Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 16

Al-An'am

(al-ʾAnʿām)

௧௫௧

۞ قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـًٔا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًاۚ وَلَا تَقْتُلُوْٓا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍۗ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ ۚوَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّۗ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ١٥١

qul
قُلْ
கூறுவீராக
taʿālaw
تَعَالَوْا۟
வாருங்கள்
atlu
أَتْلُ
ஓதுகிறேன்
mā ḥarrama
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்கள் மீது
allā tush'rikū
أَلَّا تُشْرِكُوا۟
இணையாக்காதீர்கள்
bihi
بِهِۦ
அவனுக்கு
shayan
شَيْـًٔاۖ
எதையும்
wabil-wālidayni
وَبِٱلْوَٰلِدَيْنِ
இன்னும் தாய் தந்தையுடன்
iḥ'sānan
إِحْسَٰنًاۖ
அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள்
walā taqtulū
وَلَا تَقْتُلُوٓا۟
இன்னும் கொல்லாதீர்கள்
awlādakum
أَوْلَٰدَكُم
உங்கள் பிள்ளைகளை
min im'lāqin
مِّنْ إِمْلَٰقٍۖ
வறுமையினால்
naḥnu
نَّحْنُ
நாம்
narzuqukum
نَرْزُقُكُمْ
உணவளிக்கிறோம்/உங்களுக்கு
wa-iyyāhum
وَإِيَّاهُمْۖ
இன்னும் அவர்களுக்கு
walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
இன்னும் நெருங்காதீர்கள்
l-fawāḥisha
ٱلْفَوَٰحِشَ
மானக்கேடானவற்றை
مَا
எது
ẓahara
ظَهَرَ
வெளிப்படையானது
min'hā
مِنْهَا
அவற்றில்
wamā baṭana
وَمَا بَطَنَۖ
இன்னும் மறைந்தது
walā taqtulū
وَلَا تَقْتُلُوا۟
இன்னும் கொல்லாதீர்கள்
l-nafsa
ٱلنَّفْسَ
உயிரை
allatī
ٱلَّتِى
எது
ḥarrama
حَرَّمَ
தடை செய்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّۚ
நியாயமின்றி
dhālikum
ذَٰلِكُمْ
அது
waṣṣākum
وَصَّىٰكُم
உபதேசிக்கிறான்/உங்களுக்கு
bihi
بِهِۦ
இவற்றை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுப்பவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு யாதொன்றையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௧)
Tafseer
௧௫௨

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ ۚوَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِۚ لَا نُكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰىۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْاۗ ذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَۙ ١٥٢

walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
māla
مَالَ
செல்வத்தை
l-yatīmi
ٱلْيَتِيمِ
அநாதையின்
illā
إِلَّا
தவிர
bi-allatī hiya
بِٱلَّتِى هِىَ
எதைக்கொண்டு/அது
aḥsanu
أَحْسَنُ
மிக அழகிய வழி
ḥattā
حَتَّىٰ
வரை
yablugha
يَبْلُغَ
அவர் அடைவார்
ashuddahu
أَشُدَّهُۥۖ
அவருடைய பருவத்தை
wa-awfū
وَأَوْفُوا۟
இன்னும் முழுமைப்படுத்துங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
அளவையை
wal-mīzāna
وَٱلْمِيزَانَ
இன்னும் நிறுவையை
bil-qis'ṭi
بِٱلْقِسْطِۖ
நீதமாக
lā nukallifu
لَا نُكَلِّفُ
நாம் சிரமம் (சட்டம்) கொடுப்பதேயில்லை
nafsan
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
illā wus'ʿahā
إِلَّا وُسْعَهَاۖ
தவிர/அதன் சக்திக்கு உட்பட்டே தவிர
wa-idhā qul'tum
وَإِذَا قُلْتُمْ
இன்னும் நீங்கள் கூறினால்
fa-iʿ'dilū
فَٱعْدِلُوا۟
நீதமாக கூறுங்கள்
walaw kāna
وَلَوْ كَانَ
அவர் இருந்தாலும்
dhā qur'bā
ذَا قُرْبَىٰۖ
உறவினராக
wabiʿahdi
وَبِعَهْدِ
இன்னும் வாக்குறுதியை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
awfū
أَوْفُوا۟ۚ
நிறைவேற்றுங்கள்
dhālikum waṣṣākum
ذَٰلِكُمْ وَصَّىٰكُم
இவை/உபதேசித்தான்/உங்களுக்கு
bihi
بِهِۦ
இவற்றைக் கொண்டு
laʿallakum tadhakkarūna
لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
"அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௨)
Tafseer
௧௫௩

وَاَنَّ هٰذَا صِرَاطِيْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ ۚوَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ ۗذٰلِكُمْ وَصّٰىكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ١٥٣

wa-anna
وَأَنَّ
நிச்சயமாக
hādhā
هَٰذَا
இது
ṣirāṭī
صِرَٰطِى
என் பாதை
mus'taqīman
مُسْتَقِيمًا
நேரானது
fa-ittabiʿūhu
فَٱتَّبِعُوهُۖ
அதைப்பின்பற்றுங்கள்
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
l-subula
ٱلسُّبُلَ
வழிகளை
fatafarraqa
فَتَفَرَّقَ
அவை பிரித்துவிடும்
bikum
بِكُمْ
உங்களை
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۚ
அவனுடைய வழியிலிருந்து
dhālikum
ذَٰلِكُمْ
இவை
waṣṣākum bihi
وَصَّىٰكُم بِهِۦ
உபதேசிக்கிறான் /உங்களுக்கு/இவற்றைக் கொண்டு
laʿallakum tattaqūna
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
"நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். அதனையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆவதற்காக இறைவன் இவற்றை உங்களுக்கு உபதேசிக்கின்றான்" (என்று கூறுங்கள்). ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௩)
Tafseer
௧௫௪

ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِيْٓ اَحْسَنَ وَتَفْصِيْلًا لِّكُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَاۤءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ ࣖ ١٥٤

thumma
ثُمَّ
பிறகு
ātaynā
ءَاتَيْنَا
கொடுத்தோம்
mūsā
مُوسَى
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
tamāman
تَمَامًا
நிறைவாக
ʿalā alladhī
عَلَى ٱلَّذِىٓ
மீது/எவர்
aḥsana
أَحْسَنَ
நல்லறம் புரிந்தார்
watafṣīlan
وَتَفْصِيلًا
இன்னும் விவரிப்பதற்காக
likulli shayin
لِّكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழியாக
waraḥmatan
وَرَحْمَةً
இன்னும் கருணையாக
laʿallahum
لَّعَلَّهُم
ஆவதற்காக/அவர்கள்
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்வார்கள்
(தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம்முடைய அருட்கொடையை) முழுமைபடுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது. அன்றி, (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதனைக் கொடுத்தோம்.) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௪)
Tafseer
௧௫௫

وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ ١٥٥

wahādhā
وَهَٰذَا
இது
kitābun
كِتَٰبٌ
வேதம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
நாமே இறக்கினோம்/இதை
mubārakun
مُبَارَكٌ
அருள்வளமிக்கது
fa-ittabiʿūhu
فَٱتَّبِعُوهُ
ஆகவே, பின்பற்றுங்கள்/இதை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
(மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதனை நாமே இறக்கி வைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். அன்றி (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௫)
Tafseer
௧௫௬

اَنْ تَقُوْلُوْٓا اِنَّمَآ اُنْزِلَ الْكِتٰبُ عَلٰى طَاۤىِٕفَتَيْنِ مِنْ قَبْلِنَاۖ وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِيْنَۙ ١٥٦

an taqūlū
أَن تَقُولُوٓا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
innamā unzila
إِنَّمَآ أُنزِلَ
இறக்கப்பட்டதெல்லாம்
l-kitābu
ٱلْكِتَٰبُ
வேதம்
ʿalā
عَلَىٰ
மீது
ṭāifatayni
طَآئِفَتَيْنِ
இரு கூட்டங்கள்
min qablinā
مِن قَبْلِنَا
நமக்கு முன்னர்
wa-in kunnā
وَإِن كُنَّا
நிச்சயம் இருந்தோம்
ʿan dirāsatihim
عَن دِرَاسَتِهِمْ
அவர்களின் படிப்பை விட்டு
laghāfilīna
لَغَٰفِلِينَ
கவனமற்றவர்களாகவே
(இணைவைத்து வணங்கும் அரபிகளே!) "நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அதனைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்" என்று நீங்கள் கூறாதிருக்கவும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௬)
Tafseer
௧௫௭

اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّآ اُنْزِلَ عَلَيْنَا الْكِتٰبُ لَكُنَّآ اَهْدٰى مِنْهُمْۚ فَقَدْ جَاۤءَكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ ۚفَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا ۗسَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْۤءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ ١٥٧

aw
أَوْ
அல்லது
taqūlū
تَقُولُوا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
law annā
لَوْ أَنَّآ
இருந்தால்/நிச்சயமாக நாம்
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது
l-kitābu
ٱلْكِتَٰبُ
வேதம்
lakunnā
لَكُنَّآ
இருந்திருப்போம்
ahdā
أَهْدَىٰ
அதிகம் நேர்வழிபெற்றவர்(கள்)
min'hum
مِنْهُمْۚ
அவர்களை விட
faqad jāakum
فَقَدْ جَآءَكُم
வந்துவிட்டது/உங்களிடம்
bayyinatun
بَيِّنَةٌ
மிகத் தெளிவான சான்று
min rabbikum
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌۚ
இன்னும் கருணை
faman aẓlamu
فَمَنْ أَظْلَمُ
ஆகவே யார்/மிகப்பெரிய அநியாயக்காரன்
mimman
مِمَّن
எவனைவிட
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தான்
biāyāti
بِـَٔايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waṣadafa
وَصَدَفَ
இன்னும் விலகினான்
ʿanhā
عَنْهَاۗ
அவற்றை விட்டு
sanajzī
سَنَجْزِى
கூலி கொடுப்போம்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaṣdifūna
يَصْدِفُونَ
விலகுவார்கள்
ʿan āyātinā
عَنْ ءَايَٰتِنَا
நம் வசனங்களை விட்டு
sūa
سُوٓءَ
கெட்ட
l-ʿadhābi
ٱلْعَذَابِ
வேதனை
bimā kānū yaṣdifūna
بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ
அவர்கள் விலகிக்கொண்டிருந்ததன் காரணமாக
அல்லது "நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப் பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்" என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கின்றது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௭)
Tafseer
௧௫௮

هَلْ يَنْظُرُوْنَ اِلَّآ اَنْ تَأْتِيَهُمُ الْمَلٰۤىِٕكَةُ اَوْ يَأْتِيَ رَبُّكَ اَوْ يَأْتِيَ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ ۗيَوْمَ يَأْتِيْ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِيْٓ اِيْمَانِهَا خَيْرًاۗ قُلِ انْتَظِرُوْٓا اِنَّا مُنْتَظِرُوْنَ ١٥٨

hal yanẓurūna
هَلْ يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கின்றனரா?
illā an tatiyahumu
إِلَّآ أَن تَأْتِيَهُمُ
தவிர/அவர்களிடம் வருவதை
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
aw
أَوْ
அல்லது
yatiya
يَأْتِىَ
வருவதை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
aw
أَوْ
அல்லது
yatiya
يَأْتِىَ
வருவதை
baʿḍu
بَعْضُ
சில
āyāti
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
rabbika
رَبِّكَۗ
உம் இறைவனின்
yawma
يَوْمَ
நாளில்
yatī
يَأْتِى
வரும்
baʿḍu
بَعْضُ
சில
āyāti
ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
lā yanfaʿu
لَا يَنفَعُ
பலனளிக்காது
nafsan
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
īmānuhā
إِيمَٰنُهَا
அதன் நம்பிக்கை
lam takun āmanat
لَمْ تَكُنْ ءَامَنَتْ
நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
min qablu
مِن قَبْلُ
(அதற்கு) முன்னர்
aw
أَوْ
அல்லது
kasabat
كَسَبَتْ
செய்தது
fī īmānihā
فِىٓ إِيمَٰنِهَا
தன் நம்பிக்கையில்
khayran
خَيْرًاۗ
ஒரு நன்மையை
quli
قُلِ
கூறுவீராக
intaẓirū
ٱنتَظِرُوٓا۟
எதிர்பாருங்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
muntaẓirūna
مُنتَظِرُونَ
எதிர்பார்க்கிறோம்
மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்களுடைய இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது. ஆகவே (அவர்களை நோக்கி "அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கின்றோம்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௮)
Tafseer
௧௫௯

اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِيْ شَيْءٍۗ اِنَّمَآ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ ١٥٩

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
farraqū
فَرَّقُوا۟
பிரித்து விட்டார்கள்
dīnahum
دِينَهُمْ
தங்கள் மார்க்கத்தை
wakānū
وَكَانُوا۟
இன்னும் ஆகிவிட்டார்கள்
shiyaʿan
شِيَعًا
பிரிவினர்களாக
lasta
لَّسْتَ
நீர் இல்லை
min'hum
مِنْهُمْ
அவர்களுடன்
fī shayin
فِى شَىْءٍۚ
ஒரு விஷயத்திலும்
innamā
إِنَّمَآ
எல்லாம்
amruhum
أَمْرُهُمْ
காரியம் அவர்களுடைய
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
thumma
ثُمَّ
பிறகு
yunabbi-uhum
يُنَبِّئُهُم
அறிவிப்பான்/அவர்களுக்கு
bimā kānū yafʿalūna
بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை
எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்துகொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௯)
Tafseer
௧௬௦

مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا ۚوَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ ١٦٠

man
مَن
எவர்
jāa
جَآءَ
செய்தார் (வந்தார்)
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
நன்மையை(க் கொண்டு)
falahu ʿashru
فَلَهُۥ عَشْرُ
அவருக்கு/பத்து
amthālihā
أَمْثَالِهَاۖ
அது போன்ற(வை)
waman
وَمَن
எவர்
jāa
جَآءَ
செய்தார் (வந்தார்)
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
ஒரு தீமையை(க் கொண்டு)
falā yuj'zā
فَلَا يُجْزَىٰٓ
கூலி கொடுக்கப்பட மாட்டார்
illā mith'lahā
إِلَّا مِثْلَهَا
தவிர/அது போன்றே
wahum
وَهُمْ
அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதேயன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படமாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௬௦)
Tafseer