Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௦

Qur'an Surah Al-Ma'idah Verse 80

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِيْنَ كَفَرُوْا ۗ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَيْهِمْ وَفِى الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ (المائدة : ٥)

tarā
تَرَىٰ
You see
காண்பீர்
kathīran
كَثِيرًا
many
அதிகாமானோரை
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
yatawallawna
يَتَوَلَّوْنَ
taking as allies
நட்பு வைக்கிறார்கள்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்களிடம்
kafarū
كَفَرُوا۟ۚ
disbelieved
நிராகரித்தார்கள்
labi'sa
لَبِئْسَ
Surely evil
கெட்டுவிட்டது
mā qaddamat
مَا قَدَّمَتْ
(is) what sent forth
எது/முற்படுத்தியன
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
anfusuhum
أَنفُسُهُمْ
their souls
அவர்களுடைய ஆன்மாக்கள்
an sakhiṭa
أَن سَخِطَ
that became angry
கோபிக்கும்படியாக
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِمْ
with them
அவர்கள் மீது
wafī l-ʿadhābi
وَفِى ٱلْعَذَابِ
and in the punishment
இன்னும் வேதனையில்தான்
hum
هُمْ
they
அவர்கள்
khālidūna
خَٰلِدُونَ
(will) abide forever
நிரந்தரமாக இருப்பார்கள்

Transliteration:

Taraa kaseeram minhum yatawallawnal lazeena kafaroo; labi'sa maa qaddamat lahum anfusuhum an sakhital laahu 'alaihim wa fil 'azaabi hum khaalidoon (QS. al-Māʾidah:80)

English Sahih International:

You see many of them becoming allies of those who disbelieved [i.e., the polytheists]. How wretched is that which they have put forth for themselves in that Allah has become angry with them, and in the punishment they will abide eternally. (QS. Al-Ma'idah, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அவர்களில் பெரும்பான்மையினர் நிராகரிப்பவர்களை தோழமை கொள்வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படி அவர்கள் தாமாகவே தேடிக் கொண்டது மிகக் கெட்டது. அவர்கள் (நரக) வேதனையில் (என்றென்றுமே) தங்கி விடுவார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௦)

Jan Trust Foundation

(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அதிகாமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்புவைப்பதை (நபியே!) காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியன கெட்டு விட்டது. வேதனையில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.