Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௩

Qur'an Surah Al-Baqarah Verse 3

ஸூரத்துல் பகரா [௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۙ (البقرة : ٢)

alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்வார்கள்
bil-ghaybi
بِٱلْغَيْبِ
in the unseen
மறைவானதை
wayuqīmūna
وَيُقِيمُونَ
and establish
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
wamimmā
وَمِمَّا
and out of what
இன்னும் எதிலிருந்து
razaqnāhum
رَزَقْنَٰهُمْ
We have provided them
கொடுத்தோம்/அவர்களுக்கு
yunfiqūna
يُنفِقُونَ
they spend
தர்மம் புரிவார்கள்

Transliteration:

Allazeena yu'minoona bilghaibi wa yuqeemoonas salaata wa mimmaa razaqnaahum yunfiqoon (QS. al-Baq̈arah:3)

English Sahih International:

Who believe in the unseen, establish prayer, and spend out of what We have provided for them, (QS. Al-Baqarah, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (ஸூரத்துல் பகரா, வசனம் ௩)

Jan Trust Foundation

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள்: மறைவானதை நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரிவார்கள்;