فَبَعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِى الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِيْ سَوْءَةَ اَخِيْهِ ۗ قَالَ يٰوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِيَ سَوْءَةَ اَخِيْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَ ۛ ٣١
- fabaʿatha
- فَبَعَثَ
- ஆகவே அனுப்பினான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ghurāban
- غُرَابًا
- ஒரு காகத்தை
- yabḥathu
- يَبْحَثُ
- தோண்டுகிறது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- liyuriyahu
- لِيُرِيَهُۥ
- காட்டுவதற்காக/ அவனுக்கு
- kayfa
- كَيْفَ
- எவ்வாறு
- yuwārī
- يُوَٰرِى
- மறைப்பான்
- sawata
- سَوْءَةَ
- சடலத்தை
- akhīhi
- أَخِيهِۚ
- தன் சகோதரனின்
- qāla
- قَالَ
- கூறினான்
- yāwaylatā
- يَٰوَيْلَتَىٰٓ
- என் நாசமே
- aʿajaztu
- أَعَجَزْتُ
- இயலாமலாகி விட்டேனா?
- an akūna
- أَنْ أَكُونَ
- நான் ஆக
- mith'la
- مِثْلَ
- போன்று
- hādhā
- هَٰذَا
- இந்த
- l-ghurābi
- ٱلْغُرَابِ
- காகம்
- fa-uwāriya
- فَأُوَٰرِىَ
- மறைத்திருப்பேனே
- sawata
- سَوْءَةَ
- சடலத்தை
- akhī
- أَخِىۖ
- என் சகோதரனின்
- fa-aṣbaḥa
- فَأَصْبَحَ
- ஆகிவிட்டான்
- mina l-nādimīna
- مِنَ ٱلنَّٰدِمِينَ
- துக்கப்படுபவர்களில்
பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற் காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதனைக் கண்ட) அவர் "அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய்விட்டதே!" என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௧)Tafseer
مِنْ اَجْلِ ذٰلِكَ ۛ كَتَبْنَا عَلٰى بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًاۢ بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًاۗ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَآ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ۗوَلَقَدْ جَاۤءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰلِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ ٣٢
- min ajli
- مِنْ أَجْلِ
- காரணமாக
- dhālika
- ذَٰلِكَ
- அதன்
- katabnā
- كَتَبْنَا
- விதித்தோம்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- banī is'rāīla
- بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
- இஸ்ரவேலர்கள்
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக
- man
- مَن
- எவன்
- qatala
- قَتَلَ
- கொன்றார்
- nafsan
- نَفْسًۢا
- ஓர் உயிரை
- bighayri nafsin
- بِغَيْرِ نَفْسٍ
- ஓர்உயிரைக்கொலைசெய்ததற்குஅல்லாமல்
- aw
- أَوْ
- அல்லது
- fasādin
- فَسَادٍ
- விஷமம் செய்தல்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- faka-annamā
- فَكَأَنَّمَا
- போலாவான்
- qatala
- قَتَلَ
- கொன்றான்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்கள்
- jamīʿan
- جَمِيعًا
- அனைவரையும்
- waman
- وَمَنْ
- எவர்
- aḥyāhā
- أَحْيَاهَا
- வாழவைத்தார்/அதை
- faka-annamā
- فَكَأَنَّمَآ
- போலாவார்
- aḥyā
- أَحْيَا
- வாழவைத்தார்
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்கள்
- jamīʿan
- جَمِيعًاۚ
- அனைவரையும்
- walaqad
- وَلَقَدْ
- திட்டமாக
- jāathum
- جَآءَتْهُمْ
- வந்தார்கள்/அவர்களிடம்
- rusulunā
- رُسُلُنَا
- நம் தூதர்கள்
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- அத்தாட்சிகளுடன்
- thumma
- ثُمَّ
- பிறகு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- kathīran
- كَثِيرًا
- அதிகமானவர்கள்
- min'hum
- مِّنْهُم
- அவர்களில்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- அதன் பின்னர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- lamus'rifūna
- لَمُسْرِفُونَ
- வரம்புமீறுகிறார்கள்
இதன் காரணமாகவே "எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். அன்றி, எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்" என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். அன்றி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே நடந்து வந்தனர். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௨)Tafseer
اِنَّمَا جَزٰۤؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْٓا اَوْ يُصَلَّبُوْٓا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِۗ ذٰلِكَ لَهُمْ خِزْيٌ فِى الدُّنْيَا وَلَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ٣٣
