Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்ஆம் - Page: 13

Al-An'am

(al-ʾAnʿām)

௧௨௧

وَلَا تَأْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌۗ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيَاۤىِٕهِمْ لِيُجَادِلُوْكُمْ ۚوَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ ࣖ ١٢١

walā takulū
وَلَا تَأْكُلُوا۟
புசிக்காதீர்கள்
mimmā
مِمَّا
எதிலிருந்து
lam yudh'kari
لَمْ يُذْكَرِ
கூறப்படவில்லை
us'mu
ٱسْمُ
பெயர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ʿalayhi
عَلَيْهِ
அதன் மீது
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அது
lafis'qun
لَفِسْقٌۗ
பாவம்தான்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-shayāṭīna
ٱلشَّيَٰطِينَ
ஷைத்தான்கள்
layūḥūna
لَيُوحُونَ
அறிவிக்கின்றனர்
ilā awliyāihim
إِلَىٰٓ أَوْلِيَآئِهِمْ
தங்கள் நண்பர்களுக்கு
liyujādilūkum
لِيُجَٰدِلُوكُمْۖ
அவர்கள் தர்க்கிப்பதற்காக/உங்களுடன்
wa-in aṭaʿtumūhum
وَإِنْ أَطَعْتُمُوهُمْ
நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவர்களுக்கு
innakum lamush'rikūna
إِنَّكُمْ لَمُشْرِكُونَ
நிச்சயமாக நீங்கள்/இணைவைப்பவர்கள்தான்
(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால் (கீழ்படிந்தால்) நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்! ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௧)
Tafseer
௧௨௨

اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِيْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَيْسَ بِخَارِجٍ مِّنْهَاۗ كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٢٢

awaman kāna
أَوَمَن كَانَ
ஒருவர்/இருந்தார்
maytan
مَيْتًا
மரணித்தவராக
fa-aḥyaynāhu
فَأَحْيَيْنَٰهُ
உயிர்ப்பித்தோம்/அவரை
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஏற்படுத்தினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
nūran
نُورًا
ஓர் ஒளியை
yamshī
يَمْشِى
நடமாடுவதற்கு
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
fī l-nāsi
فِى ٱلنَّاسِ
மக்களுக்கு மத்தியில்
kaman
كَمَن
எவரைப்போல்
mathaluhu
مَّثَلُهُۥ
அவருடைய உதாரணம்
fī l-ẓulumāti
فِى ٱلظُّلُمَٰتِ
இருள்களில்
laysa bikhārijin
لَيْسَ بِخَارِجٍ
வெறியேறாதவர்
min'hā
مِّنْهَاۚ
அவற்றிலிருந்து
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
zuyyina
زُيِّنَ
அழகாக்கப்பட்டன
lil'kāfirīna
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு
mā kānū
مَا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவானா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன. ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௨)
Tafseer
௧௨௩

وَكَذٰلِكَ جَعَلْنَا فِيْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَاۗ وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ ١٢٣

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
jaʿalnā
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
fī kulli qaryatin
فِى كُلِّ قَرْيَةٍ
எல்லா ஊர்களிலும்
akābira
أَكَٰبِرَ
மிகப் பெரிய
muj'rimīhā
مُجْرِمِيهَا
குற்றவாளிகளை/அவற்றில் உள்ள
liyamkurū
لِيَمْكُرُوا۟
அவர்கள் சதிசெய்வதற்காக
fīhā
فِيهَاۖ
அவற்றில்
wamā yamkurūna
وَمَا يَمْكُرُونَ
அவர்கள் சதி செய்ய முடியாது
illā bi-anfusihim
إِلَّا بِأَنفُسِهِمْ
தங்களுக்கே தவிர
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
அன்றி, இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கேயன்றி (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௩)
Tafseer
௧௨௪

