Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௫

Qur'an Surah Al-An'am Verse 165

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ جَعَلَكُمْ خَلٰۤىِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِيْ مَآ اٰتٰىكُمْۗ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِۖ وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ (الأنعام : ٦)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
And He (is) the One Who
அவன்/எவன்
jaʿalakum
جَعَلَكُمْ
(has) made you
ஆக்கினான்/உங்களை
khalāifa
خَلَٰٓئِفَ
successors
வழித்தோன்றல்களாக
l-arḍi
ٱلْأَرْضِ
(of) the earth
பூமியில்
warafaʿa
وَرَفَعَ
and raised
இன்னும் உயர்த்தினான்
baʿḍakum
بَعْضَكُمْ
some of you
உங்களில் சிலரை
fawqa baʿḍin
فَوْقَ بَعْضٍ
above others
சிலருக்கு மேல்
darajātin
دَرَجَٰتٍ
(in) ranks
பதவிகளில்
liyabluwakum
لِّيَبْلُوَكُمْ
so that He may test you
அவன் உங்களை சோதிப்பதற்காக
fī mā ātākum
فِى مَآ ءَاتَىٰكُمْۗ
in what He has given you
எவற்றில்/கொடுத்தான்/உங்களுக்கு
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உம் இறைவன்
sarīʿu
سَرِيعُ
(is) swift
தீவிரமானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
(in) the punishment
தண்டிப்பதில்
wa-innahu
وَإِنَّهُۥ
and indeed He (is)
இன்னும் நிச்சயமாக அவன்தான்
laghafūrun
لَغَفُورٌ
[certainly] Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌۢ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Wa Huwal lazee ja'alakum khalaaa'ifal ardi wa rafa'a ba'dakum fawqa ba'din darajaatil liyabluwakum fee maaa aataakum; inna Rabbaka saree'ul 'iqaab; wa innahoo la Ghafoorur Raheem (QS. al-ʾAnʿām:165)

English Sahih International:

And it is He who has made you successors upon the earth and has raised some of you above others in degrees [of rank] that He may try you through what He has given you. Indeed, your Lord is swift in penalty; but indeed, He is Forgiving and Merciful. (QS. Al-An'am, Ayah ௧௬௫)

Abdul Hameed Baqavi:

அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். அன்றி, உங்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கின்றான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிக்கின்றான். நிச்சயமாக உங்கள் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவனும் பேரன்புடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௫)

Jan Trust Foundation

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உங்களை பூமியில் (முன் சென்றவர்களின்) வழிதோன்றல்களாக (பிரதிநிதிகளாக) ஆக்கினான். உங்களுக்கு (அவன்) கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலருக்கு மேல் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும் நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.