Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௪

Qur'an Surah Al-An'am Verse 124

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا جَاۤءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَآ اُوْتِيَ رُسُلُ اللّٰهِ ۘ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَتَهٗۗ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌۢ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ (الأنعام : ٦)

wa-idhā jāathum
وَإِذَا جَآءَتْهُمْ
And when comes to them
வந்தால்/அவர்களிடம்
āyatun
ءَايَةٌ
a Sign
ஒரு வசனம்
qālū
قَالُوا۟
they say
கூறுகின்றனர்
lan nu'mina
لَن نُّؤْمِنَ
"Never we will believe
நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
ḥattā
حَتَّىٰ
until
வரை
nu'tā
نُؤْتَىٰ
we are given
கொடுக்கப்படுவோம்
mith'la
مِثْلَ
like
போன்று
مَآ
what
எது
ūtiya
أُوتِىَ
was given
கொடுக்கப்பட்டார்கள்
rusulu
رُسُلُ
(to the) Messengers
தூதர்கள்
l-lahi
ٱللَّهِۘ
(of) Allah"
அல்லாஹ்வுடைய
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிகஅறிந்தவன்
ḥaythu
حَيْثُ
where
எங்கு
yajʿalu
يَجْعَلُ
He places
ஏற்படுத்துவான்
risālatahu
رِسَالَتَهُۥۗ
His Message
தன் தூதுத்துவத்தை
sayuṣību
سَيُصِيبُ
Will afflict
அடையும்
alladhīna ajramū
ٱلَّذِينَ أَجْرَمُوا۟
those who committed crimes
குற்றம் புரிந்தவர்களை
ṣaghārun
صَغَارٌ
a humiliation
கேவலம், சிறுமை
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
waʿadhābun
وَعَذَابٌ
and a punishment
இன்னும் வேதனை
shadīdun
شَدِيدٌۢ
severe
கடுமையானது
bimā
بِمَا
for what
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
they used to
இருந்தனர்
yamkurūna
يَمْكُرُونَ
plot
சூழ்ச்சி செய்வார்கள்

Transliteration:

Wa izaa jaaa'athum Aayatun qaaloo lan nu'mina hatta nu'taa misla maaa ootiya Rusulul laah; Allahu a'almu haisu yaj'alu Risaalatah; sa yuseebul lazeena ajramoo saghaarun 'indal laahi wa 'azaabun shadeedum bimaa kaanoo yamkuroon (QS. al-ʾAnʿām:124)

English Sahih International:

And when a sign comes to them, they say, "Never will we believe until we are given like that which was given to the messengers of Allah." Allah is most knowing of where [i.e., with whom] He places His message. There will afflict those who committed crimes debasement before Allah and severe punishment for what they used to conspire. (QS. Al-An'am, Ayah ௧௨௪)

Abdul Hameed Baqavi:

அவர்களிடம் யாதொரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் (அதனை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் "அல்லாஹ்வுடைய தூதர்கள் கொடுக்கப்பட்டது போன்று நாங்களும் கொடுக்கப்படும் வரை (நாங்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறுகின்றனர். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது என்பதை அல்லாஹ் மிகஅறிந்தவன். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடம் இருந்து (அவர்களுக்கு கேவலமும்) சிறுமையும் கடுமையான வேதனையும் அடையும்.