Skip to content

ஸூரா ஸூரத்துல் பகரா - Page: 19

Al-Baqarah

(al-Baq̈arah)

௧௮௧

فَمَنْۢ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗ ۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ ۗ ١٨١

faman
فَمَنۢ
எவர்
baddalahu
بَدَّلَهُۥ
அதை மாற்றுவார்
baʿdamā samiʿahu
بَعْدَمَا سَمِعَهُۥ
அதைக் கேட்டதற்குப் பின்னர்
fa-innamā ith'muhu
فَإِنَّمَآ إِثْمُهُۥ
அதன் பாவமெல்லாம்
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yubaddilūnahu
يُبَدِّلُونَهُۥٓۚ
மாற்றுகிறார்கள்/அதை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
samīʿun
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
ʿalīmun
عَلِيمٌ
மிக அறிந்தவன்
(மரண சாசனமாகிய) அதனைக் கேட்டதற்குப் பின்னர், எவரேனும் அதனை மாற்றிவிட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரின் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் (மரணிப்பவர் கூறும் சாசனத்தை) செவியுறுபவனாகவும், (அதனை மாற்றும் பாவிகளின் செயலை) அறிந்தவனுமாயிருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௧)
Tafseer
௧௮௨

فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَآ اِثْمَ عَلَيْهِ ۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١٨٢

faman
فَمَنْ
எவர்
khāfa
خَافَ
பயந்தார்
min mūṣin
مِن مُّوصٍ
மரணசாசனம்கூறுபவரிடத்தில்
janafan
جَنَفًا
அநீதியை
aw
أَوْ
அல்லது
ith'man
إِثْمًا
தவறை
fa-aṣlaḥa
فَأَصْلَحَ
சீர்திருத்தம் செய்தார்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
falā ith'ma
فَلَآ إِثْمَ
அறவே குற்றமில்லை
ʿalayhi
عَلَيْهِۚ
அவர் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
ஆனால் மரணசாசனம் கூறியவரி(ன் சாசனத்தி)ல் அநீதம் அல்லது தவறு இருப்பதை எவரேனும் பார்த்து பயந்து, அந்த சாசனப் பொருளை அடையக்கூடிய)வர்களுக்கிடையே சமாதானம் செய்து அதனை மாற்றிவிட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௨)
Tafseer
௧௮௩

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ ١٨٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே
kutiba
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-ṣiyāmu
ٱلصِّيَامُ
நோன்பு
kamā
كَمَا
போன்று
kutiba
كُتِبَ
கடமையாக்கப்பட்டது
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablikum
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௩)
Tafseer
௧௮௪

اَيَّامًا مَّعْدُوْدٰتٍۗ فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ وَعَلَى الَّذِيْنَ يُطِيْقُوْنَهٗ فِدْيَةٌ طَعَامُ مِسْكِيْنٍۗ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهٗ ۗ وَاَنْ تَصُوْمُوْا خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ١٨٤

ayyāman
أَيَّامًا
நாட்களில்
maʿdūdātin
مَّعْدُودَٰتٍۚ
எண்ணப்பட்ட(வை)
faman
فَمَن
எவர்
kāna
كَانَ
இருந்தார்
minkum
مِنكُم
உங்களில்
marīḍan
مَّرِيضًا
நோயாளியாக
aw
أَوْ
அல்லது
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
faʿiddatun
فَعِدَّةٌ
கணக்கிடவும்
min ayyāmin
مِّنْ أَيَّامٍ
நாட்களில்
ukhara
أُخَرَۚ
மற்ற(வை)
waʿalā
وَعَلَى
இன்னும் மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuṭīqūnahu
يُطِيقُونَهُۥ
அதற்கு சிரமப்படுகிறார்கள்
fid'yatun
فِدْيَةٌ
பரிகாரம்
ṭaʿāmu
طَعَامُ
உணவு
mis'kīnin
مِسْكِينٍۖ
ஓர் ஏழையின்
faman
فَمَن
எவர்
taṭawwaʿa
تَطَوَّعَ
உபரியாகச் செய்வார்
khayran
خَيْرًا
நன்மையை
fahuwa
فَهُوَ
அது
khayrun
خَيْرٌ
நன்மை
lahu
لَّهُۥۚ
அவருக்கு
wa-an taṣūmū
وَأَن تَصُومُوا۟
இன்னும் நீங்கள் நோன்பு நோற்பது
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
lakum
لَّكُمْۖ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக (அறிவீர்கள்)
குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்றுவி)டவும். தவிர, (எக்காரணத் தினாலாவது நோன்பு நோற்கக் கஷ்டப்படுபவர்கள் அதற்குப்) பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதைவிட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்). ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௪)
Tafseer
௧௮௫

