Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் - Page: 7

Al-Anfal

(al-ʾAnfāl)

௬௧

۞ وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٦١

wa-in janaḥū
وَإِن جَنَحُوا۟
அவர்கள் இணங்கினால்
lilssalmi
لِلسَّلْمِ
சமாதானத்திற்கு
fa-ij'naḥ
فَٱجْنَحْ
நீர் இணங்குவீராக
lahā
لَهَا
அதற்கு
watawakkal
وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுங்கள்; நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௧)
Tafseer
௬௨

وَاِنْ يُّرِيْدُوْٓا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ۗهُوَ الَّذِيْٓ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ ٦٢

wa-in yurīdū
وَإِن يُرِيدُوٓا۟
அவர்கள் நாடினால்
an
أَن
அவர்கள் வஞ்சிக்க
yakhdaʿūka
يَخْدَعُوكَ
அவர்கள் வஞ்சிக்க உம்மை
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
ḥasbaka
حَسْبَكَ
உமக்குப் போதுமானவன்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்தான்
huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எவன்
ayyadaka
أَيَّدَكَ
பலப்படுத்தினான் உம்மை
binaṣrihi
بِنَصْرِهِۦ
தன் உதவியைக் கொண்டு
wabil-mu'minīna
وَبِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களைக் கொண்டு
(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (உங்களை பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன்தான் உங்களை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௨)
Tafseer
௬௩

وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْۗ لَوْاَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّآ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْۗ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ ٦٣

wa-allafa
وَأَلَّفَ
ஒன்றிணைத்தான்
bayna
بَيْنَ
இடையில்
qulūbihim
قُلُوبِهِمْۚ
அவர்களுடைய உள்ளங்கள்
law anfaqta
لَوْ أَنفَقْتَ
நீர் செலவு செய்தால்
mā fī l-arḍi
مَا فِى ٱلْأَرْضِ
பூமியிலுள்ளவை
jamīʿan
جَمِيعًا
அனைத்தையும்
mā allafta bayna
مَّآ أَلَّفْتَ بَيْنَ
ஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில்
qulūbihim
قُلُوبِهِمْ
அவர்களுடைய உள்ளங்கள்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
allafa
أَلَّفَ
ஒன்றிணைத்தான்
baynahum
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பையூட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உங்களால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை அன்பின் மூலம் ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௩)
Tafseer
௬௪

يٰٓاَيُّهَا النَّبِيُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ ࣖ ٦٤

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
ḥasbuka
حَسْبُكَ
உமக்குப் போதுமானவன்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
wamani
وَمَنِ
இன்னும் எவருக்கு
ittabaʿaka
ٱتَّبَعَكَ
உம்மைப் பின்பற்றினார்
mina
مِنَ
இருந்து
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
நபியே! அல்லாஹ்வும், நம்பிக்கையாளர்களில் உங்களைப் பின்பற்றியவர்களுமே உங்களுக்குப் போதுமானவர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௪)
Tafseer
௬௫

يٰٓاَيُّهَا النَّبِيُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِۗ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْٓا اَلْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ ٦٥

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
ḥarriḍi
حَرِّضِ
தூண்டுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
ʿalā l-qitāli
عَلَى ٱلْقِتَالِۚ
போருக்கு
in yakun
إِن يَكُن
இருந்தால்
minkum
مِّنكُمْ
உங்களில்
ʿish'rūna
عِشْرُونَ
இருபது (நபர்கள்)
ṣābirūna
صَٰبِرُونَ
பொறுமையாளர்கள்
yaghlibū
يَغْلِبُوا۟
வெல்வார்கள்
mi-atayni
مِا۟ئَتَيْنِۚ
இரு நூறு(நபர்களை)
wa-in yakun minkum
وَإِن يَكُن مِّنكُم
இருந்தால்/உங்களில்
mi-atun
مِّا۟ئَةٌ
நூறு (நபர்கள்)
yaghlibū
يَغْلِبُوٓا۟
வெல்வார்கள்
alfan
أَلْفًا
ஆயிரம் (நபர்களை)
mina
مِّنَ
இருந்து
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
bi-annahum
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
சிந்தித்து விளங்க மாட்டார்கள்
(அன்றி) நபியே! நீங்கள் நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும் படித்) தூண்டுங்கள். உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௫)
Tafseer
௬௬

اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًاۗ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْٓا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِ ۗوَاللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ ٦٦

al-āna
ٱلْـَٰٔنَ
இப்போது
khaffafa
خَفَّفَ
இலகுவாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿankum
عَنكُمْ
உங்களுக்கு
waʿalima
وَعَلِمَ
இன்னும் அறிந்தான்
anna fīkum
أَنَّ فِيكُمْ
நிச்சயமாக/உங்களில்
ḍaʿfan
ضَعْفًاۚ
பலவீனம்
fa-in yakun
فَإِن يَكُن
இருந்தால்
minkum
مِّنكُم
உங்களில்
mi-atun
مِّا۟ئَةٌ
நூறு (நபர்கள்)
ṣābiratun
صَابِرَةٌ
பொறுமையாளர்கள்
yaghlibū
يَغْلِبُوا۟
வெல்வார்கள்
mi-atayni
مِا۟ئَتَيْنِۚ
இரு நூறு(நபர்களை)
wa-in yakun
وَإِن يَكُن
இருந்தால்
minkum
مِّنكُمْ
உங்களில்
alfun
أَلْفٌ
ஆயிரம் (நபர்கள்)
yaghlibū
يَغْلِبُوٓا۟
வெல்வார்கள்
alfayni
أَلْفَيْنِ
இரண்டாயிரம் (நபர்களை)
bi-idh'ni
بِإِذْنِ
அனுமதி கொண்டு
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
l-ṣābirīna
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றதுஎன்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் சகிப்பும், பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௬)
Tafseer
௬௭

مَاكَانَ لِنَبِيٍّ اَنْ يَّكُوْنَ لَهٗٓ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِۗ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَاۖ وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَۗ وَاللّٰهُ عَزِيْزٌحَكِيْمٌ ٦٧

mā kāna
مَا كَانَ
ஆகுமானதல்ல
linabiyyin
لِنَبِىٍّ
ஒரு நபிக்கு
an yakūna
أَن يَكُونَ
இருப்பது
lahu
لَهُۥٓ
அவருக்கு
asrā ḥattā
أَسْرَىٰ حَتَّىٰ
கைதிகள்/வரை
yuth'khina
يُثْخِنَ
கொன்று குவிப்பார்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
turīdūna
تُرِيدُونَ
நாடுகிறீர்கள்
ʿaraḍa
عَرَضَ
பொருளை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகத்தின்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
l-ākhirata
ٱلْءَاخِرَةَۗ
மறுமையை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
(இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகின்றான். அல்லாஹ் மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௭)
Tafseer
௬௮

لَوْلَاكِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيْمَآ اَخَذْتُمْ عَذَابٌ عَظِيْمٌ ٦٨

lawlā kitābun
لَّوْلَا كِتَٰبٌ
விதி இல்லையெனில்
mina
مِّنَ
இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
sabaqa
سَبَقَ
முந்தியது
lamassakum
لَمَسَّكُمْ
பிடித்தே இருக்கும்/உங்களை
fīmā akhadhtum
فِيمَآ أَخَذْتُمْ
எதில்/வாங்கினீர்கள்
ʿadhābun ʿaẓīmun
عَذَابٌ عَظِيمٌ
மகத்தான வேதனை
அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப்படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௮)
Tafseer
௬௯

فَكُلُوْا مِمَّاغَنِمْتُمْ حَلٰلًا طَيِّبًاۖ وَّاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٦٩

fakulū
فَكُلُوا۟
ஆகவே, புசியுங்கள்
mimmā
مِمَّا
எதில்
ghanim'tum
غَنِمْتُمْ
வென்றீர்கள்
ḥalālan
حَلَٰلًا
ஆகுமானதை
ṭayyiban
طَيِّبًاۚ
நல்ல
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்த வைகளை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௬௯)
Tafseer
௭௦

يٰٓاَيُّهَا النَّبِيُّ قُلْ لِّمَنْ فِيْٓ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِيْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٧٠

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
qul
قُل
கூறுவீராக
liman
لِّمَن
எவருக்கு
fī aydīkum
فِىٓ أَيْدِيكُم
உங்கள் கரங்களில்
mina l-asrā
مِّنَ ٱلْأَسْرَىٰٓ
கைதிகளில்
in yaʿlami
إِن يَعْلَمِ
அறிந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
fī qulūbikum
فِى قُلُوبِكُمْ
உங்கள் உள்ளங்களில்
khayran
خَيْرًا
நல்லதை
yu'tikum
يُؤْتِكُمْ
கொடுப்பான்/உங்களுக்கு
khayran
خَيْرًا
சிறந்ததை
mimmā
مِّمَّآ
எதைவிட
ukhidha
أُخِذَ
எடுக்கப்பட்டது
minkum
مِنكُمْ
உங்களிடமிருந்து
wayaghfir lakum
وَيَغْفِرْ لَكُمْۗ
மன்னிப்பான்/உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறுங்கள்: "உங்களுடைய உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டவைகளைவிட மிக்க மேலானவைகளை உங்களுக்குக் கொடுத்து உங்களுடைய குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்." ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௭௦)
Tafseer