குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭
Qur'an Surah An-Nisa Verse 7
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَۖ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ۗ نَصِيْبًا مَّفْرُوْضًا (النساء : ٤)
- lilrrijāli
- لِّلرِّجَالِ
- For the men
- ஆண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- a portion
- ஒரு பாகம்
- mimmā taraka
- مِّمَّا تَرَكَ
- of what (is) left
- எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- (by) the parents
- பெற்றோர்
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَ
- and the near relatives
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- walilnnisāi
- وَلِلنِّسَآءِ
- and for the women
- இன்னும் பெண்களுக்கு
- naṣībun
- نَصِيبٌ
- a portion
- ஒரு பாகம்
- mimmā taraka
- مِّمَّا تَرَكَ
- of what (is) left
- எதிலிருந்து/ விட்டுச் சென்றார்
- l-wālidāni
- ٱلْوَٰلِدَانِ
- (by) parents
- பெற்றோர்
- wal-aqrabūna
- وَٱلْأَقْرَبُونَ
- and the near relatives
- இன்னும் நெருங்கிய உறவினர்கள்
- mimmā qalla
- مِمَّا قَلَّ
- of what (is) little
- எதிலிருந்து/குறைந்தது
- min'hu
- مِنْهُ
- of it
- அதில்
- aw
- أَوْ
- or
- அல்லது
- kathura
- كَثُرَۚ
- much -
- அதிகமானது
- naṣīban
- نَصِيبًا
- a portion
- பாகமாக
- mafrūḍan
- مَّفْرُوضًا
- obligatory
- கடமையாக்கப்பட்டது
Transliteration:
Lirrijaali naseebum mimmaa tarakal waalidaani wal aqraboona wa lin nisaaa'i naseebum mimmaa tarakal waalidaani wal aqraboona mimmaa qalla minhu aw kasur; naseebam mafroodaa(QS. an-Nisāʾ:7)
English Sahih International:
For men is a share of what the parents and close relatives leave, and for women is a share of what the parents and close relatives leave, be it little or much – an obligatory share. (QS. An-Nisa, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வாறே) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭)
Jan Trust Foundation
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு ஒரு பாகமுண்டு. இன்னும் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து, அது குறைந்திருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும் அதில் கடமையாக்கப்பட்ட பாகமாக பெண்களுக்கு ஒரு பாகமுண்டு.