Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 2

Al-An'am

(al-ʾAnʿām)

௧௧

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ ١١

qul
قُلْ
கூறுவீராக
sīrū
سِيرُوا۟
செல்லுங்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
thumma
ثُمَّ
பிறகு
unẓurū
ٱنظُرُوا۟
பாருங்கள்
kayfa kāna
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-mukadhibīna
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களின்
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௧)
Tafseer
௧௨

قُلْ لِّمَنْ مَّا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلْ لِّلّٰهِ ۗ كَتَبَ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ۗ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِۗ اَلَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ ١٢

qul
قُل
கூறுவீராக
liman
لِّمَن
யாருக்குரியன?
mā fī l-samāwāti
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
எவை/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
இன்னும் பூமியில்
qul
قُل
கூறுவீராக
lillahi
لِّلَّهِۚ
அல்லாஹ்வுக்குரியன
kataba
كَتَبَ
கடமையாக்கினான்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِ
தன் மீது
l-raḥmata
ٱلرَّحْمَةَۚ
கருணை புரிவதை
layajmaʿannakum
لَيَجْمَعَنَّكُمْ
நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِۚ
அதில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
khasirū
خَسِرُوٓا۟
நஷ்டமாக்கினர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களை
fahum
فَهُمْ
அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(அன்றி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?" என நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) "அல்லாஹ்வுக்குரியனவே!" என்று கூறுங்கள். அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். (ஆகவேதான் உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கின்றான். எனினும்) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதனை) நம்பவே மாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨)
Tafseer
௧௩

۞ وَلَهٗ مَا سَكَنَ فِى الَّيْلِ وَالنَّهَارِ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ١٣

walahu
وَلَهُۥ
அவனுக்குரியனவே
مَا
எவை
sakana
سَكَنَ
தங்கியன
fī al-layli
فِى ٱلَّيْلِ
இரவில்
wal-nahāri
وَٱلنَّهَارِۚ
இன்னும் பகலில்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩)
Tafseer
௧௪

قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ اِنِّيْٓ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ١٤

qul
قُلْ
கூறுவீராக
aghayra
أَغَيْرَ
அல்லாதவரையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
attakhidhu
أَتَّخِذُ
எடுத்துக்கொள்வேன்
waliyyan
وَلِيًّا
பாதுகாவலனாக
fāṭiri
فَاطِرِ
படைப்பாளன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
wahuwa
وَهُوَ
அவன்தான்
yuṭ'ʿimu
يُطْعِمُ
உணவளிக்கிறான்
walā yuṭ'ʿamu
وَلَا يُطْعَمُۗ
அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை
qul
قُلْ
கூறுவீராக
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
umir'tu
أُمِرْتُ
கட்டளையிடப்பட்டுள்ளேன்
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென
awwala
أَوَّلَ
முதலாமவனாக
man
مَنْ
எவர்
aslama
أَسْلَمَۖ
பணிந்தார்
walā takūnanna
وَلَا تَكُونَنَّ
நீர் ஆகிவிடாதீர்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வை அன்றி (மற்றெவரையும் என்னை) பாதுகாப்பவனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கின்றான்; அவனுக்கு யாரும் அளிப்பதில்லை. (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪)
Tafseer
௧௫

قُلْ اِنِّيْٓ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ ١٥

qul
قُلْ
கூறுவீராக
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
in ʿaṣaytu
إِنْ عَصَيْتُ
நான் மாறுசெய்தால்
rabbī
رَبِّى
என் இறைவனுக்கு
ʿadhāba
عَذَابَ
வேதனையை
yawmin
يَوْمٍ
ஒரு நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
மகத்தானது
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫)
Tafseer
௧௬

مَنْ يُّصْرَفْ عَنْهُ يَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمَهٗ ۗوَذٰلِكَ الْفَوْزُ الْمُبِيْنُ ١٦

man
مَّن
எவர்
yuṣ'raf
يُصْرَفْ
தடுக்கப்படும்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
faqad raḥimahu
فَقَدْ رَحِمَهُۥۚ
திட்டமாக/அருள்புரிந்தான்/அவருக்கு
wadhālika l-fawzu
وَذَٰلِكَ ٱلْفَوْزُ
இதுதான்/வெற்றி
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவானது
அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள்புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬)
Tafseer
௧௭

