Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௪

Qur'an Surah Al-Ma'idah Verse 74

ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ (المائدة : ٥)

afalā yatūbūna
أَفَلَا يَتُوبُونَ
So will not they repent
திருந்தி திரும்ப மாட்டார்களா?
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
wayastaghfirūnahu
وَيَسْتَغْفِرُونَهُۥۚ
and seek His forgiveness?
இன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
இன்னும் அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Afalaa yatooboona ilal laahi wa yastaghfiroonah; wallaahu Ghafoorur Raheem (QS. al-Māʾidah:74)

English Sahih International:

So will they not repent to Allah and seek His forgiveness? And Allah is Forgiving and Merciful. (QS. Al-Ma'idah, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம் தங்கள் குற்றத்தை மன்னிக்கப் பிரார்த்திக்க மாட்டார்களா? அல்லாஹ்வோ, மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௪)

Jan Trust Foundation

இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.