Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் பகரா வசனம் ௭

Qur'an Surah Al-Baqarah Verse 7

ஸூரத்துல் பகரா [௨]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَتَمَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ ۗ وَعَلٰٓى اَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ࣖ (البقرة : ٢)

khatama
خَتَمَ
Has set a seal
முத்திரையிட்டான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
on their hearts
அவர்களின் உள்ளங்கள் மீது
waʿalā
وَعَلَىٰ
and on
இன்னும் மீது
samʿihim
سَمْعِهِمْۖ
their hearing
அவர்களின் கேள்விப் புலன்
waʿalā
وَعَلَىٰٓ
and on
இன்னும் மீது
abṣārihim
أَبْصَٰرِهِمْ
their vision
அவர்களின் பார்வைகள்
ghishāwatun
غِشَٰوَةٌۖ
(is) a veil
திரை
walahum
وَلَهُمْ
And for them
இன்னும் அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
பெரியது

Transliteration:

Khatamal laahu 'alaa quloobihim wa 'alaa sam'i-him wa 'alaaa absaarihim ghishaa watunw wa lahum 'azaabun 'azeem (QS. al-Baq̈arah:7)

English Sahih International:

Allah has set a seal upon their hearts and upon their hearing, and over their vision is a veil. And for them is a great punishment. (QS. Al-Baqarah, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. (ஸூரத்துல் பகரா, வசனம் ௭)

Jan Trust Foundation

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு.