குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௧
Qur'an Surah Al-Ma'idah Verse 31
ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَبَعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِى الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِيْ سَوْءَةَ اَخِيْهِ ۗ قَالَ يٰوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِيَ سَوْءَةَ اَخِيْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَ ۛ (المائدة : ٥)
- fabaʿatha
- فَبَعَثَ
- Then (was) sent
- ஆகவே அனுப்பினான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- ghurāban
- غُرَابًا
- a crow
- ஒரு காகத்தை
- yabḥathu
- يَبْحَثُ
- it (was) scratching
- தோண்டுகிறது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- liyuriyahu
- لِيُرِيَهُۥ
- to show him
- காட்டுவதற்காக/ அவனுக்கு
- kayfa
- كَيْفَ
- how
- எவ்வாறு
- yuwārī
- يُوَٰرِى
- to hide
- மறைப்பான்
- sawata
- سَوْءَةَ
- (the) dead body
- சடலத்தை
- akhīhi
- أَخِيهِۚ
- (of) his brother
- தன் சகோதரனின்
- qāla
- قَالَ
- He said
- கூறினான்
- yāwaylatā
- يَٰوَيْلَتَىٰٓ
- "Woe to me!
- என் நாசமே
- aʿajaztu
- أَعَجَزْتُ
- Am I unable
- இயலாமலாகி விட்டேனா?
- an akūna
- أَنْ أَكُونَ
- that I can be
- நான் ஆக
- mith'la
- مِثْلَ
- like
- போன்று
- hādhā
- هَٰذَا
- this
- இந்த
- l-ghurābi
- ٱلْغُرَابِ
- [the] crow
- காகம்
- fa-uwāriya
- فَأُوَٰرِىَ
- and hide
- மறைத்திருப்பேனே
- sawata
- سَوْءَةَ
- (the) dead body
- சடலத்தை
- akhī
- أَخِىۖ
- (of) my brother?"
- என் சகோதரனின்
- fa-aṣbaḥa
- فَأَصْبَحَ
- Then he became
- ஆகிவிட்டான்
- mina l-nādimīna
- مِنَ ٱلنَّٰدِمِينَ
- of the regretful
- துக்கப்படுபவர்களில்
Transliteration:
Faba'asal laahu ghuraabai yabhasu fil ardi liyuriyahoo kaifa yuwaaree sawata akheeh; qaala yaa wailataaa a'ajaztu an akoona misla haazal ghuraabi fa uwaariya saw ata akhee fa asbaha minan naadimeen(QS. al-Māʾidah:31)
English Sahih International:
Then Allah sent a crow searching [i.e., scratching] in the ground to show him how to hide the disgrace of his brother. He said, "O woe to me! Have I failed to be like this crow and hide the disgrace [i.e., body] of my brother?" And he became of the regretful. (QS. Al-Ma'idah, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பி வைத்தான். அது (அவருடைய சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காண்பிப்பதற் காகப்) பூமியைத் தோண்டிற்று. (இதனைக் கண்ட) அவர் "அந்தோ! இந்தக் காகத்தைப்போல் (சொற்ப அறிவுடையவனாக) நான் இருந்தாலும் என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேனே! (அதுவும்) என்னால் முடியாமல் போய்விட்டதே!" என்று (அழுது) கூறித் துக்கத்தில் ஆழ்ந்து விட்டார். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௧)
Jan Trust Foundation
பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக பூமியில் தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன் என் நாசமே! இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக இயலாமலாகிவிட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறி துக்கப்படுபவர்களில் ஆகிவிட்டான்.