وَاِذَا جَاۤءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَآ اُوْتِيَ رُسُلُ اللّٰهِ ۘ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَتَهٗۗ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌۢ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ ١٢٤

wa-idhā jāathum
وَإِذَا جَآءَتْهُمْ
வந்தால்/அவர்களிடம்
āyatun
ءَايَةٌ
ஒரு வசனம்
qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
ḥattā
حَتَّىٰ
வரை
nu'tā
نُؤْتَىٰ
கொடுக்கப்படுவோம்
mith'la
مِثْلَ
போன்று
مَآ
எது
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்கள்
rusulu
رُسُلُ
தூதர்கள்
l-lahi
ٱللَّهِۘ
அல்லாஹ்வுடைய
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிகஅறிந்தவன்
ḥaythu
حَيْثُ
எங்கு
yajʿalu
يَجْعَلُ
ஏற்படுத்துவான்
risālatahu
رِسَالَتَهُۥۗ
தன் தூதுத்துவத்தை
sayuṣību
سَيُصِيبُ
அடையும்
alladhīna ajramū
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
குற்றம் புரிந்தவர்களை
ṣaghārun
صَغَارٌ
கேவலம், சிறுமை
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
waʿadhābun
وَعَذَابٌ
இன்னும் வேதனை
shadīdun
شَدِيدٌۢ
கடுமையானது
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yamkurūna
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்வார்கள்
அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௪)
Tafseer
௧௨௫

فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِۚ وَمَنْ يُّرِدْ اَنْ يُّضِلَّهٗ يَجْعَلْ صَدْرَهٗ ضَيِّقًا حَرَجًا كَاَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَاۤءِۗ كَذٰلِكَ يَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ ١٢٥

faman yuridi
فَمَن يُرِدِ
எவர்/நாடுவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
an yahdiyahu
أَن يَهْدِيَهُۥ
நேர்வழி செலுத்த/அவரை
yashraḥ
يَشْرَحْ
விரிவாக்குகிறான்
ṣadrahu
صَدْرَهُۥ
நெஞ்சை/அவருடைய
lil'is'lāmi
لِلْإِسْلَٰمِۖ
இஸ்லாமிற்கு
waman
وَمَن
எவர்
yurid
يُرِدْ
நாடுவான்
an yuḍillahu
أَن يُضِلَّهُۥ
வழிகெடுக்க/அவரை
yajʿal
يَجْعَلْ
ஆக்குவான்
ṣadrahu
صَدْرَهُۥ
நெஞ்சை/அவருடைய
ḍayyiqan
ضَيِّقًا
இருக்கமானதாக
ḥarajan
حَرَجًا
சிரமமானதாக
ka-annamā
كَأَنَّمَا
போல்
yaṣṣaʿʿadu
يَصَّعَّدُ
ஏறுவான்
fī l-samāi
فِى ٱلسَّمَآءِۚ
வானத்தில்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
yajʿalu
يَجْعَلُ
ஆக்குவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-rij'sa
ٱلرِّجْسَ
தண்டனை
ʿalā
عَلَى
மீது
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
எவர்கள்/நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًاۗ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ ١٢٦

wahādhā ṣirāṭu
وَهَٰذَا صِرَٰطُ
இது/பாதை
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
mus'taqīman
مُسْتَقِيمًاۗ
நேரானது
qad faṣṣalnā
قَدْ فَصَّلْنَا
விவரித்துவிட்டோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yadhakkarūna
يَذَّكَّرُونَ
நல்லுபதேசம் பெறுவார்கள்
(நபியே!) இதுவே உங்களது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௬)
Tafseer
௧௨௭

۞ لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ١٢٧

lahum
لَهُمْ
அவர்களுக்கு
dāru
دَارُ
இல்லம்
l-salāmi
ٱلسَّلَٰمِ
ஈடேற்றம்
ʿinda
عِندَ
இடம்
rabbihim
رَبِّهِمْۖ
அவர்களுடைய இறைவன்
wahuwa waliyyuhum
وَهُوَ وَلِيُّهُم
இன்னும் அவன்/அவர்களுடைய நேசன்
bimā
بِمَا
எவற்றின் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்வார்கள்
அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களை நேசிப்பவனாகவும் இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௭)
Tafseer
௧௨௮

