குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩௧
Qur'an Surah Al-A'raf Verse 31
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ يٰبَنِيْٓ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْاۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ ࣖ (الأعراف : ٧)
- yābanī ādama
- يَٰبَنِىٓ ءَادَمَ
- O Children (of) Adam!
- ஆதமின் சந்ததிகளே
- khudhū zīnatakum
- خُذُوا۟ زِينَتَكُمْ
- Take your adornment
- அலங்கரித்துக் கொள்ளுங்கள்/உங்களை
- ʿinda kulli
- عِندَ كُلِّ
- at every
- இடம்/எல்லாம்
- masjidin
- مَسْجِدٍ
- masjid
- மஸ்ஜிது
- wakulū
- وَكُلُوا۟
- and eat
- இன்னும் புசியுங்கள்
- wa-ish'rabū
- وَٱشْرَبُوا۟
- and drink
- இன்னும் பருகுங்கள்
- walā tus'rifū
- وَلَا تُسْرِفُوٓا۟ۚ
- but (do) not be extravagant
- விரயம் செய்யாதீர்கள்
- innahu
- إِنَّهُۥ
- Indeed He
- நிச்சயம் அவன்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- (does) not love
- நேசிக்க மாட்டான்
- l-mus'rifīna
- ٱلْمُسْرِفِينَ
- the extravagant ones
- விரயம் செய்பவர்களை
Transliteration:
Yaa Banneee Adama khuzoo zeenatakum 'inda kulli masjidinw wa kuloo washraboo wa laa tusrifoo; innahoo laa yuhibbul musrifeen(QS. al-ʾAʿrāf:31)
English Sahih International:
O children of Adam, take your adornment [i.e., wear your clothing] at every masjid, and eat and drink, but be not excessive. Indeed, He likes not those who commit excess. (QS. Al-A'raf, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
ஆதமுடைய மக்களே! தொழும்போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩௧)
Jan Trust Foundation
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆதமின் சந்ததிகளே! எல்லா மஸ்ஜிதிலும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (அனுமதிக்கப்பட்டதை) புசியுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள் (வரம்பு மீறாதீர்கள்). (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்.