الۤمّۤ ۚ ١
- alif-lam-meem
- الٓمٓ
- அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். (அல்லாஹுதஆலா, வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக்குர்ஆனாகிய) ([௨] ஸூரத்துல் பகரா: ௧)Tafseer
ذٰلِكَ الْكِتٰبُ لَا رَيْبَ ۛ فِيْهِ ۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ ٢
- dhālika
- ذَٰلِكَ
- இந்த
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- வேதம்
- lā rayba
- لَا رَيْبَۛ
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِۛ
- இதில்
- hudan
- هُدًى
- நேர்வழி காட்டி
- lil'muttaqīna
- لِّلْمُتَّقِينَ
- அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும். ([௨] ஸூரத்துல் பகரா: ௨)Tafseer
الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۙ ٣
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்வார்கள்
- bil-ghaybi
- بِٱلْغَيْبِ
- மறைவானதை
- wayuqīmūna
- وَيُقِيمُونَ
- இன்னும் நிலைநிறுத்துவார்கள்
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகையை
- wamimmā
- وَمِمَّا
- இன்னும் எதிலிருந்து
- razaqnāhum
- رَزَقْنَٰهُمْ
- கொடுத்தோம்/அவர்களுக்கு
- yunfiqūna
- يُنفِقُونَ
- தர்மம் புரிவார்கள்
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௩)Tafseer
وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَآ اُنْزِلَ اِلَيْكَ وَمَآ اُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَۗ ٤
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்வார்கள்
- bimā unzila
- بِمَآ أُنزِلَ
- எதை/இறக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- wamā
- وَمَآ
- இன்னும் எதை
- unzila
- أُنزِلَ
- இறக்கப்பட்டது
- min qablika
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- wabil-ākhirati
- وَبِٱلْءَاخِرَةِ
- இன்னும் மறுமையை
- hum
- هُمْ
- அவர்கள்
- yūqinūna
- يُوقِنُونَ
- உறுதி கொள்வார்கள்
(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௪)Tafseer
اُولٰۤىِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ ۙ وَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ٥
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்
- ʿalā
- عَلَىٰ
- இல்
- hudan
- هُدًى
- நேர்வழி
- min rabbihim
- مِّن رَّبِّهِمْۖ
- இறைவனின்/தங்கள்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- இன்னும் அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- வெற்றியாளர்கள்
இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௫)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَاۤءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ ٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்கள்
- sawāon
- سَوَآءٌ
- சமம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- a-andhartahum
- ءَأَنذَرْتَهُمْ
- அவர்களை எச்சரித்தீர்
- am
- أَمْ
- அல்லது
- lam
- لَمْ
- நீர் எச்சரிக்கவில்லை
- tundhir'hum
- تُنذِرْهُمْ
- நீர் எச்சரிக்கவில்லை அவர்களை
- lā yu'minūna
- لَا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் உண்மையில் சமமே. அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௬)Tafseer
خَتَمَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَعَلٰى سَمْعِهِمْ ۗ وَعَلٰٓى اَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَّلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ࣖ ٧
- khatama
- خَتَمَ
- முத்திரையிட்டான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā qulūbihim
- عَلَىٰ قُلُوبِهِمْ
- அவர்களின் உள்ளங்கள் மீது
- waʿalā
- وَعَلَىٰ
- இன்னும் மீது
- samʿihim
- سَمْعِهِمْۖ
- அவர்களின் கேள்விப் புலன்
- waʿalā
- وَعَلَىٰٓ
- இன்னும் மீது
- abṣārihim
- أَبْصَٰرِهِمْ
- அவர்களின் பார்வைகள்
- ghishāwatun
- غِشَٰوَةٌۖ
- திரை
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- பெரியது
(அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும் திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௭)Tafseer
وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَۘ ٨
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- இன்னும் மக்களில்
- man
- مَن
- எவர்
- yaqūlu
- يَقُولُ
- கூறுகிறார்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wabil-yawmi l-ākhiri
- وَبِٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
- இன்னும் நாளை/இறுதி
- wamā hum
- وَمَا هُم
- அவர்கள் அல்லர்
- bimu'minīna
- بِمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களே
(நபியே!) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் எனக் கூறுபவர்களும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களல்லர். ([௨] ஸூரத்துல் பகரா: ௮)Tafseer
يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ۚ وَمَا يَخْدَعُوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَۗ ٩
- yukhādiʿūna
- يُخَٰدِعُونَ
- வஞ்சிக்கின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டார்கள்
- wamā yakhdaʿūna
- وَمَا يَخْدَعُونَ
- வஞ்சிக்க மாட்டார்கள்
- illā
- إِلَّآ
- தவிர
- anfusahum
- أَنفُسَهُمْ
- தங்களையே
- wamā yashʿurūna
- وَمَا يَشْعُرُونَ
- இன்னும் உணரமாட்டார்கள்
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ([௨] ஸூரத்துல் பகரா: ௯)Tafseer
فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌۙ فَزَادَهُمُ اللّٰهُ مَرَضًاۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ۢ ەۙ بِمَا كَانُوْا يَكْذِبُوْنَ ١٠
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- அவர்களின் உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- ஒரு நோய்
- fazādahumu
- فَزَادَهُمُ
- எனவே, அவர்களுக்கு அதிகப்படுத்தினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- maraḍan
- مَرَضًاۖ
- நோயை
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌۢ
- துன்புறுத்தக் கூடியது
- bimā
- بِمَا
- காரணத்தால்
- kānū
- كَانُوا۟
- இருந்தனர்
- yakdhibūna
- يَكْذِبُونَ
- பொய்கூறுபவர்களாக
(ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. (அதன் காரணமாக) அவர்களுக்கு அந்நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்குண்டு. ([௨] ஸூரத்துல் பகரா: ௧௦)Tafseer