குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௭
Qur'an Surah Al-A'raf Verse 117
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَۚ فَاِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُوْنَۚ (الأعراف : ٧)
- wa-awḥaynā
- وَأَوْحَيْنَآ
- And We inspired
- வஹீ அறிவித்தோம்
- ilā mūsā
- إِلَىٰ مُوسَىٰٓ
- to Musa
- மூஸாவிற்கு
- an alqi
- أَنْ أَلْقِ
- that "Throw
- எறிவீராக என்று
- ʿaṣāka
- عَصَاكَۖ
- your staff"
- உம் தடியை
- fa-idhā hiya talqafu
- فَإِذَا هِىَ تَلْقَفُ
- and suddenly it swallow(ed)
- அப்போது அது விழுங்கிவிட்டது
- mā yafikūna
- مَا يَأْفِكُونَ
- what they (were) falsifying
- எவற்றை/போலியாக செய்வார்கள்
Transliteration:
Wa awhainaaa ilaa Moosaaa an alqi 'asaaka fa izaa hiya talqafu maa yaafikoon(QS. al-ʾAʿrāf:117)
English Sahih International:
And We inspired to Moses, "Throw your staff," and at once it devoured what they were falsifying. (QS. Al-A'raf, Ayah ௧௧௭)
Abdul Hameed Baqavi:
அதுசமயம் நாம் "மூஸாவே! நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" என்று அவருக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அவர் எறியவே (அது பெரியதொரு பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவையும் விழுங்கிவிட்டது. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௭)
Jan Trust Foundation
அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூஸாவிற்கு “நீர் உம் தடியை எறிவீராக” என்று வஹ்யி அறிவித்தோம். (அவர் எறியவே) அப்போது அது அவர்கள் போலியாக செய்தவற்றை விழுங்கி விட்டது.