Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 17

Al-An'am

(al-ʾAnʿām)

௧௬௧

قُلْ اِنَّنِيْ هَدٰىنِيْ رَبِّيْٓ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ەۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًاۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ١٦١

qul
قُلْ
கூறுவீராக
innanī
إِنَّنِى
நிச்சயமாக நான்
hadānī
هَدَىٰنِى
நேர்வழி காட்டினான் எனக்கு
rabbī
رَبِّىٓ
என் இறைவன்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பாதையின் பக்கம்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரானது
dīnan
دِينًا
மார்க்கமாகும்
qiyaman
قِيَمًا
நிலையான
millata
مِّلَّةَ
கொள்கை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
ḥanīfan
حَنِيفًاۚ
உறுதியுடையவர்
wamā kāna
وَمَا كَانَ
அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
"நிச்சயமாக என்னுடைய இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும். அன்றி இப்ராஹீமுடைய நேரான மார்க்கமுமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௧)
Tafseer
௧௬௨

قُلْ اِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ ١٦٢

qul inna
قُلْ إِنَّ
கூறுவீராக/நிச்சயமாக
ṣalātī
صَلَاتِى
என் தொழுகை
wanusukī
وَنُسُكِى
இன்னும் என் பலி
wamaḥyāya
وَمَحْيَاىَ
இன்னும் என் வாழ்வு
wamamātī
وَمَمَاتِى
இன்னும் என் மரணம்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரின்
(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௨)
Tafseer
௧௬௩

لَا شَرِيْكَ لَهٗ ۚوَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا۠ اَوَّلُ الْمُسْلِمِيْنَ ١٦٣

لَا
அறவே இல்லை
sharīka lahu
شَرِيكَ لَهُۥۖ
இணை/அவனுக்கு
wabidhālika
وَبِذَٰلِكَ
இதைக்கொண்டே
umir'tu
أُمِرْتُ
ஏவப்பட்டுள்ளேன்
wa-anā
وَأَنَا۠
நான்
awwalu
أَوَّلُ
முதலாமவன்
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்
அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்" (என்றும் கூறுங்கள்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௩)
Tafseer
௧௬௪

قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَيْءٍۗ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ اِلَّا عَلَيْهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ ١٦٤

qul
قُلْ
கூறுவீராக
aghayra
أَغَيْرَ
அல்லாதவனையா?
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
abghī
أَبْغِى
தேடுவேன்
rabban
رَبًّا
இறைவனாக
wahuwa
وَهُوَ
அவன் இருக்க
rabbu
رَبُّ
இறைவன்
kulli shayin
كُلِّ شَىْءٍۚ
எல்லாவற்றின்
walā taksibu
وَلَا تَكْسِبُ
செய்வதில்லை
kullu nafsin
كُلُّ نَفْسٍ
ஒவ்வொரு ஆன்மா
illā
إِلَّا
தவிர
ʿalayhā
عَلَيْهَاۚ
தனக்கெதிராக
walā taziru
وَلَا تَزِرُ
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
பாவம் செய்யக்கூடிய ஆன்மா
wiz'ra
وِزْرَ
பாவத்தை
ukh'rā
أُخْرَىٰۚ
மற்றொன்றின்
thumma
ثُمَّ
பிறகு
ilā
إِلَىٰ
பக்கம்தான்
rabbikum
رَبِّكُم
உங்கள் இறைவன்
marjiʿukum
مَّرْجِعُكُمْ
உங்கள் மீட்சி
fayunabbi-ukum
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
bimā
بِمَا
எதை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
fīhi
فِيهِ
அதில்
takhtalifūna
تَخْتَلِفُونَ
முரண்படுகிறீர்கள்
அன்றி "அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௪)
Tafseer
௧௬௫

وَهُوَ الَّذِيْ جَعَلَكُمْ خَلٰۤىِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِيْ مَآ اٰتٰىكُمْۗ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِۖ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ١٦٥

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
அவன்/எவன்
jaʿalakum
جَعَلَكُمْ
ஆக்கினான்/உங்களை
khalāifa
خَلَٰٓئِفَ
வழித்தோன்றல்களாக
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியில்
warafaʿa
وَرَفَعَ
இன்னும் உயர்த்தினான்
baʿḍakum
بَعْضَكُمْ
உங்களில் சிலரை
fawqa baʿḍin
فَوْقَ بَعْضٍ
சிலருக்கு மேல்
darajātin
دَرَجَٰتٍ
பதவிகளில்
liyabluwakum
لِّيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
fī mā ātākum
فِى مَآ ءَاتَىٰكُمْۗ
எவற்றில்/கொடுத்தான்/உங்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
sarīʿu
سَرِيعُ
தீவிரமானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்
wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
laghafūrun
لَغَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌۢ
பெரும் கருணையாளன்
அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். அன்றி, உங்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கின்றான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். நிச்சயமாக உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவனும் பேரன்புடைய வனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௫)
Tafseer