குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௧
Qur'an Surah An-Nisa Verse 91
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَتَجِدُوْنَ اٰخَرِيْنَ يُرِيْدُوْنَ اَنْ يَّأْمَنُوْكُمْ وَيَأْمَنُوْا قَوْمَهُمْ ۗ كُلَّ مَا رُدُّوْٓا اِلَى الْفِتْنَةِ اُرْكِسُوْا فِيْهَا ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْكُمْ وَيُلْقُوْٓا اِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوْٓا اَيْدِيَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ ۗ وَاُولٰۤىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطٰنًا مُّبِيْنًا ࣖ (النساء : ٤)
- satajidūna
- سَتَجِدُونَ
- You will find
- காண்பீர்கள்
- ākharīna
- ءَاخَرِينَ
- others
- மற்றவர்களை
- yurīdūna
- يُرِيدُونَ
- wishing
- நாடுகிறார்கள்
- an
- أَن
- that
- அவர்கள் பாதுகாப்புப்பெறவும்
- yamanūkum
- يَأْمَنُوكُمْ
- they be secure from you
- அவர்கள் பாதுகாப்புப்பெறவும் உங்களிடம்
- wayamanū
- وَيَأْمَنُوا۟
- and they be secure from
- அல்லது பாதுகாப்புப்பெறவும்
- qawmahum
- قَوْمَهُمْ
- their people
- தங்கள் சமுதாயத்திடம்
- kulla mā
- كُلَّ مَا
- Everytime that
- எல்லாம்
- ruddū
- رُدُّوٓا۟
- they are returned
- திருப்பப்பட்டார்கள்
- ilā l-fit'nati
- إِلَى ٱلْفِتْنَةِ
- to the temptation
- குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)
- ur'kisū
- أُرْكِسُوا۟
- they are plunged
- குப்புற விழுந்து விடுகிறார்கள்
- fīhā fa-in lam
- فِيهَاۚ فَإِن لَّمْ
- into it So if not
- அதில்/அவர்கள் விலகவில்லையென்றால்
- yaʿtazilūkum
- يَعْتَزِلُوكُمْ
- they withdraw from you
- அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் உங்களை
- wayul'qū
- وَيُلْقُوٓا۟
- and offer
- இன்னும் சமர்ப்பிக்காமல்
- ilaykumu
- إِلَيْكُمُ
- to you
- உங்கள் முன்
- l-salama
- ٱلسَّلَمَ
- [the] peace
- சமாதானத்தை
- wayakuffū
- وَيَكُفُّوٓا۟
- and they restrain
- இன்னும் அவர்கள் தடுக்காமல்
- aydiyahum
- أَيْدِيَهُمْ
- their hands
- தங்கள் கைகளை
- fakhudhūhum
- فَخُذُوهُمْ
- then seize them
- பிடியுங்கள் இவர்களை
- wa-uq'tulūhum
- وَٱقْتُلُوهُمْ
- and kill them
- இன்னும் கொல்லுங்கள் அவர்களை
- ḥaythu
- حَيْثُ
- wherever
- எங்கெல்லாம்
- thaqif'tumūhum wa-ulāikum
- ثَقِفْتُمُوهُمْۚ وَأُو۟لَٰٓئِكُمْ
- you find them And those
- பெறுகிறீர்கள் அவர்கள்/இவர்கள்
- jaʿalnā
- جَعَلْنَا
- We made
- ஆக்கி விட்டோம்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- ʿalayhim
- عَلَيْهِمْ
- against them
- அவர்களுக்கு எதிராக
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- an authority
- ஆதாரத்தை
- mubīnan
- مُّبِينًا
- clear
- தெளிவானது
Transliteration:
Satajidoona aakhareena yureedoona ai yaamanookum wa yaamanoo qawmahum kullamaa ruddooo ilal itnati urkisoo feehaa; fa il lam ya'tazilookum wa yulqooo ilai kumus salama wa yakuffooo aidiyahum fakhuzoohum waqtuloohum haisu saqif tumoohum; wa ulaaa'ikum ja'alnaa lakum 'alaihim sultaanam mubeenaa(QS. an-Nisāʾ:91)
English Sahih International:
You will find others who wish to obtain security from you and [to] obtain security from their people. Every time they are returned to [the influence of] disbelief, they fall back into it. So if they do not withdraw from you or offer you peace or restrain their hands, then seize them and kill them wherever you overtake them. And those – We have made for you against them a clear authorization. (QS. An-Nisa, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக் கொள்வதுடன் (உங்களுடைய எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், யாதொரு விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இத்தகையவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்டவிடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இத்தகையவர்களுடன் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௧)
Jan Trust Foundation
வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (தீங்கிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை ஆக்கிவிட்டோம்.