- innamā jazāu
- إِنَّمَا جَزَٰٓؤُا۟
- தண்டனையெல்லாம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- yuḥāribūna
- يُحَارِبُونَ
- போரிடுவார்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- இன்னும் அவனுடைய தூதர்
- wayasʿawna
- وَيَسْعَوْنَ
- இன்னும் முயற்சிக்கின்றனர்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fasādan
- فَسَادًا
- குழப்பம் செய்ய
- an yuqattalū
- أَن يُقَتَّلُوٓا۟
- அவர்கள் கொல்லப்படுவது
- aw
- أَوْ
- அல்லது
- yuṣallabū
- يُصَلَّبُوٓا۟
- அவர்கள் சிலுவையில் அறையப்படுவது
- aw
- أَوْ
- அல்லது
- tuqaṭṭaʿa
- تُقَطَّعَ
- வெட்டப்படுவது
- aydīhim
- أَيْدِيهِمْ
- அவர்களின் கரங்கள்
- wa-arjuluhum
- وَأَرْجُلُهُم
- இன்னும் அவர்களின் கால்கள்
- min khilāfin
- مِّنْ خِلَٰفٍ
- மாற்றமாக
- aw
- أَوْ
- அல்லது
- yunfaw
- يُنفَوْا۟
- அவர்கள் கடத்தப்படுவது
- mina l-arḍi
- مِنَ ٱلْأَرْضِۚ
- இருந்து/நாடு
- dhālika
- ذَٰلِكَ
- இது
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- khiz'yun
- خِزْىٌ
- இழிவு
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَاۖ
- இவ்வுலகத்தில்
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- fī l-ākhirati
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- ʿaẓīmun
- عَظِيمٌ
- பெரியது
எவர்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் தொடுத்தும், பூமியில் விஷமம் செய்துகொண்டும் திரிகின்றார்களோ, அவர்களுக்குரிய தண்டனை (அவர்களை) கொன்று விடுவது அல்லது சிலுவையில் அறைவது அல்லது மாறு கை(கள், மாறு) கால்களைத் துண்டிப்பது அல்லது (கைது செய்வது அல்லது) நாடு கடத்தி விடுவதுதான். இது இம்மையில் அவர்களுக்கு இழிவு (தரும் தண்டனை) ஆகும். அன்றி, மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்குண்டு. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௩)Tafseer
اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ࣖ ٣٤
- illā
- إِلَّا
- தவிர
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- tābū
- تَابُوا۟
- (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள்
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an taqdirū
- أَن تَقْدِرُوا۟
- நீங்கள் ஆற்றல்பெறுவது
- ʿalayhim
- عَلَيْهِمْۖ
- அவர்கள் மீது
- fa-iʿ'lamū
- فَٱعْلَمُوٓا۟
- ஆகவே அறிந்துகொள்ளுங்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
எனினும், அவர்கள் மீது நீங்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்னதாகவே அவர்களில் எவரும் கைசேதப்பட்(டு, தங்கள் விஷமத்தில் இருந்து விலகிக் கொண்)டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிக மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௪)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْٓا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِيْ سَبِيْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ٣٥
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- ittaqū
- ٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-ib'taghū
- وَٱبْتَغُوٓا۟
- இன்னும் தேடுங்கள்
- ilayhi
- إِلَيْهِ
- அவனளவில்
- l-wasīlata
- ٱلْوَسِيلَةَ
- நன்மையை
- wajāhidū
- وَجَٰهِدُوا۟
- இன்னும் போரிடுங்கள்
- fī sabīlihi
- فِى سَبِيلِهِۦ
- அவனுடைய பாதையில்
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நீங்கள் வெற்றியடைவதற்காக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௫)Tafseer
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِيَفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ ۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٣٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- எவர்கள்/ நிராகரித்தார்கள்
- law anna lahum
- لَوْ أَنَّ لَهُم
- நிச்சயமாக அவர்களுக்கு இருந்தால்
- mā
- مَّا
- எவை
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- இப்பூமியில்
- jamīʿan
- جَمِيعًا
- அனைத்தும்
- wamith'lahu
- وَمِثْلَهُۥ
- இன்னும் அவை போன்றது
- maʿahu
- مَعَهُۥ
- அத்துடன்
- liyaftadū
- لِيَفْتَدُوا۟
- அவர்கள் பினை கொடுப்பதற்காக
- bihi
- بِهِۦ
- அதைக் கொண்டு
- min
- مِنْ
- இருந்து
- ʿadhābi
- عَذَابِ