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗٓ اِلَّا هُوَ ۗوَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١٧

wa-in yamsaska
وَإِن يَمْسَسْكَ
தொட்டால்/உம்மை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biḍurrin
بِضُرٍّ
ஒரு சிரமத்தைக் கொண்டு
falā
فَلَا
அறவே இல்லை
kāshifa lahu
كَاشِفَ لَهُۥٓ
நீக்குபவர்/அதை
illā huwa
إِلَّا هُوَۖ
அவனைத் தவிர
wa-in yamsaska
وَإِن يَمْسَسْكَ
தொட்டால்/உம்மை
bikhayrin
بِخَيْرٍ
ஒரு நன்மையைக்கொண்டு
fahuwa
فَهُوَ
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(நபியே!) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைத்தால், அதனை நீக்குபவர்கள் அவனையன்றி வேறெவருமில்லை. உங்களுக்கு யாதொரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௭)
Tafseer
௧௮

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖۗ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ ١٨

wahuwa
وَهُوَ
அவன்தான்
l-qāhiru
ٱلْقَاهِرُ
ஆதிக்கமுடையவன்
fawqa
فَوْقَ
மேல்
ʿibādihi
عِبَادِهِۦۚ
தன் அடியார்கள்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
ஞானவான்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிந்தவன்
அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அன்றி, அவன்தான் மிக்க ஞானமுடையவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௮)
Tafseer
௧௯

قُلْ اَيُّ شَيْءٍ اَكْبَرُ شَهَادَةً ۗ قُلِ اللّٰهُ ۗشَهِيْدٌۢ بَيْنِيْ وَبَيْنَكُمْ ۗوَاُوْحِيَ اِلَيَّ هٰذَا الْقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ ۗ اَىِٕنَّكُمْ لَتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰىۗ قُلْ لَّآ اَشْهَدُ ۚ قُلْ اِنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّاِنَّنِيْ بَرِيْۤءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ١٩

qul
قُلْ
கூறுவீராக
ayyu shayin
أَىُّ شَىْءٍ
எந்த/ஒரு பொருள்
akbaru
أَكْبَرُ
மிகப் பெரியது
shahādatan
شَهَٰدَةًۖ
சாட்சியால்
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُۖ
அல்லாஹ்
shahīdun
شَهِيدٌۢ
சாட்சியாளன்
baynī
بَيْنِى
எனக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْۚ
இன்னும் உங்களுக்கிடையில்
waūḥiya
وَأُوحِىَ
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
எனக்கு
hādhā l-qur'ānu
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
li-undhirakum
لِأُنذِرَكُم
நான் எச்சரிப்பதற்காக/உங்களை
bihi
بِهِۦ
இதன்மூலம்
waman
وَمَنۢ
இன்னும் எவர்
balagha
بَلَغَۚ
அது சென்றடைந்தது
a-innakum
أَئِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
latashhadūna
لَتَشْهَدُونَ
சாட்சி கூறுகிறீர்கள்
anna maʿa
أَنَّ مَعَ
நிச்சயமாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ் உடன்
ālihatan
ءَالِهَةً
வணங்கப்படும் கடவுள்கள்
ukh'rā
أُخْرَىٰۚ
வேறு
qul
قُل
கூறுவீராக
lā ashhadu
لَّآ أَشْهَدُۚ
சாட்சி கூறமாட்டேன்
qul
قُلْ
கூறுவீராக
innamā huwa
إِنَّمَا هُوَ
அவனெல்லாம்
ilāhun
إِلَٰهٌ
வணங்கப்படும் ஒரு கடவுள்
wāḥidun
وَٰحِدٌ
ஒருவன்
wa-innanī
وَإِنَّنِى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
விலகியவன்
mimmā tush'rikūna
مِّمَّا تُشْرِكُونَ
எவற்றிலிருந்து/இணைவைக்கிறீர்கள்
(நபியே!) "சாட்சிகளில் மிகப் பெரியது எது?" என நீங்கள் அவர்களைக்) கேளுங்கள். (அவர்களால் என்ன கூறமுடியும்? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கின்றான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக (உண்மையாகவே) நீங்கள் உறுதியாகக் கூறுவீர்களா?" என்றும் (அவர்களை) நீங்கள் கேளுங்கள். (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! "அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!" என்று நீங்கள் கூறி "நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை மெய்யாகவே நான் வெறுக்கின்றேன்" என்றும் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௯)
Tafseer
௨௦

اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَاۤءَهُمْۘ اَلَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ ࣖ ٢٠

alladhīna ātaynāhumu
ٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
yaʿrifūnahu
يَعْرِفُونَهُۥ
அறிவார்கள்/அதை
kamā
كَمَا
போல்
yaʿrifūna
يَعْرِفُونَ
அறிவார்கள்
abnāahumu
أَبْنَآءَهُمُۘ
குழந்தைகளை/தங்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
khasirū
خَسِرُوٓا۟
நஷ்டமிழைத்தார்கள்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கு
fahum
فَهُمْ
அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப் போல, வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (நமது தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தாம் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௨௦)
Tafseer