குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௭
Qur'an Surah Al-An'am Verse 157
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّآ اُنْزِلَ عَلَيْنَا الْكِتٰبُ لَكُنَّآ اَهْدٰى مِنْهُمْۚ فَقَدْ جَاۤءَكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًى وَّرَحْمَةٌ ۚفَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا ۗسَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْۤءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ (الأنعام : ٦)
- aw
- أَوْ
- Or
- அல்லது
- taqūlū
- تَقُولُوا۟
- you say
- நீங்கள் கூறாதிருப்பதற்காக
- law annā
- لَوْ أَنَّآ
- "If [that]
- இருந்தால்/நிச்சயமாக நாம்
- unzila
- أُنزِلَ
- was revealed
- இறக்கப்பட்டது
- ʿalaynā
- عَلَيْنَا
- to us
- நம்மீது
- l-kitābu
- ٱلْكِتَٰبُ
- the Book
- வேதம்
- lakunnā
- لَكُنَّآ
- surely we (would) have been
- இருந்திருப்போம்
- ahdā
- أَهْدَىٰ
- better guided
- அதிகம் நேர்வழிபெற்றவர்(கள்)
- min'hum
- مِنْهُمْۚ
- than them
- அவர்களை விட
- faqad jāakum
- فَقَدْ جَآءَكُم
- So verily has come to you
- வந்துவிட்டது/உங்களிடம்
- bayyinatun
- بَيِّنَةٌ
- clear proofs
- மிகத் தெளிவான சான்று
- min rabbikum
- مِّن رَّبِّكُمْ
- from your Lord
- உங்கள் இறைவனிடமிருந்து
- wahudan
- وَهُدًى
- and a Guidance
- இன்னும் நேர்வழி
- waraḥmatun
- وَرَحْمَةٌۚ
- and a Mercy
- இன்னும் கருணை
- faman aẓlamu
- فَمَنْ أَظْلَمُ
- Then who (is) more unjust
- ஆகவே யார்/மிகப்பெரிய அநியாயக்காரன்
- mimman
- مِمَّن
- than (he) who
- எவனைவிட
- kadhaba
- كَذَّبَ
- denies
- பொய்ப்பித்தான்
- biāyāti
- بِـَٔايَٰتِ
- [with] (the) Verses
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waṣadafa
- وَصَدَفَ
- and turns away
- இன்னும் விலகினான்
- ʿanhā
- عَنْهَاۗ
- from them?
- அவற்றை விட்டு
- sanajzī
- سَنَجْزِى
- We will recompense
- கூலி கொடுப்போம்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yaṣdifūna
- يَصْدِفُونَ
- turn away
- விலகுவார்கள்
- ʿan āyātinā
- عَنْ ءَايَٰتِنَا
- from Our Signs
- நம் வசனங்களை விட்டு
- sūa
- سُوٓءَ
- (with) an evil
- கெட்ட
- l-ʿadhābi
- ٱلْعَذَابِ
- punishment
- வேதனை
- bimā kānū yaṣdifūna
- بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ
- because they used to turn away
- அவர்கள் விலகிக்கொண்டிருந்ததன் காரணமாக
Transliteration:
Aw taqooloo law annaaa unzila 'alainal kitaabu lakunnaaa ahdaa minhum; faqad jaaa'akum baiyinatum mir Rabbikum wa hudanw wa rahmah; faman azlamu mimman kazzaba bi Aayaatil laahi wa sadaf 'anhaa; sanajzil lazeena yasdifoona 'an Aayaatinaa sooo'al 'azaabi bimaa kaanoo yasdifoon(QS. al-ʾAnʿām:157)
English Sahih International:
Or lest you say, "If only the Scripture had been revealed to us, we would have been better guided than they." So there has [now] come to you a clear evidence from your Lord and a guidance and mercy. Then who is more unjust than one who denies the verses of Allah and turns away from them? We will recompense those who turn away from Our verses with the worst of punishment for their having turned away. (QS. Al-An'am, Ayah ௧௫௭)
Abdul Hameed Baqavi:
அல்லது "நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப் பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்" என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கின்றது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௭)
Jan Trust Foundation
அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது "நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களைவிட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்" என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம்). ஆகவே, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருனையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து அவற்றை விட்டு விலகியவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட வேதனையை கூலி(யாகக்) கொடுப்போம்.