Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨

Qur'an Surah Al-An'am Verse 12

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لِّمَنْ مَّا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلْ لِّلّٰهِ ۗ كَتَبَ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ۗ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِۗ اَلَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ (الأنعام : ٦)

qul
قُل
Say
கூறுவீராக
liman
لِّمَن
"To whom (belongs)
யாருக்குரியன?
mā fī l-samāwāti
مَّا فِى ٱلسَّمَٰوَٰتِ
what (is) in the heavens
எவை/வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth?"
இன்னும் பூமியில்
qul
قُل
Say
கூறுவீராக
lillahi
لِّلَّهِۚ
"To Allah"
அல்லாஹ்வுக்குரியன
kataba
كَتَبَ
He has decreed
கடமையாக்கினான்
ʿalā nafsihi
عَلَىٰ نَفْسِهِ
upon Himself
தன் மீது
l-raḥmata
ٱلرَّحْمَةَۚ
the Mercy
கருணை புரிவதை
layajmaʿannakum
لَيَجْمَعَنَّكُمْ
Surely He will assemble you
நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
on (the) Day (of) the Resurrection
மறுமை நாளில்
lā rayba
لَا رَيْبَ
(there is) no doubt
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِۚ
about it
அதில்
alladhīna
ٱلَّذِينَ
Those who
எவர்கள்
khasirū
خَسِرُوٓا۟
have lost
நஷ்டமாக்கினர்
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களை
fahum
فَهُمْ
then they
அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
(do) not believe
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Qul limam maa fis samaawaati wal ardi qul lillaah; kataba 'alaa nafsihir rahmah; la yajma 'annakum ilaa Yawmil Qiyaamati laa raiba feeh; allazeena khasirooo anfusahum fahum laa yu'minoon (QS. al-ʾAnʿām:12)

English Sahih International:

Say, "To whom belongs whatever is in the heavens and earth?" Say, "To Allah." He has decreed upon Himself mercy. He will surely assemble you for the Day of Resurrection, about which there is no doubt. Those who will lose themselves [that Day] do not believe. (QS. Al-An'am, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?" என நீங்கள் (அவர்களைக்) கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) "அல்லாஹ்வுக்குரியனவே!" என்று கூறுங்கள். அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். (ஆகவேதான் உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கின்றான். எனினும்) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதனை) நம்பவே மாட்டார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” எனக் கூறுவீராக. (நபியே நீர்) கூறுவீராக: (அவை) “அல்லாஹ்வுக்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. தங்களையே நஷ்டப்படுத்தியவர்கள், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.