Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 15

Al-An'am

(al-ʾAnʿām)

௧௪௧

۞ وَهُوَ الَّذِيْٓ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍۗ كُلُوْا مِنْ ثَمَرِهٖٓ اِذَآ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖۖ وَلَا تُسْرِفُوْا ۗاِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَۙ ١٤١

wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِىٓ
எவன்
ansha-a
أَنشَأَ
உற்பத்தி செய்தான்
jannātin
جَنَّٰتٍ
தோட்டங்களை
maʿrūshātin
مَّعْرُوشَٰتٍ
கொடிகள் நிறைந்தவை
waghayra maʿrūshātin
وَغَيْرَ مَعْرُوشَٰتٍ
கொடிகளற்றவை
wal-nakhla
وَٱلنَّخْلَ
இன்னும் பேரீத்த மரங்களை
wal-zarʿa
وَٱلزَّرْعَ
இன்னும் விளைச்சலை
mukh'talifan
مُخْتَلِفًا
மாறுபட்டதாக
ukuluhu
أُكُلُهُۥ
அதன் கனிகள்
wal-zaytūna
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஒலிவத்தை
wal-rumāna
وَٱلرُّمَّانَ
இன்னும் மாதுளையை
mutashābihan
مُتَشَٰبِهًا
ஒன்றுக்கொன்று ஒப்பானதாக
waghayra mutashābihin
وَغَيْرَ مُتَشَٰبِهٍۚ
இன்னும் ஒன்றுக்கொன்று ஒப்பாகாததாக
kulū
كُلُوا۟
புசியுங்கள்
min thamarihi
مِن ثَمَرِهِۦٓ
அதன்கனிகளிலிருந்து
idhā athmara
إِذَآ أَثْمَرَ
அவை காய்த்தால்
waātū
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ḥaqqahu
حَقَّهُۥ
அதனுடைய கடமையை
yawma
يَوْمَ
நாளில்
ḥaṣādihi
حَصَادِهِۦۖ
அவற்றின் அறுவடை
walā tus'rifū
وَلَا تُسْرِفُوٓا۟ۚ
விரயம் செய்யாதீர்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
விரயம் செய்பவர்களை
(பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், (பலா) பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர், பச்சைகளையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவைகளையும் அவனே படைத்திருக்கின்றான். ஆகவே, அவை பலனளித்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் கொடுத்துவிடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௧)
Tafseer
௧௪௨

وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ۗ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِۗ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌۙ ١٤٢

wamina l-anʿāmi
وَمِنَ ٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகளில்
ḥamūlatan
حَمُولَةً
சுமக்கத் தகுதியானதை
wafarshan
وَفَرْشًاۚ
இன்னும் சுமக்கத் தகுதியற்றதை
kulū
كُلُوا۟
புசியுங்கள்
mimmā
مِمَّا
எவற்றிலிருந்து
razaqakumu
رَزَقَكُمُ
உணவளித்தான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
khuṭuwāti
خُطُوَٰتِ
அடிச்சுவடுகளை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
mubīnun
مُّبِينٌ
வெளிப்படையான
(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக் கூடியவற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கின்றான். ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௨)
Tafseer
௧௪௩

ثَمٰنِيَةَ اَزْوَاجٍۚ مِنَ الضَّأْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِۗ قُلْ ءٰۤالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِۗ نَبِّئُوْنِيْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ١٤٣

thamāniyata azwājin
ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍۖ
எட்டு ஜோடிகளை
mina l-ḍani
مِّنَ ٱلضَّأْنِ
செம்மறி ஆட்டில்
ith'nayni
ٱثْنَيْنِ
இரண்டை
wamina l-maʿzi
وَمِنَ ٱلْمَعْزِ
இன்னும் வெள்ளாட்டில்
ith'nayni
ٱثْنَيْنِۗ
இரண்டை
qul
قُلْ
கூறுவீராக
āldhakarayni
ءَآلذَّكَرَيْنِ
இரு ஆண்களையா?
ḥarrama
حَرَّمَ
தடைசெய்தான்
ami
أَمِ
அல்லது
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِ
இரு பெண்களையா
ammā
أَمَّا
அல்லது/எவை
ish'tamalat
ٱشْتَمَلَتْ
சுமந்தன
ʿalayhi
عَلَيْهِ
அவற்றை
arḥāmu
أَرْحَامُ
கர்ப்பங்கள்
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِۖ
இரு பெண்கள்
nabbiūnī
نَبِّـُٔونِى
அறிவியுங்கள்/எனக்கு
biʿil'min
بِعِلْمٍ
கல்வியுடன்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(நபியே! அந்த மூடர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "புசிக்கக் கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு.) இவ்விரு வகை ஆண்களையோ அல்லது பெண்களையோ அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதனை நீங்கள் எனக்கு அறிவியுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௩)
Tafseer
௧௪௪

وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِۗ قُلْ ءٰۤالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِۗ اَمْ كُنْتُمْ شُهَدَاۤءَ اِذْ وَصّٰىكُمُ اللّٰهُ بِهٰذَاۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ ١٤٤

wamina l-ibili
وَمِنَ ٱلْإِبِلِ
இன்னும் ஒட்டகையிலும்
ith'nayni
ٱثْنَيْنِ
இரண்டை
wamina l-baqari
وَمِنَ ٱلْبَقَرِ
இன்னும் மாட்டிலும்
ith'nayni
ٱثْنَيْنِۗ
இரண்டை
qul
قُلْ
கூறுவீராக
āldhakarayni
ءَآلذَّكَرَيْنِ
இரு ஆண்களையா?
ḥarrama
حَرَّمَ
தடை செய்தான்
ami
أَمِ
அல்லது
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِ
இரு பெண்களையா
ammā
أَمَّا
அல்லது/எவை
ish'tamalat
ٱشْتَمَلَتْ
சுமந்தன
ʿalayhi
عَلَيْهِ
அவற்றை
arḥāmu
أَرْحَامُ
கர்ப்பங்கள்
l-unthayayni
ٱلْأُنثَيَيْنِۖ
இரு பெண்களின்
am kuntum
أَمْ كُنتُمْ
இருந்தீர்களா?
shuhadāa
شُهَدَآءَ
சாட்சிகளாக
idh waṣṣākumu
إِذْ وَصَّىٰكُمُ
போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihādhā faman
بِهَٰذَاۚ فَمَنْ
இதை/யார்
aẓlamu
أَظْلَمُ
மிகப் பெரிய அநியாயக்காரன்
mimmani
مِمَّنِ
எவனைவிட
if'tarā
ٱفْتَرَىٰ
இட்டுக்கட்டினான்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
kadhiban
كَذِبًا
பொய்யை
liyuḍilla
لِّيُضِلَّ
வழி கெடுப்பதற்காக
l-nāsa
ٱلنَّاسَ
மக்களை
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۗ
கல்வி இன்றி
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்
ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரு வகை, பசுவிலும் இரு வகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கின்றான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?" (என்றும் நபியே! நீங்கள் அவர்களைக் கேளுங்கள்.) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, யாதொரு ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௪)
Tafseer
௧௪௫

قُلْ لَّآ اَجِدُ فِيْ مَآ اُوْحِيَ اِلَيَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗٓ اِلَّآ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٤٥

qul
قُل
கூறுவீராக
lā ajidu
لَّآ أَجِدُ
நான் காணவில்லை
fī mā ūḥiya
فِى مَآ أُوحِىَ
எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
என் பக்கம்
muḥarraman
مُحَرَّمًا
தடுக்கப்பட்டதாக
ʿalā ṭāʿimin
عَلَىٰ طَاعِمٍ
புசிப்பவர் மீது
yaṭʿamuhu
يَطْعَمُهُۥٓ
அதை புசிப்பார்
illā
إِلَّآ
தவிர
an yakūna
أَن يَكُونَ
இருப்பது
maytatan
مَيْتَةً
செத்ததாக
aw
أَوْ
அல்லது
daman
دَمًا
இரத்தமாக
masfūḥan
مَّسْفُوحًا
ஓடக்கூடியது
aw
أَوْ
அல்லது
laḥma
لَحْمَ
மாமிசமாக
khinzīrin
خِنزِيرٍ
பன்றியின்
fa-innahu
فَإِنَّهُۥ
ஏனெனில் நிச்சயமாக அது
rij'sun
رِجْسٌ
அசுத்தம்
aw fis'qan
أَوْ فِسْقًا
அல்லது/பாவமாக
uhilla
أُهِلَّ
பெயர் கூறப்பட்டது
lighayri
لِغَيْرِ
அல்லாதவருக்கு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
bihi
بِهِۦۚ
அதைக் கொண்டு
famani
فَمَنِ
எவர்
uḍ'ṭurra
ٱضْطُرَّ
நிர்ப்பந்திக்கப்பட்டார்
ghayra bāghin
غَيْرَ بَاغٍ
நாடாதவராக
walā ʿādin
وَلَا عَادٍ
வரம்பு மீறாதவராக
fa-inna rabbaka
فَإِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீல் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளை புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௫)
Tafseer
௧௪௬

وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِيْ ظُفُرٍۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَآ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَآ اَوِ الْحَوَايَآ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍۗ ذٰلِكَ جَزَيْنٰهُمْ بِبَغْيِهِمْۚ وَاِنَّا لَصٰدِقُوْنَ ١٤٦

waʿalā
وَعَلَى
மீது
alladhīna hādū
ٱلَّذِينَ هَادُوا۟
யூதர்கள்
ḥarramnā
حَرَّمْنَا
தடை செய்தோம்
kulla
كُلَّ
எல்லாவற்றையும்
dhī ẓufurin
ذِى ظُفُرٍۖ
நகமுடையது
wamina l-baqari
وَمِنَ ٱلْبَقَرِ
இன்னும் மாட்டில்
wal-ghanami
وَٱلْغَنَمِ
இன்னும் ஆட்டில்
ḥarramnā
حَرَّمْنَا
தடைசெய்தோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
shuḥūmahumā
شُحُومَهُمَآ
இரண்டின் கொழுப்புகளை
illā
إِلَّا
தவிர
mā ḥamalat
مَا حَمَلَتْ
எதை/சுமந்தன
ẓuhūruhumā
ظُهُورُهُمَآ
அவை இரண்டின் முதுகுகள்
awi
أَوِ
அல்லது
l-ḥawāyā
ٱلْحَوَايَآ
சிறு குடல்கள்
aw
أَوْ
அல்லது
مَا
எது
ikh'talaṭa
ٱخْتَلَطَ
கலந்துவிட்டது
biʿaẓmin
بِعَظْمٍۚ
எலும்புடன்
dhālika
ذَٰلِكَ
அது
jazaynāhum
جَزَيْنَٰهُم
கூலி கொடுத்தோம்/அவர்களுக்கு
bibaghyihim
بِبَغْيِهِمْۖ
அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
laṣādiqūna
لَصَٰدِقُونَ
உண்மையாளர்களே
(நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். அன்றி, ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவைகளைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக் களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகின்றோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!) ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௬)
Tafseer
௧௪௭

فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍۚ وَلَا يُرَدُّ بَأْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ ١٤٧

fa-in kadhabūka
فَإِن كَذَّبُوكَ
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqul
فَقُل
கூறுவீராக
rabbukum
رَّبُّكُمْ
உங்கள் இறைவன்
dhū raḥmatin
ذُو رَحْمَةٍ
கருணையுடையவன்
wāsiʿatin
وَٰسِعَةٍ
விசாலமானது
walā yuraddu
وَلَا يُرَدُّ
திருப்பப்படாது
basuhu
بَأْسُهُۥ
அவனது தண்டனை
ʿani l-qawmi
عَنِ ٱلْقَوْمِ
மக்களை விட்டு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி) "உங்களுடைய இறைவன் மிக விரிவான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது" என்று கூறிவிடுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௭)
Tafseer
௧௪௮

سَيَقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَاۤءَ اللّٰهُ مَآ اَشْرَكْنَا وَلَآ اٰبَاۤؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَيْءٍۗ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَأْسَنَاۗ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَنَاۗ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْتُمْ اِلَّا تَخْرُصُوْنَ ١٤٨

sayaqūlu
سَيَقُولُ
கூறுகிறார்(கள்)
alladhīna ashrakū
ٱلَّذِينَ أَشْرَكُوا۟
இணைவைப்பவர்கள்
law shāa
لَوْ شَآءَ
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mā ashraknā
مَآ أَشْرَكْنَا
இணைவைத்திருக்க மாட்டோம்
walā ābāunā
وَلَآ ءَابَآؤُنَا
இன்னும் எங்கள் மூதாதைகள்
walā ḥarramnā
وَلَا حَرَّمْنَا
இன்னும் தடை செய்திருக்க மாட்டோம்
min shayin
مِن شَىْءٍۚ
எதையும்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
dhāqū
ذَاقُوا۟
சுவைத்தனர்
basanā
بَأْسَنَاۗ
நம் தண்டனையை
qul
قُلْ
கூறுவீராக
hal ʿindakum
هَلْ عِندَكُم
உங்களிடம் உண்டா?
min ʿil'min
مِّنْ عِلْمٍ
கல்வியில் ஏதும்
fatukh'rijūhu
فَتُخْرِجُوهُ
வெளிப்படுத்துங்கள் அதை
lanā
لَنَآۖ
நமக்கு
in tattabiʿūna
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
தவிர
l-ẓana
ٱلظَّنَّ
சந்தேகம்
wa-in antum
وَإِنْ أَنتُمْ
இல்லை/நீங்கள்
illā
إِلَّا
தவிர
takhruṣūna
تَخْرُصُونَ
கற்பனை செய்கிறீர்கள்
"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு யாதொன்றையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) யாதொன்றையும் (ஆகாதென) நாங்கள் தடுத்திருக்க மாட்டோம்" என்று இணை வைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே (நீங்கள் அவர்களை நோக்கி "இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்து கொண்ட (உங்களுடைய) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர் களேயன்றி வேறில்லை" என்று கூறுங்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௮)
Tafseer
௧௪௯

قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُۚ فَلَوْ شَاۤءَ لَهَدٰىكُمْ اَجْمَعِيْنَ ١٤٩

qul
قُلْ
கூறுவீராக
falillahi
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
l-ḥujatu
ٱلْحُجَّةُ
ஆதாரம்
l-bālighatu
ٱلْبَٰلِغَةُۖ
முழுமையானது
falaw shāa
فَلَوْ شَآءَ
நாடியிருந்தால்
lahadākum
لَهَدَىٰكُمْ
நேர்வழி படுத்தியிருப்பான்/உங்கள்
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
(அன்றி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்வுடையதே! (அவர்களுடைய ஆதாரம் முற்றிலும் தவறானது.) அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான்." ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௪௯)
Tafseer
௧௫௦

قُلْ هَلُمَّ شُهَدَاۤءَكُمُ الَّذِيْنَ يَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَاۚ فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْۚ وَلَا تَتَّبِعْ اَهْوَاۤءَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ ࣖ ١٥٠

qul
قُلْ
கூறுவீராக
halumma
هَلُمَّ
அழைத்து வாருங்கள்
shuhadāakumu
شُهَدَآءَكُمُ
உங்கள் சாட்சிகளை
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yashhadūna
يَشْهَدُونَ
சாட்சியளிப்பார்கள்
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ḥarrama
حَرَّمَ
தடைசெய்தான்
hādhā
هَٰذَاۖ
இதை
fa-in shahidū
فَإِن شَهِدُوا۟
அவர்கள் சாட்சிஅளித்தால்
falā tashhad
فَلَا تَشْهَدْ
சாட்சியளிக்காதீர்
maʿahum
مَعَهُمْۚ
அவர்களுடன்
walā tattabiʿ
وَلَا تَتَّبِعْ
இன்னும் பின்பற்றாதீர்
ahwāa
أَهْوَآءَ
ஆசைகளை
alladhīna
ٱلَّذِينَ
எவர்களின்
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
இறுதிநாளை
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
yaʿdilūna
يَعْدِلُونَ
இணைவைக்கின்றனர்
(மேலும் அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதனைத் தடுத்தே இருந்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்" என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீங்களும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) கூறவேண்டாம். அன்றி, நம்முடைய வசனங்கள் பொய்யெனக் கூறியவர்களின் விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். எவர்கள் இறுதிநாளை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௫௦)
Tafseer