Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 8

Al-Ma'idah

(al-Māʾidah)

௭௧

وَحَسِبُوْٓا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ ٧١

waḥasibū
وَحَسِبُوٓا۟
இன்னும் எண்ணினர்
allā takūna
أَلَّا تَكُونَ
ஏற்படாது
fit'natun
فِتْنَةٌ
தண்டனை
faʿamū
فَعَمُوا۟
ஆகவே குருடாகினர்
waṣammū
وَصَمُّوا۟
இன்னும் செவிடாகினர்
thumma
ثُمَّ
பிறகு
tāba
تَابَ
பிழைபொறுத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
thumma ʿamū
ثُمَّ عَمُوا۟
பிறகும்/குருடாகினர்
waṣammū
وَصَمُّوا۟
இன்னும் செவிடாகினர்
kathīrun
كَثِيرٌ
அதிகமானோர்
min'hum
مِّنْهُمْۚ
அவர்களில்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
baṣīrun
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
எதை/செய்கிறார்கள்
(இதனால் தங்களுக்கு) யாதொரு ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ஆதலால், அவர்கள் (உண்மையைக் காண முடியாத) குருடர்களாகவும், (அதனைக் கேட்க முடியாத) செவிடர்களாகவும் ஆகிவிட்டனர். இதன் பின்னரும், அல்லாஹ் அவர்களை மன்னித்தான். எனினும், அவர்களில் பெரும்பான்மையினர் பிறகும் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே இருக்கின்றனர். ஆனால், அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௧)
Tafseer
௭௨

لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ۗوَقَالَ الْمَسِيْحُ يٰبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّيْ وَرَبَّكُمْ ۗاِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوٰىهُ النَّارُ ۗوَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ ٧٢

laqad
لَقَدْ
திட்டவட்டமாக
kafara
كَفَرَ
நிராகரித்தார்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
huwa
هُوَ
அவன்தான்
l-masīḥu
ٱلْمَسِيحُ
மஸீஹ்தான்
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَۖ
மர்யமுடைய
waqāla
وَقَالَ
கூறினார்
l-masīḥu
ٱلْمَسِيحُ
மஸீஹ்
yābanī is'rāīla
يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களே!
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbī
رَبِّى
என் இறைவன்
warabbakum
وَرَبَّكُمْۖ
இன்னும் உங்கள் இறைவன்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
man
مَن
எவர்
yush'rik
يُشْرِكْ
இணைவைக்கிறார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வுக்கு
faqad
فَقَدْ
திட்டமாக
ḥarrama
حَرَّمَ
தடுத்து விடுகிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தை
wamawāhu
وَمَأْوَىٰهُ
இன்னும் அவருடைய தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
நரகம்தான்
wamā
وَمَا
இல்லை
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
min anṣārin
مِنْ أَنصَارٍ
உதவியாளர்களில் எவரும்
"நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்" என்று கூறியவர்களும் உண்மையாகவே காஃபிர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ "இஸ்ராயீலின் சந்ததிகளே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்" என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௨)
Tafseer
௭௩

لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّآ اِلٰهٌ وَّاحِدٌ ۗوَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٧٣

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
kafara
كَفَرَ
நிராகரித்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
thālithu thalāthatin
ثَالِثُ ثَلَٰثَةٍۘ
மூவரில் ஒருவன்
wamā
وَمَا
இல்லை
min
مِنْ
இருந்து
ilāhin
إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّآ
தவிர
ilāhun
إِلَٰهٌ
ஒரு வணக்கத்திற்குரியவன்
wāḥidun
وَٰحِدٌۚ
ஒரே
wa-in lam yantahū
وَإِن لَّمْ يَنتَهُوا۟
அவர்கள் விலகவில்லையெனில்
ʿammā yaqūlūna
عَمَّا يَقُولُونَ
எதிலிருந்து / கூறுகிறார்கள்
layamassanna
لَيَمَسَّنَّ
நிச்சயமாக அடையும்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
alīmun
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது
"நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்" என்று கூறியவர்களும் மெய்யாகவே காஃபிர்களாகி விட்டார்கள். ஏனென்றால், (ஒரே) ஒரு இறைவனைத் தவிர வேறு இறைவன் (இல்லவே) இல்லை. (ஆகவே இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௩)
Tafseer
௭௪

اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ ٧٤

afalā yatūbūna
أَفَلَا يَتُوبُونَ
திருந்தி திரும்ப மாட்டார்களா?
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
wayastaghfirūnahu
وَيَسْتَغْفِرُونَهُۥۚ
இன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம்
wal-lahu
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௪)
Tafseer
௭௫

مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُۗ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ۗ كَانَا يَأْكُلَانِ الطَّعَامَ ۗ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَنّٰى يُؤْفَكُوْنَ ٧٥

mā l-masīḥu
مَّا ٱلْمَسِيحُ
மஸீஹ் இல்லை
ub'nu
ٱبْنُ
மகன்
maryama
مَرْيَمَ
மர்யமுடைய
illā
إِلَّا
தவிர
rasūlun
رَسُولٌ
ஒரு தூதரே
qad khalat
قَدْ خَلَتْ
சென்றுவிட்டனர்
min qablihi
مِن قَبْلِهِ
இவருக்கு முன்னர்
l-rusulu
ٱلرُّسُلُ
தூதர்கள்
wa-ummuhu
وَأُمُّهُۥ
இன்னும் அவருடைய தாய்
ṣiddīqatun
صِدِّيقَةٌۖ
ஒரு மகாஉண்மையாளர்
kānā
كَانَا
இருந்தனர்
yakulāni
يَأْكُلَانِ
சாப்பிடுவார்கள்
l-ṭaʿāma
ٱلطَّعَامَۗ
உணவு
unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
nubayyinu
نُبَيِّنُ
தெளிபடுத்துகிறோம்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
thumma
ثُمَّ
பிறகு
unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
annā
أَنَّىٰ
எவ்வாறு
yu'fakūna
يُؤْفَكُونَ
திருப்பப்படுகின்றனர்
மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி (இறைவனோ இறைவனுடைய மகனோ) அல்ல. இவருக்கு முன்னரும் (இவரைப் போல்) பல தூதர்கள் (வந்து) சென்றுவிட்டனர். அவருடைய தாயும் (கடவுள் அல்ல. அவர்) மிக்க உண்மையான ஒரு சத்தியவாதியாகத்தான் இருந்தார். இவ்விருவரும் (இவ்வுலகிலிருந்த காலமெல்லாம் மற்ற மனிதர்களைப்போல) உணவு உட்கொண்டு (வாழ்ந்து) வந்தனர். (ஆகவே, இவ்விருவரும் எவ்வாறு இறைவனாக ஆவார்கள்? இதனை) நாம் பல அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களுக்கு எவ்வாறு தெளிவாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (உண்மையில் இருந்து) அவர்கள் எவ்வளவு தூரம் விலகிச் சென்று விட்டனர் என்பதையும் நீங்கள் கவனியுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௫)
Tafseer
௭௬

قُلْ اَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ۗوَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٧٦

qul
قُلْ
கூறுவீராக
ataʿbudūna
أَتَعْبُدُونَ
வணங்குகிறீர்களா?
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
مَا
எவை
lā yamliku
لَا يَمْلِكُ
உரிமைபெறாது
lakum
لَكُمْ
உங்களுக்கு
ḍarran
ضَرًّا
தீங்களிப்பதற்கு
walā nafʿan
وَلَا نَفْعًاۚ
இன்னும் பலனளிப்பதற்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
huwa l-samīʿu
هُوَ ٱلسَّمِيعُ
நன்குசெவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
மிக அறிந்தவன்
(அன்றி அவர்களை நோக்கி) "உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகின்றீர்கள்" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௬)
Tafseer
௭௭

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِيْ دِيْنِكُمْ غَيْرَ الْحَقِّ وَلَا تَتَّبِعُوْٓا اَهْوَاۤءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَاۤءِ السَّبِيْلِ ࣖ ٧٧