- வேதனை
- yawmi l-qiyāmati
- يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளின்
- mā tuqubbila
- مَا تُقُبِّلَ
- அங்கீகரிக்கப்படாது
- min'hum
- مِنْهُمْۖ
- அவர்களிடமிருந்து
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- alīmun
- أَلِيمٌ
- துன்புறுத்தக் கூடியது
நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு இப்பூமியில் உள்ள அனைத்தும், அத்துடன் அதைப்போன்ற ஒரு பாகமும் (சொந்தமாக) இருந்து, அவர்கள் இவை யாவையும் (தாம்) மறுமை நாளில் படும் வேதனைக்குப் பிரதியாகக் கொடுத்தாலும் அவர் களிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. பின்னும் அவர் களுக்குத் துன்புறுத்தும் வேதனையே கிடைக்கும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௬)Tafseer
يُرِيْدُوْنَ اَنْ يَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْهَا ۖوَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ ٣٧
- yurīdūna
- يُرِيدُونَ
- நாடுவார்கள்
- an yakhrujū
- أَن يَخْرُجُوا۟
- அவர்கள் வெளியேற
- mina
- مِنَ
- இருந்து
- l-nāri
- ٱلنَّارِ
- நரகம்
- wamā
- وَمَا
- இல்லை
- hum
- هُم
- அவர்கள்
- bikhārijīna
- بِخَٰرِجِينَ
- வெளியேறுபவர்களாக
- min'hā
- مِنْهَاۖ
- அதிலிருந்து
- walahum
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு
- ʿadhābun
- عَذَابٌ
- வேதனை
- muqīmun
- مُّقِيمٌ
- நிலையானது
அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறவே விரும்புவார்கள். எனினும், அதிலிருந்து வெளியேற அவர்களால் (முடியவே) முடியாது. அன்றி, அவர்களுடைய வேதனை (என்றென்றுமே) நிலைத்திருக்கும். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௭)Tafseer
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْٓا اَيْدِيَهُمَا جَزَاۤءًۢ بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ۗوَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ ٣٨
- wal-sāriqu
- وَٱلسَّارِقُ
- திருடன்
- wal-sāriqatu
- وَٱلسَّارِقَةُ
- இன்னும் திருடி
- fa-iq'ṭaʿū
- فَٱقْطَعُوٓا۟
- வெட்டுங்கள்
- aydiyahumā
- أَيْدِيَهُمَا
- அவ்விருவரின் கரங்களை
- jazāan
- جَزَآءًۢ
- கூலியாக
- bimā kasabā
- بِمَا كَسَبَا
- அவ்விருவர் செய்ததன் காரணமாக
- nakālan
- نَكَٰلًا
- தண்டனையாக
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِۗ
- அல்லாஹ்விடமிருந்து
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿazīzun
- عَزِيزٌ
- மிகைத்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௮)Tafseer
فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِ ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ٣٩
- faman
- فَمَن
- எவர்
- tāba
- تَابَ
- திருந்தி திரும்பினார்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- ẓul'mihi
- ظُلْمِهِۦ
- தன் தீமை
- wa-aṣlaḥa
- وَأَصْلَحَ
- இன்னும் திருத்திக் கொண்டார்
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- yatūbu
- يَتُوبُ
- பிழை பொறுப்பான்
- ʿalayhi
- عَلَيْهِۗ
- அவர் மீது
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
எவரேனும் தன்னுடைய (இத்) தீயச் செயலுக்குப் பின்னர் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௩௯)Tafseer
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ يُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ وَيَغْفِرُ لِمَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٤٠
- alam taʿlam
- أَلَمْ تَعْلَمْ
- நீர் அறியவில்லையா?
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lahu
- لَهُۥ
- அவனுக்குரியதே
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியின்
- yuʿadhibu
- يُعَذِّبُ
- வேதனை செய்வான்
- man
- مَن
- எவரை
- yashāu
- يَشَآءُ
- நாடுகிறான்
- wayaghfiru
- وَيَغْفِرُ
- இன்னும் மன்னிப்பான்
- liman
- لِمَن
- எவரை
- yashāu
- يَشَآءُۗ
- நாடுகிறான்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்கள் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
(நபியே!) நிச்சயமாக வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீங்கள் அறியவில்லையா? ஆகவே, அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அவன் விரும்பியவர்களுக்கு மன்னிப்பளிப்பான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௪௦)Tafseer