குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௩
Qur'an Surah Al-A'raf Verse 163
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَسْـَٔلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِيْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَأْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَۙ لَا تَأْتِيْهِمْ ۛ كَذٰلِكَ ۛنَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ (الأعراف : ٧)
- wasalhum
- وَسْـَٔلْهُمْ
- And ask them
- விசாரிப்பீராக/அவர்களிடம்
- ʿani l-qaryati
- عَنِ ٱلْقَرْيَةِ
- about the town
- ஊர் பற்றி
- allatī
- ٱلَّتِى
- which
- எது
- kānat
- كَانَتْ
- was
- இருந்தது
- ḥāḍirata
- حَاضِرَةَ
- situated
- அருகில்
- l-baḥri
- ٱلْبَحْرِ
- (by) the sea
- கடலுக்கு
- idh
- إِذْ
- when
- போது
- yaʿdūna
- يَعْدُونَ
- they transgressed
- வரம்பு மீறினார்கள்
- fī l-sabti
- فِى ٱلسَّبْتِ
- in the (matter of) Sabbath
- சனிக்கிழமையில்
- idh
- إِذْ
- when
- போது
- tatīhim
- تَأْتِيهِمْ
- came to them
- வந்தன/அவர்களிடம்
- ḥītānuhum
- حِيتَانُهُمْ
- their fish
- மீன்கள்/அவர்களுடைய
- yawma
- يَوْمَ
- (on the) day
- கிழமையில்
- sabtihim
- سَبْتِهِمْ
- (of) their Sabbath
- அவர்களின் சனி
- shurraʿan
- شُرَّعًا
- visibly
- தலைகளை நீட்டியவையாக
- wayawma
- وَيَوْمَ
- and (on the) day
- நாளில்
- lā yasbitūna
- لَا يَسْبِتُونَۙ
- not they had Sabbath
- அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள்
- lā tatīhim
- لَا تَأْتِيهِمْۚ
- (they did) not come to them
- அவை வருவதில்லை/அவர்களிடம்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறு
- nablūhum
- نَبْلُوهُم
- We test them
- சோதித்தோம்/ அவர்களை
- bimā kānū
- بِمَا كَانُوا۟
- because they were
- அவர்கள் இருந்த காரணத்தால்
- yafsuqūna
- يَفْسُقُونَ
- defiantly disobeying
- பாவம் செய்வார்கள்
Transliteration:
Was'alhum 'anil qaryatil latee kaanat haadiratal bahri iz ya'doona fis Sabt iz taateehim heetaanuhum yawma Sabtihim shurra'anw wa yawma laa yasbitoona laa taateehim; kazaalika nabloohum bimaa kaanoo yafsuqoon(QS. al-ʾAʿrāf:163)
English Sahih International:
And ask them about the town that was by the sea – when they transgressed in [the matter of] the sabbath – when their fish came to them openly on their sabbath day, and the day they had no sabbath they did not come to them. Thus did We give them trial because they were defiantly disobedient. (QS. Al-A'raf, Ayah ௧௬௩)
Abdul Hameed Baqavi:
(நபியே) கடற்கரையிலிருந்த ஒரு ஊர் (மக்களைப்) பற்றி நீங்கள் அவர்களைக் கேளுங்கள். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமை யன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், சனிக்கிழமையன்று (அக்கடலில் உள்ள) மீன்கள் அவர்கள் முன் வந்து (நீர் மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௩)
Jan Trust Foundation
(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே) கடலுக்கருகில் இருந்த ஊர் (மக்களைப்) பற்றி அவர்களிடம் விசாரிப்பீராக. சனி(க்கிழமை)யில் அவர்கள் வரம்பு மீறியபோது. அவர்களின் சனிக்கிழமையில் அவர்களுடைய மீன்கள் தலைகளை நீட்டியவையாக அவர்களிடம் வந்தபோது. அவர்கள் சனி(க் கிழமை)யில் இல்லாத (மற்ற) நாளில் அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு அவர்களை சோதித்தோம்.