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًاۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ ۚوَقَالَ اَوْلِيَاۤؤُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَآ اَجَلَنَا الَّذِيْٓ اَجَّلْتَ لَنَا ۗقَالَ النَّارُ مَثْوٰىكُمْ خٰلِدِيْنَ فِيْهَآ اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗاِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ ١٢٨

wayawma
وَيَوْمَ
நாள்
yaḥshuruhum
يَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்பான் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
yāmaʿshara
يَٰمَعْشَرَ
கூட்டமே
l-jini
ٱلْجِنِّ
ஜின்களின்
qadi is'takthartum
قَدِ ٱسْتَكْثَرْتُم
அதிகப்படுத்தி விட்டீர்கள்
mina l-insi
مِّنَ ٱلْإِنسِۖ
மனிதர்களில்
waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்(கள்)
awliyāuhum
أَوْلِيَآؤُهُم
அவர்களின் நண்பர்கள்
mina l-insi
مِّنَ ٱلْإِنسِ
மனிதர்களில்
rabbanā
رَبَّنَا
எங்கள் இறைவா
is'tamtaʿa
ٱسْتَمْتَعَ
பயனடைந்தனர்
baʿḍunā
بَعْضُنَا
எங்களில் சிலர்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரைக்கொண்டு
wabalaghnā
وَبَلَغْنَآ
இன்னும் அடைந்தோம்
ajalanā
أَجَلَنَا
தவணை/எங்கள்
alladhī
ٱلَّذِىٓ
எதை
ajjalta
أَجَّلْتَ
நீ தவணையளித்த
lanā
لَنَاۚ
எங்களுக்கு
qāla
قَالَ
கூறுவான்
l-nāru
ٱلنَّارُ
நரகம்தான்
mathwākum
مَثْوَىٰكُمْ
தங்குமிடம்/உங்கள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَآ
அதில்
illā
إِلَّا
தவிர
mā shāa l-lahu
مَا شَآءَ ٱللَّهُۗ
அல்லாஹ் நாடினால்
inna rabbaka
إِنَّ رَبَّكَ
நிச்சயமாக உம் இறைவன்
ḥakīmun
حَكِيمٌ
ஞானவான்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) "ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)" என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் "எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)" என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) "நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்" என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், மிக்க ஞானமுடையவனும் நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௮)
Tafseer
௧௨௯

وَكَذٰلِكَ نُوَلِّيْ بَعْضَ الظّٰلِمِيْنَ بَعْضًاۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ࣖ ١٢٩

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறு
nuwallī
نُوَلِّى
நண்பர்களாக ஆக்குவோம்
baʿḍa
بَعْضَ
சிலரை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அக்கிரமக்காரர்களில்
baʿḍan
بَعْضًۢا
சிலருக்கு
bimā kānū yaksibūna
بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
எதன் காரணமாக/இருந்தனர்/செய்வார்கள்
இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக் காரர்களாகிய) மற்றோருடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௨௯)
Tafseer
௧௩௦

يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِيْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَاۗ قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ ١٣٠

yāmaʿshara
يَٰمَعْشَرَ
கூட்டமே
l-jini
ٱلْجِنِّ
ஜின்களின்
wal-insi
وَٱلْإِنسِ
மற்றும் மனிதர்கள்
alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
உங்களிடம் வரவில்லையா?
rusulun
رُسُلٌ
தூதர்கள்
minkum
مِّنكُمْ
உங்களிலிருந்து
yaquṣṣūna
يَقُصُّونَ
விவரிப்பவர்களாக
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
āyātī
ءَايَٰتِى
என் வசனங்களை
wayundhirūnakum
وَيُنذِرُونَكُمْ
இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு
liqāa
لِقَآءَ
சந்திப்பை
yawmikum
يَوْمِكُمْ
உங்கள் நாள்
hādhā
هَٰذَاۚ
இது
qālū
قَالُوا۟
கூறுவார்கள்
shahid'nā
شَهِدْنَا
சாட்சியளித்தோம்
ʿalā
عَلَىٰٓ
எதிராக
anfusinā
أَنفُسِنَاۖ
எங்களுக்கு
wagharrathumu
وَغَرَّتْهُمُ
மயக்கி விட்டது/அவர்களை
l-ḥayatu
ٱلْحَيَوٰةُ
வாழ்வு
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
washahidū
وَشَهِدُوا۟
இன்னும் சாட்சி கூறுவார்கள்
ʿalā anfusihim
عَلَىٰٓ أَنفُسِهِمْ
எதிராக/அவர்களுக்கு
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தார்கள்
kāfirīna
كَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களாக
(இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) "மனித, ஜின் கூட்டத்தார்களே! உங்களில் தோன்றிய (நம்முடைய) தூதர்கள் உங்களிடம் வந்து நம்முடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?" என்(று கேட்)பான். அதற்கவர்கள் "(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கி விட்டது" என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள். ([௬] ஸூரத்துல் அன்ஆம்: ௧௩௦)
Tafseer