شَهْرُ رَمَضَانَ الَّذِيْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۗ وَمَنْ كَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَ ۗ يُرِيْدُ اللّٰهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِكُمُ الْعُسْرَ ۖ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰىكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ١٨٥

shahru
شَهْرُ
மாதம்
ramaḍāna
رَمَضَانَ
ரமழான்
alladhī
ٱلَّذِىٓ
எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
fīhi
فِيهِ
அதில்
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
hudan
هُدًى
நேர்வழியாக
lilnnāsi
لِّلنَّاسِ
மக்களுக்கு
wabayyinātin
وَبَيِّنَٰتٍ
இன்னும் சான்றுகளாக
mina l-hudā
مِّنَ ٱلْهُدَىٰ
நேர்வழியின்
wal-fur'qāni
وَٱلْفُرْقَانِۚ
இன்னும் பிரித்தறிவிப்பது
faman shahida
فَمَن شَهِدَ
எவர்/தங்கி இருப்பார்
minkumu
مِنكُمُ
உங்களிலிருந்து
l-shahra
ٱلشَّهْرَ
அம்மாதத்தில்
falyaṣum'hu
فَلْيَصُمْهُۖ
அவர் அதில் நோன்பிருக்கவும்
waman kāna
وَمَن كَانَ
இன்னும் எவர்/இருப்பார்
marīḍan
مَرِيضًا
நோயாளியாக
aw
أَوْ
அல்லது
ʿalā safarin
عَلَىٰ سَفَرٍ
பயணத்தில்
faʿiddatun
فَعِدَّةٌ
கணக்கிடவும்
min ayyāmin
مِّنْ أَيَّامٍ
இருந்து/நாட்கள்
ukhara
أُخَرَۗ
மற்ற(வை)
yurīdu
يُرِيدُ
நாடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bikumu
بِكُمُ
உங்களுக்கு
l-yus'ra
ٱلْيُسْرَ
இலகுவை
walā yurīdu
وَلَا يُرِيدُ
இன்னும் நாடமாட்டான்
bikumu
بِكُمُ
உங்களுக்கு
l-ʿus'ra
ٱلْعُسْرَ
சிரமத்தை
walituk'milū
وَلِتُكْمِلُوا۟
இன்னும் நீங்கள் முழுமைப்படுத்துவதற்காக
l-ʿidata
ٱلْعِدَّةَ
எண்ணிக்கையை
walitukabbirū
وَلِتُكَبِّرُوا۟
இன்னும் நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
ʿalā mā hadākum
عَلَىٰ مَا هَدَىٰكُمْ
உங்களை நேர்வழி நடத்தியதற்காக
walaʿallakum tashkurūna
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை. மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்! ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௫)
Tafseer
௧௮௬

وَاِذَا سَاَلَكَ عِبَادِيْ عَنِّيْ فَاِنِّيْ قَرِيْبٌ ۗ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِۙ فَلْيَسْتَجِيْبُوْا لِيْ وَلْيُؤْمِنُوْا بِيْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ ١٨٦

wa-idhā sa-alaka
وَإِذَا سَأَلَكَ
கேட்டால்/உம்மிடம்
ʿibādī
عِبَادِى
என் அடியார்கள்
ʿannī
عَنِّى
என்னைப் பற்றி
fa-innī
فَإِنِّى
நிச்சயமாக நான்
qarībun
قَرِيبٌۖ
சமீபமானவன்
ujību
أُجِيبُ
பதிலளிக்கிறேன்
daʿwata
دَعْوَةَ
அழைப்புக்கு
l-dāʿi
ٱلدَّاعِ
அழைப்பாளரின்
idhā daʿāni
إِذَا دَعَانِۖ
அவர் என்னை அழைத்தால்
falyastajībū lī
فَلْيَسْتَجِيبُوا۟ لِى
ஆகவே எனக்கு அவர்கள் பதிலளிக்கவும்
walyu'minū bī
وَلْيُؤْمِنُوا۟ بِى
இன்னும் அவர்கள்என்னைநம்பிக்கைகொள்ளவும்
laʿallahum yarshudūna
لَعَلَّهُمْ يَرْشُدُونَ
அவர்கள் நேர்வழி அடைவதற்காக
(நபியே!) உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீங்கள் கூறுங்கள்:) "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்." ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேரான வழியை அடைவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௬)
Tafseer
௧௮௭

اُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلٰى نِسَاۤىِٕكُمْ ۗ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ۗ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۗ وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِۖ ثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِۚ وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عَاكِفُوْنَۙ فِى الْمَسٰجِدِ ۗ تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَاۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ ١٨٧

uḥilla
أُحِلَّ
அனுமதிக்கப்பட்டுள்ளது
lakum
لَكُمْ
உங்களுக்கு
laylata
لَيْلَةَ
இரவில்
l-ṣiyāmi
ٱلصِّيَامِ
நோன்பு
l-rafathu
ٱلرَّفَثُ
சேர்வது
ilā nisāikum
إِلَىٰ نِسَآئِكُمْۚ
உங்கள் மனைவிகளுடன்
hunna
هُنَّ
அவர்கள் (பெண்கள்)
libāsun
لِبَاسٌ
ஆடை
lakum
لَّكُمْ
உங்களுக்கு
wa-antum
وَأَنتُمْ
இன்னும் நீங்கள்(ஆண்கள்)
libāsun
لِبَاسٌ
ஆடை
lahunna
لَّهُنَّۗ
அவர்களுக்கு (பெண்களுக்கு)
ʿalima
عَلِمَ
அறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
takhtānūna
تَخْتَانُونَ
ஏமாற்றுகிறீர்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களை
fatāba ʿalaykum
فَتَابَ عَلَيْكُمْ
ஆகவே உங்கள் பிழை பொறுப்பை ஏற்றான்
waʿafā
وَعَفَا
இன்னும் மன்னித்தான்
ʿankum
عَنكُمْۖ
உங்களை
fal-āna
فَٱلْـَٰٔنَ
ஆகவே இப்போது
bāshirūhunna
بَٰشِرُوهُنَّ
அவர்களுடன் சேருங்கள்
wa-ib'taghū
وَٱبْتَغُوا۟
இன்னும் தேடுங்கள்
mā kataba
مَا كَتَبَ
எதை/விதித்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْۚ
உங்களுக்கு
wakulū
وَكُلُوا۟
இன்னும் உண்ணுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
ḥattā yatabayyana
حَتَّىٰ يَتَبَيَّنَ
தெளிவாகும் வரை
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-khayṭu l-abyaḍu
ٱلْخَيْطُ ٱلْأَبْيَضُ
நூல்/வெள்ளை
mina l-khayṭi
مِنَ ٱلْخَيْطِ
இருந்து/நூல்
l-aswadi
ٱلْأَسْوَدِ
கருப்பு
mina l-fajri
مِنَ ٱلْفَجْرِۖ
அதிகாலையில்
thumma
ثُمَّ
பிறகு
atimmū
أَتِمُّوا۟
முழுமையாக்குங்கள்
l-ṣiyāma
ٱلصِّيَامَ
நோன்பை
ilā al-layli
إِلَى ٱلَّيْلِۚ
இரவு வரை
walā tubāshirūhunna
وَلَا تُبَٰشِرُوهُنَّ
அவர்களுடன் சேராதீர்கள்
wa-antum
وَأَنتُمْ
போது/நீங்கள்
ʿākifūna
عَٰكِفُونَ
தங்கியிருக்கிறீர்கள்
fī l-masājidi
فِى ٱلْمَسَٰجِدِۗ
மஸ்ஜிதுகளில்
til'ka
تِلْكَ
இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
falā taqrabūhā
فَلَا تَقْرَبُوهَاۗ
எனவே அவற்றை நெருங்காதீர்கள்
kadhālika
كَذَٰلِكَ
அவ்வாறே
yubayyinu
يُبَيِّنُ
தெளிவுபடுத்துகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
āyātihi
ءَايَٰتِهِۦ
தன் வசனங்களை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
laʿallahum yattaqūna
لَعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
(நம்பிக்கையாளர்களே!) நோன்பு (நாள்களின்) இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் வீடு கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (நோன்புடைய காலத்தில் இஷாவுக்குப் பின்னர் உங்கள் மனைவிகளுடன் கூடாமலும், யாதொரு பொருளை புசிக்காமலும் இருந்து) நிச்சயமாக நீங்கள் உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்து உங்கள்மீது இரக்கமுற்று உங்கள் கஷ்டத்தை நீக்கிவிட்டான். ஆகவே, இனி இருள் நீங்கி விடியற்காலை (ஃபஜ்ர்) ஆகிவிட்டது என்று உங்ளுக்குத் தெளிவாகும் வரையில் (நோன்பின் இரவு காலங்களில் உங்கள்) மனைவிகளுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் (அந்நேரங்களில்) புசியுங்கள், பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்றுப்) முழுமையாக்குங்கள். ஆயினும், நீங்கள் (வணங்குவதற்காக) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃபு) இருக்கும்போது (உங்கள்) மனைவிகளுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால், அவ்வரம்புகளை (மீற) நீங்கள் நெருங்காதீர்கள். மனிதர்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய வசனங்களை அவர்களுக்கு இவ்வாறு தெளிவாக விவரிக்கின்றான். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௭)
Tafseer
௧௮௮

