குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௨
Qur'an Surah Al-A'raf Verse 152
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۗ وَكَذٰلِكَ نَجْزِى الْمُفْتَرِيْنَ (الأعراف : ٧)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- took
- எடுத்துக் கொண்டனர்
- l-ʿij'la
- ٱلْعِجْلَ
- the calf
- காளைக் கன்றை
- sayanāluhum
- سَيَنَالُهُمْ
- will reach them
- அடையும்/அவர்களை
- ghaḍabun
- غَضَبٌ
- wrath
- கோபம்
- min
- مِّن
- from
- இருந்து
- rabbihim
- رَّبِّهِمْ
- their Lord
- அவர்களின் இறைவன்
- wadhillatun
- وَذِلَّةٌ
- and humiliation
- இன்னும் இழிவு
- fī l-ḥayati
- فِى ٱلْحَيَوٰةِ
- in the life
- வாழ்க்கையில்
- l-dun'yā
- ٱلدُّنْيَاۚ
- (of) the world
- உலகம்
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறே
- najzī
- نَجْزِى
- We recompense
- கூலி கொடுப்போம்
- l-muf'tarīna
- ٱلْمُفْتَرِينَ
- the ones who invent (falsehood)
- இட்டுக்கட்டுபவர்களுக்கு
Transliteration:
Innal lazeenat takhazul 'ijla-sa yanaaluhum ghadabum mir Rabbihim wa zillatun fil hayaatid dunyaa; wa kazaalika najzil muftareen(QS. al-ʾAʿrāf:152)
English Sahih International:
Indeed, those who took the calf [for worship] will obtain anger from their Lord and humiliation in the life of this world, and thus do We recompense the inventors [of falsehood]. (QS. Al-A'raf, Ayah ௧௫௨)
Abdul Hameed Baqavi:
(பின்னர் இறைவன் மூஸாவை நோக்கிக் கூறினான்:) "எவர்கள் காளைக்கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை நிச்சயமாக இறைவனின் கோபமும் இழிவும் இவ்வுலக வாழ்க்கையிலேயே அதிசீக்கிரத்தில் வந்தடையும். பொய்யைக் கற்பனை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௨)
Jan Trust Foundation
நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாகக் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டவர்கள் உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் அவர்களை அடையும். இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்.