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lā taghlū
لَا تَغْلُوا۟
வரம்பு மீறாதீர்கள்
fī dīnikum
فِى دِينِكُمْ
மார்க்கத்தில்/உங்கள்
ghayra
غَيْرَ
முரணாக
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மைக்கு
walā tattabiʿū
وَلَا تَتَّبِعُوٓا۟
இன்னும் பின்பற்றாதீர்கள்
ahwāa
أَهْوَآءَ
விருப்பங்களை
qawmin
قَوْمٍ
சமுதாயத்தின்
qad ḍallū
قَدْ ضَلُّوا۟
வழிதவறி விட்டனர்
min qablu
مِن قَبْلُ
முன்பு
wa-aḍallū
وَأَضَلُّوا۟
இன்னும் வழி கெடுத்தனர்
kathīran
كَثِيرًا
பலரை
waḍallū
وَضَلُّوا۟
இன்னும் வழி தவறினர்
ʿan sawāi
عَن سَوَآءِ
இருந்து/நேரான
l-sabīli
ٱلسَّبِيلِ
பாதை
"வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் (எதையும்) மிகைபடக் கூறி வரம்பு மீறாதீர்கள். அன்றி, இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் நேரான வழியில் இருந்து தவறிவிட்டதுடன் (மற்றும்) பலரை வழி கெடுத்தும் இருக்கின்றனர்" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௭)
Tafseer
௭௮

لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ۗذٰلِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ ٧٨

luʿina
لُعِنَ
சபிக்கப்பட்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
min banī is'rāīla
مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களில்
ʿalā lisāni
عَلَىٰ لِسَانِ
நாவினால்
dāwūda
دَاوُۥدَ
தாவூதுடைய
waʿīsā
وَعِيسَى
இன்னும் ஈஸாவின்
ib'ni
ٱبْنِ
மகன்
maryama
مَرْيَمَۚ
மர்யமின்
dhālika
ذَٰلِكَ
அது
bimā ʿaṣaw
بِمَا عَصَوا۟
எதன் காரணமாக/மாறுசெய்தனர்
wakānū
وَّكَانُوا۟
இன்னும் இருந்தனர்
yaʿtadūna
يَعْتَدُونَ
மீறுபவர்களாக
இஸ்ராயீலின் சந்ததிகளில் எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தாவூத் மற்றும் மர்யமின் மகன் ஈஸா ஆகிய இவர்கள் நாவாலும் சபிக்கப்பட்டே இருக்கின்றனர். ஏனென்றால், அவர்கள் (அக்காலத்திலும்) வரம்பு கடந்தே பாவம் செய்து வந்தனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௮)
Tafseer
௭௯

كَانُوْا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُۗ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ ٧٩

kānū
كَانُوا۟
இருந்தனர்
lā yatanāhawna
لَا يَتَنَاهَوْنَ
ஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாக
ʿan
عَن
விட்டு
munkarin
مُّنكَرٍ
தீமை
faʿalūhu
فَعَلُوهُۚ
செய்தனர்/அதை
labi'sa
لَبِئْسَ
கெட்டுவிட்டது
مَا
எது
kānū
كَانُوا۟
இருந்தனர்
yafʿalūna
يَفْعَلُونَ
செய்வார்கள்
அன்றி, அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௯)
Tafseer
௮௦

تَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِيْنَ كَفَرُوْا ۗ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَيْهِمْ وَفِى الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ ٨٠

tarā
تَرَىٰ
காண்பீர்
kathīran
كَثِيرًا
அதிகாமானோரை
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yatawallawna
يَتَوَلَّوْنَ
நட்பு வைக்கிறார்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களிடம்
kafarū
كَفَرُوا۟ۚ
நிராகரித்தார்கள்
labi'sa
لَبِئْسَ
கெட்டுவிட்டது
mā qaddamat
مَا قَدَّمَتْ
எது/முற்படுத்தியன
lahum
لَهُمْ
அவர்களுக்கு
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களுடைய ஆன்மாக்கள்
an sakhiṭa
أَن سَخِطَ
கோபிக்கும்படியாக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
wafī l-ʿadhābi
وَفِى ٱلْعَذَابِ
இன்னும் வேதனையில்தான்
hum
هُمْ
அவர்கள்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்
அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் (என்றென்றுமே) தங்கி விடுவார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௮௦)
Tafseer