وَلَا تَأْكُلُوْٓا اَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوْا بِهَآ اِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوْا فَرِيْقًا مِّنْ اَمْوَالِ النَّاسِ بِالْاِثْمِ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ࣖ ١٨٨

walā takulū
وَلَا تَأْكُلُوٓا۟
உண்ணாதீர்கள்
amwālakum
أَمْوَٰلَكُم
உங்கள் செல்வங்களை
baynakum
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
தவறாக
watud'lū
وَتُدْلُوا۟
இன்னும் கொடுக்காதீர்கள்
bihā
بِهَآ
அவற்றை
ilā l-ḥukāmi
إِلَى ٱلْحُكَّامِ
அதிகாரிகளிடம்
litakulū
لِتَأْكُلُوا۟
நீங்கள்உண்பதற்காக
farīqan
فَرِيقًا
ஒரு பகுதியை
min
مِّنْ
இருந்து
amwāli
أَمْوَٰلِ
செல்வங்கள்
l-nāsi
ٱلنَّاسِ
மக்களுடைய
bil-ith'mi
بِٱلْإِثْمِ
பாவமாக
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிந்திருந்தும்
(அன்றி) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதனையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்து கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௮)
Tafseer
௧௮௯

۞ يَسـَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ ۗ قُلْ هِيَ مَوَاقِيْتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ وَلَيْسَ الْبِرُّ بِاَنْ تَأْتُوا الْبُيُوْتَ مِنْ ظُهُوْرِهَا وَلٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقٰىۚ وَأْتُوا الْبُيُوْتَ مِنْ اَبْوَابِهَا ۖ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ١٨٩

yasalūnaka
يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
ʿani
عَنِ
பற்றி
l-ahilati
ٱلْأَهِلَّةِۖ
பிறைகள்
qul
قُلْ
கூறுவீராக
hiya
هِىَ
அவை
mawāqītu
مَوَٰقِيتُ
காலங்களை அறிவிக்கக்கூடியவை
lilnnāsi
لِلنَّاسِ
மக்களுக்கு
wal-ḥaji
وَٱلْحَجِّۗ
இன்னும் ஹஜ்ஜு
walaysa
وَلَيْسَ
இன்னும் இல்லை
l-biru
ٱلْبِرُّ
நன்மை
bi-an tatū
بِأَن تَأْتُوا۟
நீங்கள் வருவது
l-buyūta
ٱلْبُيُوتَ
வீடுகளுக்கு
min
مِن
இருந்து
ẓuhūrihā
ظُهُورِهَا
அவற்றின்பின்வழிகள்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
l-bira
ٱلْبِرَّ
நன்மை
mani ittaqā
مَنِ ٱتَّقَىٰۗ
எவர்/அல்லாஹ்வை அஞ்சினார்
watū
وَأْتُوا۟
வாருங்கள்
l-buyūta
ٱلْبُيُوتَ
வீடுகளுக்கு
min abwābihā
مِنْ أَبْوَٰبِهَاۚ
அவற்றின் தலைவாசல்களிலிருந்து
wa-ittaqū l-laha
وَٱتَّقُوا۟ ٱللَّهَ
இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி அடைவதற்காக
(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "அவை மனிதர்களுக்கு (ஒவ்வொரு மாதத்தையும்) ஹஜ்ஜுடைய காலங்களை(யும்) அறிவிக்கக் கூடியவை." மேலும் (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆதலால் நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களின் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். ([௨] ஸூரத்துல் பகரா: ௧௮௯)
Tafseer
௧௯௦

وَقَاتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يُقَاتِلُوْنَكُمْ وَلَا تَعْتَدُوْا ۗ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ١٩٠

waqātilū
وَقَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuqātilūnakum
يُقَٰتِلُونَكُمْ
போர் புரிகிறார்கள்/உங்களிடம்
walā taʿtadū
وَلَا تَعْتَدُوٓا۟ۚ
வரம்பு மீறாதீர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
அவன் நேசிப்பதில்லை
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
வரம்பு மீறுபவர்களை
உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் (எல்லை) கடந்துவிட வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௯௦)
Tafseer