Skip to content

ஸூரா ஸூரத்துல் அஃராஃப் - Page: 7

Al-A'raf

(al-ʾAʿrāf)

௬௧

قَالَ يٰقَوْمِ لَيْسَ بِيْ ضَلٰلَةٌ وَّلٰكِنِّيْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ ٦١

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
laysa
لَيْسَ
இல்லை
بِى
என்னிடம்
ḍalālatun
ضَلَٰلَةٌ
வழிகேடு
walākinnī
وَلَٰكِنِّى
எனினும் நிச்சயமாக நான்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min rabbi
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அதற்கவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நான் எத்தகைய வழிகேட்டிலும் இல்லை; மாறாக, நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனுடைய ஒரு தூதன்" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௧)
Tafseer
௬௨

اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَاَنْصَحُ لَكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٦٢

uballighukum
أُبَلِّغُكُمْ
எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு
risālāti
رِسَٰلَٰتِ
தூது(செய்தி)களை
rabbī
رَبِّى
என் இறைவனின்
wa-anṣaḥu
وَأَنصَحُ
இன்னும் உபதேசிக்கிறேன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
wa-aʿlamu
وَأَعْلَمُ
இன்னும் அறிகிறேன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
எவற்றை/அறியமாட்டீர்கள்
(அன்றி) "நான் என் இறைவனின் தூதையே உங்களுக்கு எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறேன். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௨)
Tafseer
௬௩

اَوَعَجِبْتُمْ اَنْ جَاۤءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٦٣

awaʿajib'tum
أَوَعَجِبْتُمْ
வியக்கிறீர்களா?
an
أَن
வந்ததைப் பற்றி
jāakum
جَآءَكُمْ
உங்களுக்கு
dhik'run
ذِكْرٌ
நல்லுபதேசம்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
ஒரு மனிதர் மீது
minkum
مِّنكُمْ
உங்களிலுள்ள
liyundhirakum
لِيُنذِرَكُمْ
அவர் எச்சரிப்பதற்காக/உங்களை
walitattaqū
وَلِتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக
walaʿallakum tur'ḥamūna
وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ
இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற் காகவும், நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கின்றது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௩)
Tafseer
௬௪

فَكَذَّبُوْهُ فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ فِى الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَاۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِيْنَ ࣖ ٦٤

fakadhabūhu
فَكَذَّبُوهُ
பொய்ப்பித்தனர்/அவரை
fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
ஆகவே, பாதுகாத்தோம்/அவரை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
wa-aghraqnā
وَأَغْرَقْنَا
இன்னும் மூழ்கடித்தோம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَآۚ
நம் வசனங்களை
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
qawman
قَوْمًا
சமுதாயமாக
ʿamīna
عَمِينَ
குருடானவர்கள்
பின்னும் அவரை அவர்கள் பொய்யரெனவே கூறிவிட்டனர். ஆதலால் அவரையும், அவரைச் சார்ந்தோர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு, நம்முடைய வசனங்கள் பொய்யென்று கூறியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தைக் காண முடியாத) குருடர்களாகவே இருந்தனர். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௪)
Tafseer
௬௫

۞ وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًاۗ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗۗ اَفَلَا تَتَّقُوْنَ ٦٥

wa-ilā ʿādin
وَإِلَىٰ عَادٍ
‘ஆது’க்கு/சகோதரர்
akhāhum
أَخَاهُمْ
அவர்களுடைய
hūdan
هُودًاۗ
ஹூதை
qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே!
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā lakum
مَا لَكُم
உங்களுக்கில்லை
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
வணங்கப்படும் ஒரு கடவுளும்
ghayruhu
غَيْرُهُۥٓۚ
அவனையன்றி
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
"ஆத்" (என்னும்) மக்களுக்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம்முடைய தூதராக அனுப்பினோம்.) அவர் (அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. (ஆகவே) நீங்கள் (அவனுக்கு) பயப்பட வேண்டாமா?" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௫)
Tafseer
௬௬

قَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖٓ اِنَّا لَنَرٰىكَ فِيْ سَفَاهَةٍ وَّاِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكٰذِبِيْنَ ٦٦

qāla
قَالَ
கூறினர்
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min
مِن
இருந்து
qawmihi
قَوْمِهِۦٓ
அவரின் சமுதாயம்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lanarāka
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
fī safāhatin
فِى سَفَاهَةٍ
மடமையில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lanaẓunnuka
لَنَظُنُّكَ
உம்மை எண்ணுகிறோம்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
பொய்யர்களில்
அதற்கு அந்த மக்களிலிருந்த நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நிச்சயமாக நாம் உங்களை மடமையில் (ஆழ்ந்து) கிடப்பவராகவே காண்கிறோம். அன்றி நிச்சயமாக நாம் உங்களை பொய்யரில் ஒருவரெனவே மதிக்கிறோம்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௬)
Tafseer
௬௭

