Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫௯

Qur'an Surah Al-An'am Verse 159

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِيْ شَيْءٍۗ اِنَّمَآ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ (الأنعام : ٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
farraqū
فَرَّقُوا۟
divide
பிரித்து விட்டார்கள்
dīnahum
دِينَهُمْ
their religion
தங்கள் மார்க்கத்தை
wakānū
وَكَانُوا۟
and become
இன்னும் ஆகிவிட்டார்கள்
shiyaʿan
شِيَعًا
sects
பிரிவினர்களாக
lasta
لَّسْتَ
you are not
நீர் இல்லை
min'hum
مِنْهُمْ
with them
அவர்களுடன்
fī shayin
فِى شَىْءٍۚ
in anything
ஒரு விஷயத்திலும்
innamā
إِنَّمَآ
Only
எல்லாம்
amruhum
أَمْرُهُمْ
their affair
காரியம் அவர்களுடைய
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
(is) with Allah
அல்லாஹ்வின் பக்கம்தான்
thumma
ثُمَّ
then
பிறகு
yunabbi-uhum
يُنَبِّئُهُم
He will inform them
அறிவிப்பான்/அவர்களுக்கு
bimā kānū yafʿalūna
بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
of what they used to do
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Transliteration:

Innal lazeena farraqoo deenahum wa kaanoo shiya'allasta minhum fee shai'; innamaaa amruhum ilallaahi summma yunabbi'uhum bimaa kaanoo yaf'aloon (QS. al-ʾAnʿām:159)

English Sahih International:

Indeed, those who have divided their religion and become sects – you, [O Muhammad], are not [associated] with them in anything. Their affair is only [left] to Allah; then He will inform them about what they used to do. (QS. Al-An'am, Ayah ௧௫௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்துகொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫௯)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களே அவர்களுடன் நீர் ஒரு விஷயத்திலும் இல்லை. அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.