Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௨

Qur'an Surah Al-A'raf Verse 132

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا مَهْمَا تَأْتِنَا بِهٖ مِنْ اٰيَةٍ لِّتَسْحَرَنَا بِهَاۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ (الأعراف : ٧)

waqālū
وَقَالُوا۟
And they said
இன்னும் கூறினார்கள்
mahmā
مَهْمَا
"Whatever
எவ்வளவோ
tatinā
تَأْتِنَا
you bring us
எங்களிடம் வந்தாலும்
bihi
بِهِۦ
therewith
அதைக் கொண்டு
min āyatin
مِنْ ءَايَةٍ
of (the) sign
அத்தாட்சியை
litasḥaranā
لِّتَسْحَرَنَا
so that you bewitch us
நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக
bihā
بِهَا
with it
அதன் மூலம்
famā naḥnu
فَمَا نَحْنُ
then not we
நாங்கள் இல்லை
laka
لَكَ
(will be) in you
உம்மை
bimu'minīna
بِمُؤْمِنِينَ
believers"
நம்பிக்கை கொள்பவர்களாக

Transliteration:

Wa qaaloo mahmaa taatinaa bihee min Aayatil litasharanaa bihaa famaa nahnu laka bimu'mineen (QS. al-ʾAʿrāf:132)

English Sahih International:

And they said, "No matter what sign you bring us with which to bewitch us, we will not be believers in you." (QS. Al-A'raf, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் (மூஸாவை நோக்கி) "நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்தபோதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

அவர்கள் மூஸாவிடம், “நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மூஸாவை நோக்கி) “நீர் அதன் மூலம் எங்களை ஏமாற்றுவதற்காக எவ்வளவோ அத்தாட்சியை எங்களிடம் நீர் கொண்டு வந்தாலும் நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.