குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௧
Qur'an Surah Al-A'raf Verse 101
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَاۤىِٕهَاۚ وَلَقَدْ جَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُۗ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ (الأعراف : ٧)
- til'ka l-qurā
- تِلْكَ ٱلْقُرَىٰ
- These (were) the cities
- அந்த ஊர்கள்
- naquṣṣu
- نَقُصُّ
- We relate
- விவரிக்கிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உமக்கு
- min
- مِنْ
- of
- இருந்து
- anbāihā
- أَنۢبَآئِهَاۚ
- their news
- அவற்றின் செய்திகள்
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- jāathum
- جَآءَتْهُمْ
- came to them
- வந்தனர்/அவர்களிடம்
- rusuluhum
- رُسُلُهُم
- their Messengers
- அவர்களுடைய தூதர்கள்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- with clear proofs
- அத்தாட்சிகளைக் கொண்டு
- famā kānū
- فَمَا كَانُوا۟
- but not they were
- அவர்கள் இல்லை
- liyu'minū
- لِيُؤْمِنُوا۟
- to believe
- அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
- bimā
- بِمَا
- in what
- எதை
- kadhabū
- كَذَّبُوا۟
- they (had) denied
- பொய்ப்பித்தனர்
- min qablu
- مِن قَبْلُۚ
- from before
- முன்னர்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறே
- yaṭbaʿu
- يَطْبَعُ
- (has been) put a seal
- முத்திரையிடுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- ʿalā qulūbi
- عَلَىٰ قُلُوبِ
- on (the) hearts
- உள்ளங்கள் மீது
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- (of) the disbelievers
- நிராகரிப்பாளர்களின்
Transliteration:
Tilkal quraa naqussu 'alaika min ambaaa'ihaa; wa laqad jaaa'at hum Rusuluhum bilbaiyinaati famaa kaanoo liyu'minoo bimaa kazzaboo min qabl; kazaalika yatba'ul laahu 'alaa quloobil kaafireen(QS. al-ʾAʿrāf:101)
English Sahih International:
Those cities – We relate to you, [O Muhammad], some of their news. And certainly did their messengers come to them with clear proofs, but they were not to believe in that which they had denied before. Thus does Allah seal over the hearts of the disbelievers. (QS. Al-A'raf, Ayah ௧௦௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) இவ்வூர்களின் சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறுகின்றோம். (அவற்றில் வசித்திருந்த) அவர்களுக்கு (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான வசனங்களையே கொண்டு வந்தனர். எனினும், அவர்களோ முன்னர் ஏதாவது ஒன்றை பொய்யாக்கி விட்டால் (பின்னர் அதனை) ஒருக்காலத்திலும் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவே இருந்தனர். இவ்வாறே, நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௧)
Jan Trust Foundation
(நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்| நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அந்த ஊர்கள் அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (ஓதி) விவரிக்கிறோம். அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். எனினும், முன்னர் அவர்கள் பொய்ப்பித்து விட்டதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.