Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௬

Qur'an Surah An-Nisa Verse 86

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَآ اَوْ رُدُّوْهَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَيْءٍ حَسِيْبًا (النساء : ٤)

wa-idhā ḥuyyītum
وَإِذَا حُيِّيتُم
And when you are greeted
உங்களுக்கு முகமன் கூறப்பட்டால்
bitaḥiyyatin
بِتَحِيَّةٍ
with a greeting
ஒரு முகமனைக் கொண்டு
faḥayyū
فَحَيُّوا۟
then greet
முகமன் கூறுங்கள்
bi-aḥsana
بِأَحْسَنَ
with better
மிக அழகியதைக்கொண்டு
min'hā
مِنْهَآ
than it
அதைவிட
aw
أَوْ
or
அல்லது
ruddūhā
رُدُّوهَآۗ
return it
திரும்பக் கூறுங்கள்/அதையே
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கிறான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றின் மீது
ḥasīban
حَسِيبًا
an Accountant
பாதுகாவலனாக

Transliteration:

Wa izaa huyyeetum bitahiy yatin fahaiyoo bi ahsana minhaaa aw ruddoohaa; innal laaha kaana 'alaa kulli shai'in Haseeba (QS. an-Nisāʾ:86)

English Sahih International:

And when you are greeted with a greeting, greet [in return] with one better than it or [at least] return it [in a like manner]. Indeed Allah is ever, over all things, an Accountant. (QS. An-Nisa, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

(எவரேனும்) உங்களுக்கு "ஸலாம்" கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮௬)

Jan Trust Foundation

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதைக் கொண்டு முகமன் கூறுங்கள். அல்லது அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பாதுகாவலனாக இருக்கிறான்.