قَالَ يٰقَوْمِ لَيْسَ بِيْ سَفَاهَةٌ وَّلٰكِنِّيْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ ٦٧

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் சமுதாயமே
laysa
لَيْسَ
இல்லை
بِى
என்னிடம்
safāhatun
سَفَاهَةٌ
மடமை
walākinnī
وَلَٰكِنِّى
எனினும் நிச்சயமாக நான்
rasūlun
رَسُولٌ
ஒரு தூதர்
min rabbi
مِّن رَّبِّ
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
அதற்கு அவர் "என்னுடைய மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனின் ஒரு தூதனே!" என்று கூறினார். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௭)
Tafseer
௬௮

اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّيْ وَاَنَا۠ لَكُمْ نَاصِحٌ اَمِيْنٌ ٦٨

uballighukum
أُبَلِّغُكُمْ
எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு
risālāti
رِسَٰلَٰتِ
தூதுகளை
rabbī
رَبِّى
என் இறைவனின்
wa-anā
وَأَنَا۠
நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
nāṣiḥun
نَاصِحٌ
உபதேசி(ப்பவன்)
amīnun
أَمِينٌ
நம்பிக்கைக்குரிய
(அன்றி) "என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய உபதேசியாகவும் இருக்கின்றேன். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௮)
Tafseer
௬௯

اَوَعَجِبْتُمْ اَنْ جَاۤءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْۗ وَاذْكُرُوْٓا اِذْ جَعَلَكُمْ خُلَفَاۤءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَلْقِ بَصْۣطَةً ۚفَاذْكُرُوْٓا اٰلَاۤءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٦٩

awaʿajib'tum
أَوَعَجِبْتُمْ
நீங்கள் வியக்கிறீர்களா?
an
أَن
வந்ததைப் பற்றி
jāakum
جَآءَكُمْ
உங்களுக்கு
dhik'run
ذِكْرٌ
நல்லுபதேசம்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
ஒரு மனிதர் மீது
minkum
مِّنكُمْ
உங்களில்
liyundhirakum
لِيُنذِرَكُمْۚ
உங்களை எச்சரிப்பதற்காக
wa-udh'kurū
وَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
idh
إِذْ
சமயம்
jaʿalakum
جَعَلَكُمْ
ஆக்கினான்
khulafāa
خُلَفَآءَ
பிரதிநிதிகளாக
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
qawmi
قَوْمِ
சமுதாயத்திற்கு
nūḥin
نُوحٍ
நூஹூடைய
wazādakum
وَزَادَكُمْ
இன்னும் அதிகப்படுத்தினான் உங்களுக்கு
fī l-khalqi
فِى ٱلْخَلْقِ
படைப்பில்
baṣ'ṭatan
بَصْۜطَةًۖ
விரிவை
fa-udh'kurū
فَٱذْكُرُوٓا۟
நினைவு கூருங்கள்
ālāa
ءَالَآءَ
அருட்கொடைகளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
நீங்கள் வெற்றி பெறுவதற்காக
"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களில் ஒருவர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்காக நல்லுபதேசம் வருவதைப் பற்றியா நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள்? நூஹுடைய மக்களுக்குப் பின்னர் அவன் உங்களை (பூமியில்) அதிபதிகளாக்கி வைத்து தேகத்திலும், (வலுவிலும் மற்றவர்களை விட) உங்களுக்கு அதிகமாகவே கொடுத்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வின் இவ்வருட்கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறலாம்" (என்றும் கூறினார்.) ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௬௯)
Tafseer
௭௦

قَالُوْٓا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ اٰبَاۤؤُنَاۚ فَأْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٧٠

qālū
قَالُوٓا۟
கூறினர்
aji'tanā
أَجِئْتَنَا
எங்களிடம் வந்தீரா?
linaʿbuda
لِنَعْبُدَ
நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
waḥdahu
وَحْدَهُۥ
அவன் ஒருவனை மட்டும்
wanadhara
وَنَذَرَ
இன்னும் நாங்கள் விட்டுவிட்டு
مَا
எவற்றை
kāna
كَانَ
இருந்தார்(கள்)
yaʿbudu
يَعْبُدُ
வணங்குவார்(கள்)
ābāunā
ءَابَآؤُنَاۖ
எங்கள் மூதாதைகள்
fatinā
فَأْتِنَا
வருவீராக/எங்களிடம்
bimā
بِمَا
எதைக் கொண்டு
taʿidunā
تَعِدُنَآ
எச்சரிக்கிறீர்/எங்களை
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அதற்கவர்கள் "எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந் தவைளை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௭] ஸூரத்துல் அஃராஃப்: ௭௦)
Tafseer