- வெளிச்சமாக்கியது
- mā ḥawlahu
- مَا حَوْلَهُۥ
- what his surroundings
- எதை/சுற்றி/அவரை
- dhahaba
- ذَهَبَ
- took away
- சென்றான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- binūrihim
- بِنُورِهِمْ
- their light
- ஒளியைக் கொண்டு/அவர்களின்
- watarakahum
- وَتَرَكَهُمْ
- and left them
- இன்னும் விட்டு விட்டான்/அவர்களை
- fī ẓulumātin
- فِى ظُلُمَٰتٍ
- in darkness[es]
- இருள்களில்
- lā yub'ṣirūna
- لَّا يُبْصِرُونَ
- (so) not (do) they see
- பார்க்க மாட்டார்கள்
Transliteration:
Masaluhum kamasalillazis tawqada naaran falammaaa adaaa'at maa hawlahoo zahabal laahu binoorihim wa tarakahum fee zulumaatil laa yubsiroon(QS. al-Baq̈arah:17)
English Sahih International:
Their example is that of one who kindled a fire, but when it illuminated what was around him, Allah took away their light and left them in darkness [so] they could not see. (QS. Al-Baqarah, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக் கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான். (ஸூரத்துல் பகரா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அல்லாஹ் அவர்களின் ஒளியைக் கொண்டு சென்றான். இன்னும் அவர்கள் பார்க்கமுடியாத இருள்களில் அவர்களை விட்டுவிட்டான்.