Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 9

Al-An'am

(al-ʾAnʿām)

௮௧

وَكَيْفَ اَخَافُ مَآ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ عَلَيْكُمْ سُلْطٰنًا ۗفَاَيُّ الْفَرِيْقَيْنِ اَحَقُّ بِالْاَمْنِۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۘ ٨١

wakayfa
وَكَيْفَ
எவ்வாறு
akhāfu
أَخَافُ
பயப்படுவேன்
مَآ
எதை
ashraktum
أَشْرَكْتُمْ
இணைவைத்தீர்கள்
walā takhāfūna
وَلَا تَخَافُونَ
நீங்கள் பயப்படுவதில்லை
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
ashraktum
أَشْرَكْتُم
இணைவைத்தீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
mā lam yunazzil
مَا لَمْ يُنَزِّلْ
எதை/அவன் இறக்கவில்லை
bihi
بِهِۦ
அதற்கு
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
sul'ṭānan
سُلْطَٰنًاۚ
ஓர் ஆதாரத்தை
fa-ayyu
فَأَىُّ
ஆகவே யார்?
l-farīqayni
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரில்
aḥaqqu
أَحَقُّ
மிகத்தகுதியுடையவர்
bil-amni
بِٱلْأَمْنِۖ
பாதுகாப்புப்பெற
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்
உங்களுக்கு யாதொரு அத்தாட்சியுமில்லாமல் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௧)
Tafseer
௮௨

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْٓا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤىِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ ࣖ ٨٢

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
walam yalbisū
وَلَمْ يَلْبِسُوٓا۟
அவர்கள் கலக்கவில்லை
īmānahum
إِيمَٰنَهُم
தங்கள் நம்பிக்கையில்
biẓul'min
بِظُلْمٍ
அநியாயத்தை
ulāika lahumu
أُو۟لَٰٓئِكَ لَهُمُ
அவர்களுக்கே
l-amnu
ٱلْأَمْنُ
பாதுகாப்பு உண்டு
wahum
وَهُم
அவர்கள்
muh'tadūna
مُّهْتَدُونَ
நேர்வழி பெற்றவர்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணை வைத்தல் என்னும்) யாதொரு அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேரான வழியிலும் இருக்கின்றனர்" (என்று கூறினார்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௨)
Tafseer
௮௩

وَتِلْكَ حُجَّتُنَآ اٰتَيْنٰهَآ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖۗ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَاۤءُۗ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ ٨٣

watil'ka
وَتِلْكَ
இவை
ḥujjatunā
حُجَّتُنَآ
நம் சான்று
ātaynāhā
ءَاتَيْنَٰهَآ
கொடுத்தோம்/அவற்றை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுக்கு
ʿalā
عَلَىٰ
எதிராக
qawmihi
قَوْمِهِۦۚ
அவருடைய சமுதாயம்
narfaʿu
نَرْفَعُ
உயர்த்துகிறோம்
darajātin
دَرَجَٰتٍ
பதவிகளால்
man
مَّن
எவரை
nashāu
نَّشَآءُۗ
நாடுகிறோம்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(மேற்கூறப்பட்ட) இவை நம்முடைய உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்ராஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவைகளை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவியை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகின்றோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக ஞானமுடையவனாகவும், மிகுந்த அறிவுடையவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௩)
Tafseer
௮௪

وَوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَۗ كُلًّا هَدَيْنَا وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَهٰرُوْنَ ۗوَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ ٨٤

wawahabnā
وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥٓ
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கை
wayaʿqūba
وَيَعْقُوبَۚ
இன்னும் யஃகூபை
kullan
كُلًّا
எல்லோரையும்
hadaynā
هَدَيْنَاۚ
நேர்வழி செலுத்தினோம்
wanūḥan
وَنُوحًا
இன்னும் நூஹை
hadaynā
هَدَيْنَا
நேர்வழி செலுத்தினோம்
min qablu
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
wamin
وَمِن
இன்னும் இருந்து
dhurriyyatihi
ذُرِّيَّتِهِۦ
அவருடைய சந்ததி
dāwūda
دَاوُۥدَ
தாவூதை
wasulaymāna
وَسُلَيْمَٰنَ
இன்னும் ஸுலைமானை
wa-ayyūba
وَأَيُّوبَ
இன்னும் அய்யூபை
wayūsufa
وَيُوسُفَ
இன்னும் யூஸýஃபை
wamūsā
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவை
wahārūna
وَهَٰرُونَۚ
இன்னும் ஹறாரூனை
wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
najzī
نَجْزِى
கூலிகொடுக்கிறோம்
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிவோருக்கு
நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஃகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்) கூலி அளிக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௪)
Tafseer
௮௫

وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَۗ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ ٨٥

wazakariyyā
وَزَكَرِيَّا
இன்னும் ஸகரிய்யாவை
wayaḥyā
وَيَحْيَىٰ
இன்னும் யஹ்யாவை
waʿīsā
وَعِيسَىٰ
இன்னும் ஈஸாவை
wa-il'yāsa
وَإِلْيَاسَۖ
இன்னும் இல்யாûஸ
kullun
كُلٌّ
எல்லோரும்
mina l-ṣāliḥīna
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லோரில்
ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௫)
Tafseer
௮௬

وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًاۗ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ ٨٦

wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
இன்னும் இஸ்மாயீலை
wal-yasaʿa
وَٱلْيَسَعَ
இன்னும் அல்யஸஉவை
wayūnusa
وَيُونُسَ
இன்னும் யூனுஸ்
walūṭan
وَلُوطًاۚ
இன்னும் லூத்தை
wakullan
وَكُلًّا
எல்லோரையும்
faḍḍalnā
فَضَّلْنَا
மேன்மைப்படுத்தினோம்
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரை விட
இஸ்மாயீல், அல்யஸவு (எலிஸை,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௬)
Tafseer
௮௭

وَمِنْ اٰبَاۤىِٕهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ ۚوَاجْتَبَيْنٰهُمْ وَهَدَيْنٰهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٨٧

wamin ābāihim
وَمِنْ ءَابَآئِهِمْ
இன்னும் இவர்களுடைய மூதாதைகளிலும்
wadhurriyyātihim
وَذُرِّيَّٰتِهِمْ
இன்னும் இவர்களுடைய சந்ததிகளிலும்
wa-ikh'wānihim
وَإِخْوَٰنِهِمْۖ
இன்னும் இவர்களுடைய சகோதரர்களிலும்
wa-ij'tabaynāhum
وَٱجْتَبَيْنَٰهُمْ
இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம்
wahadaynāhum
وَهَدَيْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டினோம்
ilā
إِلَىٰ
பக்கம்
ṣirāṭin mus'taqīmin
صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
நேரான பாதை
இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௭)
Tafseer
௮௮

ذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِيْ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۗوَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ ٨٨

dhālika
ذَٰلِكَ
இதுவே
hudā
هُدَى
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
yahdī
يَهْدِى
நேர்வழி செலுத்துகிறான்
bihi
بِهِۦ
அதன் மூலம்
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
min
مِنْ
அடியார்களில்
ʿibādihi
عِبَادِهِۦۚ
அடியார்களில் தன்
walaw ashrakū
وَلَوْ أَشْرَكُوا۟
அவர்கள் இணைவைத்தால்
laḥabiṭa
لَحَبِطَ
அழிந்து விடும்
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا
எவை
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கிறார்கள்
(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௮)
Tafseer
௮௯

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ۚفَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَاۤءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ ٨٩

ulāika
أُو۟لَٰٓئِكَ
alladhīna
ٱلَّذِينَ
இவர்கள்/எவர்கள்
ātaynāhumu
ءَاتَيْنَٰهُمُ
கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
wal-ḥuk'ma
وَٱلْحُكْمَ
இன்னும் ஞானத்தை
wal-nubuwata
وَٱلنُّبُوَّةَۚ
இன்னும் நபித்துவத்தை
fa-in yakfur
فَإِن يَكْفُرْ
ஆகவே நிராகரித்தால்
bihā
بِهَا
அவற்றை
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்கள்
faqad wakkalnā
فَقَدْ وَكَّلْنَا
பொறுப்பாக்கி விடுவோம்
bihā
بِهَا
அவற்றுக்கு
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
laysū
لَّيْسُوا۟
அவர்கள் இல்லை
bihā
بِهَا
அவற்றை
bikāfirīna
بِكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களாக
இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௮௯)
Tafseer
௯௦

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ فَبِهُدٰىهُمُ اقْتَدِهْۗ قُلْ لَّآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًاۗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ ࣖ ٩٠

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna hadā
ٱلَّذِينَ هَدَى
எவர்கள்/நேர்வழி செலுத்தினான்
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
fabihudāhumu
فَبِهُدَىٰهُمُ
ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே
iq'tadih
ٱقْتَدِهْۗ
பின்பற்றுவீராக/அதை
qul
قُل
கூறுவீராக
lā asalukum
لَّآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்க மாட்டேன்/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
ajran
أَجْرًاۖ
ஒரு கூலியை
in huwa
إِنْ هُوَ
இல்லை/இது
illā dhik'rā
إِلَّا ذِكْرَىٰ
தவிர/நல்லுபதேசம்
lil'ʿālamīna
لِلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். மேலும் "இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்" என்று கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௯௦)
Tafseer